தமிழ்நாடு முழுவதும் அங்கிங்கெனாதபடி சிறப்பாகக் கொண்டாடப்பட்ட தந்தை பெரியார் பிறந்த நாள் - சமூகநீதி நாள் விழா! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 7, 2021

தமிழ்நாடு முழுவதும் அங்கிங்கெனாதபடி சிறப்பாகக் கொண்டாடப்பட்ட தந்தை பெரியார் பிறந்த நாள் - சமூகநீதி நாள் விழா!

சென்னை, அக்.7 பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் 143 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா - சமூகநீதி நாள் விழா அங்கிங்கெனாதபடி  சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

அதன் விவரம் வருமாறு:

திருவள்ளூர் மாவட்டம்- மேல்நல்லாத்தூர்பெரியார் பிறந்தநாள்

திருவள்ளூர் மாவட்டம்  கடம்பத்தூர் ஒன்றியம் மேல்நல்லாத்தூர் கிராமத்தில்  செப்டம்பர் 17 அன்று  அனைத்து முற்போக்கு கட்சிகளின் கூட்டமைப்பின் சார்பில் அறிவுலக ஆசான் தந்தை பெரியார் அவர்களின் 143 ஆம்  ஆண்டு பிறந்தநாள் தமிழ்நாடு அரசு அறிவிப்பின்படி சமூகநீதி நாளாக கொண்டாடப்பட்டது. அது சமயம் தந்தை பெரியாரின் அலங்கரிக்கப்பட்ட திருவுருவப் படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு, பொதுமக்களுக்கு  இனிப்புகள் வழங்கப்பட்டது.

 இந்நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும் சமூக நீதி நாள் உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்.

 இந்நிகழ்வில் கலந்துகொண்டவர்கள்

 இரா.ஸ்டாலின் (திராவிடர் கழகம், திருவள்ளூர் மாவட்ட இணை செயலாளர்) டில்லி பாபு (திராவிடர் கழகம் கடம்பத்தூர் ஒன்றிய செயலாளர்) மணவாளன் (காங்கிரஸ் கட்சி) சசிக்குமார் (காங்கிரஸ் கட்சி) சரவணன்  (கம்யூனிஸ்ட் கட்சி) மோகனா  (கம்யூனிஸ்ட் கட்சி ) சண்முகம் (கம்யூனிஸ்ட் கட்சி),  சுமதி  (தி.மு.) யோகா (விடுதலைச் சிறுத்தைகள் கட்சி திருவள்ளூர் தொகுதி செயலாளர்), மாயக் கிருஷ்ணன் (வழக்குரைஞர்) மறுதோன்றியன் (சமூக ஆர்வலர்) அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் முதல் முறையாக பகுத்தறிவுப் பேராசான் தந்தை பெரியாரின்  143ஆவது பிறந்த நாள் கொண்டாட்டம் நடைபெற்றது.  17.09.2021 அன்று  ஜிப்மர் மருத்துவமனையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி,  ஜிப்மர் வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

நிகழ்ச்சியின் ஏற்பாட்டினை ஜிப்மர் மருத்துவமனையில் பணிபுரியும், பகுத்தறிவாளர் கழகத் தோழர் வி. இளவரசி சங்கர் அவர்கள் செய்திருந்தார்கள். நிகழ்ச்சியில் புதுச்சேரி மாநில திராவிடர் கழகத்தின் தலைவர் சிவவீரமணி,  புதுச்சேரி பகுத்தறிவாளர் கழகத்தின் தலைவர்  நெ.நடராசன் அவர்கள், புதுச்சேரி விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சார்ந்த திரு அய். திருவரசன், ஜிப்மர் மருத்துவமனை எஸ்.சி., எஸ்.டி. நலச் சங்கத்தின் பொதுச்செயலாளர் பரமசிவம் மற்றும் பொருளாளர் விநாயகமூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.

கோட்ட மங்கலம் சமத்துவபுரம்

தாராபுரம் கழக மாவட்டம் குடிமங்கலம் ஒன்றியம் கோட்ட மங்கலத்தில் உள்ள. தந்தை பெரியார் நினைவு  சமத்துவபுரத்தில் தந்தை பெரியார் அவர்களின் 143 ஆவது பிறந்த நாள் விழா அய்யா சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது.

குமரலிங்கம்

தாராபுரம் கழக மாவட்டம் மடத்துக்குளம் ஒன்றியம் குமரலிங்கத்தில் தந்தை பெரியார் அவர்களின் 143ஆவது பிறந்தநாள் விழாவை கழக கொடியேற்றி இனிப்பு வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது

மடத்துக்குளம்

தாராபுரம் கழக மாவட்டம் மடத்துக்குளம் ஒன்றியம் மடத்துக்குளத்தில் திராவிட முன் னேற்றக் கழக மடத்துக்குளம் ஒன்றிய அலுவலகத்தில் திருப்பூர் தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளர் மானமிகு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இரா.ஜெய ராமகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்களின் 143ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தந்தை பெரியார் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கி மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது

கொழுமம்

தாராபுரம் கழக மாவட்டம் மடத்துக்குளம் ஒன்றியம் கொழுமம் தந்தை பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் தந்தை பெரியார் அவர்களின் 134 வது பிறந்த நாள் விழா அய்யா சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது

துங்காவி

தாராபுரம் கழக மாவட்டம் மடத்துக்குளம் ஒன்றியம் துங்காவி யில் அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்களின் 143ஆவது பிறந்தநாள் விழா கொடியேற்றி இனிப்பு வழங்கி மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது

கணியூர்

தாராபுரம் கழக மாவட்டம் மடத்துக்குளம் ஒன்றியம் கணியூர் மதியழகன் நகரில் தந்தை பெரியார் அவர்கள் 143 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கழகக் கொடியை இனிப்பு சிறப்பாக கொண்டாடப்பட்டது

பாலப்பம்பட்டி

தாராபுரம் கழக மாவட்டம் உடுமலை ஒன்றியம் பாலப்பம்பட்டியில்  உள்ள சமத்துவபுரத்தில் அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்களின் 143 ஆவது பிறந்த நாள் விழா அய்யா சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கி இந்த சிறப்பாக கொண்டாடப்பட்டது

பட்டுக்கோட்டை

பட்டுக்கோட்டையில் தந்தை பெரியாரின்-143 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு திராவிடர் கழகம் உள்ளிட்ட அனைத்து கட்சியினரும் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரி யாதை செலுத்தினர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.கஸ்டாலின் அறிவித்த செப்டம்பர் 17 சமூகநீதி நாள் உறுதிமொழியை அனைத்துக் கட்சியினரும் பெரியார் சிலை முன்பாக எடுத்துக்கொண்டனர்.

தஞ்சாவூர் பூபதி நினைவு பெரியார் படிப்பகம்

17.09.2021 சமூக நீதி  நாள் அன்று திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கே.கலைவாணன் அவர்கள்   தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தார்.

கழக மாவட்ட தலைவர்  வீ.மோகன் கழக கொடியினை ஏற்றி வைத்தார்.

கழக மாவட்ட துணைத்தலைவர் SSMK  .அருண்காந்தி அவர்கள் சமூக நீதி நாள் உறுதிமொழி முழங்க கூடிஇருந்த அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

இந்நிகழ்வில் தி., தி.மு., .தி.மு., சி.பி,அய் , சி.பி.அய் (எம்), வி.சி., காங்கிரஸ், மக்கள் அதிகாரம், மே-17 உள்ளிட்ட அமைப்புகளின் பொறுப்பாளர்களும், தோழர்களும் மற்றும் ஏராளமான பெரியாரிய தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

மதுரை மீனாட்சி மகளிர் அரசு கலைக்கல்லூரி

மதுரை மீனாட்சி மகளிர் அரசு கலைக்கல்லூரியில் தந்தை பெரியார் பிறந்த தின விழா 17.09.2021 அன்று சமூகநீதி நாள் விழாவாகக்  கொண்டாடப்பட்டது நிகழ்ச்சிக்கு கல்லூரியின் முதல்வர்  கு.வானதி அவர்கள் தலைமை தாங்கி தந்தை பெரியாரின் சிறப்புக்களை அழுத்தமாக எடுத்துரைத்தார்.

தமிழ்த்துறைத் தலைவர்  து.விசயராணி அவர்கள் தனது  வரவேற்புரையில் தந்தை பெரியார் வாழ்வில் நடந்த பல வரலாற்று நிகழ்வுகளை விரிவாக எடுத்துச் சொல்லி உரையாற்றினார்கள். தமிழ்த்துறைப் பேராசிரியர்கள்,  மாணவிகள் அனைவரும் முதலில் சமூகநீதி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

 பின்னர் முதுகலை தமிழ் இரண்டாம் ஆண்டு மாணவி  சி.பிருந்தா 'பெரியாரின் பெண்ணியச் சிந்தனைகள்' என்ற தலைப்பிலும், மாணவி .பிரித்திகா 'பெரியாரின் சமூக நீதி' என்ற தலைப்பிலும் உரையாற்றினர் மாணவி .சந்தியா 'விடிவெள்ளி பெரியார்' என்ற தலைப்பில் ஒரு அருமையான கவிதையை வாசித்தார்.

மாணவி .தாமரை பெரியாரின் கதை என்ற தலைப்பில் பெரியாரின்வாழ்க்கைக் குறிப்புக்களை கதை வடிவில் எடுத்துரைத்தார். அமெரிக்காவில் வசிக்கும் பெரியார் பன்னாட்டு அமைப்பின் தலைவர் டாக்டர் சோம.இளங்கோவன் அவர்களின் வழிகாட்டுதலில் ,அமெரிக்காவில் வசிக்கும் தோழர் இளமாறன் அவர்கள் மூலமாக நன்செய் பதிப்பகத்தின் சார்பாக அச்சிடப்பட்ட,500 புத்தகங்கள்,'பெண் ஏன் அடிமையானாள் ' என்னும் புத்தகம் மதுரை மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் மாநிலத் தலைவர் முனைவர் வா.நேரு அவர்கள் "பெண் ஏன் அடிமையானாள்?" என்னும்  தந்தை பெரியார் அவர்கள் எழுதிய  500 நூல்களை முதல்வர் அவர்களுக்கும், பேராசிரியர்கள்,கல்லூரி ஊழியர்கள், மாணவிகளுக்கு வழங்கி, தந்தை பெரியாரின் பிறந்த நாளை சமூக நீதி நாள் என்று அறிவித்திருக்கும் தமிழ் நாட்டின் முதலமைச்சர் மு..ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவித்தும்,சமூக நீதி ஏன் தேவை என்பது பற்றியும், தந்தை பெரியார் 1929 (முதல்) சுயமரியாதை மாநாட்டிலேயே பெண்கள் காவல்துறையில், இராணுவத்தில் எடுக்கப்படவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி யதையும், போட்டித் தேர்வுகளில் மாணவிகள் பங்குபெற்று, வெற்றி பெற்று, வெற்றியாளர்களாக கல்லூரிக்கு வந்து உரையாற்ற வேண்டும். அதுவே தந்தை பெரியாரின் கனவு என்பதையும், பெண் ஏன் அடிமையானாள் என்னும் புத்தகத்தின் சிறப்புகளையும் குறிப்பிட்டு   சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சிக்கு தமிழ்த் துறைப் பேராசிரியர் யாழ். சந்திரா அவர்கள் நன்றியுரையாற்ற  விழா இனிதே முடிந்தது. மாணவ-மாணவிகள் மிக ஆர்வத்தோடு பேசியது மிகச் சிறப்பாக இருந்தது.

பார்வையாளர்களான மாணவிகள் மிகுந்த உற்சாகத்துடன் உரைகளைக் கேட்டு மகிழ்ந்தனர். 

திராவிடர் கழகத்தின் மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் கவிஞர் சுப.முருகானந்தம், கழக தோழர் நாகமலை புதுக்கோட்டை பொறியாளர் ராமச்சந்திரன் மற்றும் அவருடைய துணைவியார் முனைவர் பட்ட ஆய்வாளர் இராஜப்பிரியா ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

ஆத்தூர்

செப்டம்பர் 17 தந்தை பெரியாரின் பிறந்தநாளை சமுக நீதி நாளாக ஆத்தூர் திராவிடர் கழகத்தின் சார்பாக கொண்டாட பெற்றது .

இந்நிகழ்வில் மாவட்ட தலைவர் .வானவில் தலைமை வகித்தார் .கழக கொடியை மாவட்ட செயலாளர் நீ சேகர் ஏற்றி வைத்தார்.

பெரியார் சிலைக்கு  மாவட்ட தலைவர் .வானவில் திமுக நகர செயலாளர் பாலசுப்பிரமணியம் திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கு .சின்னதுரை மற்றும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெய்சங்கர் ஆகியோர்கள் மாலை அணிவித்து சிறப்பு செய்தனர் .

 தலைவாசல் ஒன்றிய செயலாளர் மணி என்ற பழனிசாமி  காங்கிரஸ் கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் ஒசுமணி மதிமுக மாவட்ட செயலாளர் கோபால் ராசு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செய்தி தொடர்பாளர் நாராயணன், சிபிஎம் ஈஆர்கே ராமகிருட்டிணன், தமிழக வாழ்வுரிமை கட்சி மாநில பொறுப்பாளர் செம்முகில், தமிழ் புலிகள் இயக்கத்தை சேர்ந்த பொறுப்பாளர்கள் மற்றும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெய்சங்கர், அதிமுக நகர செயலாளர் மோகன், திராவிடர் கழகத்தின் மண்டல செயலாளர்   விடுதலை சந்திரன், மாநில இளைஞரணி துணை செயலாளர் சுரேஷ், நகர தலைவர் வெ . அண்ணாதுரை, நகர செயலாளர் திவாகர், பெரியார் அறக்கட்டளை தலைவர் ஆறுமுகம், பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் .முருகானந்தம், மாவட்ட செயலாளர் .அறிவு செல்வம் . மாவட்ட துணை தலைவர் கா .பெரியசாமி,  பெரியார் பெருந் தொண்டர் தங்கவேல், தலைவாசல் பெரியார் பெருந் தொண்டர் பெ. சோமசுந்தரம், மண்டல இளைஞரணி செயலாளர் கூட.செல்வம், மாவட்ட இளைஞரணி செயலாளர் தோழர் வேல் முருகன்  அதுபோல் திராவிடர் கழக தோழர்கள் அனைவரும் வருகை தந்தனர். புதிய திராவிடர் கழக மாணவர் கழகத் தோழர்கள் என ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கி சிறப்பு செய்தனர் .

 ஈரோடு

தந்தை பெரியார் அவர்களின் 143 ஆவது பிறந்த நாள் விழா சமூக நீதி நாளாக ஈரோட்டில் திராவிட கழக தோழர்களுடன் பொது மக்கள் சார்பில் மிகுந்த எழுச்சியுடன் கொண்டப்பட்டது.

கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு .சண்முகம் தலைமையில் தந்தை பெரியார் அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து சமூக நீதி நாள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

 இந் நிகழ்ச்சியில் ஈரோடு கழக மாவட்ட தலைவர் கு.சிற்றரசு,  மாவட்ட செயலாளர் மா.மணிமாறன், மாவட்ட கழக அமைப்பாளர் கு.சண்முகம், மண்டல திராவிடர் கழக செயலாளர் பெ.இராஜ மாணிக்கம், கோ.பாலகிருஷ்ணன், மாநகர தலைவர் .சிவராமன், மாநகர செயலாளர் வீ.தேவராஜ்,மாநில இளைஞரணி துணைச் செயலாளர் தே.காமராஜ், மண்டல இளைஞரணி செயலாளர் சா.ஜெபராஜ் செல்லத்துரை, பொதுக்குழு உறுப்பினர்கள் இரா.நற்குணன், கார்த்திக் ராம்கண்,செ‌.பிரகாசன், பெரியார் படிப்பக வாசகர் வட்ட தலைவர் பி‌‌என்.எம்.பெரியசாமி, பெருந்துறை ஒன்றிய தலைவர் து.‌நல்லசிவம், திராவிட இயக்க தமிழர் பேரவை மாவட்ட தலைவர் சேகர், மாவட்ட செயலாளர் ‌.தமிழ்குமரன், திராவிடர் பேரவை நிறுவனத் தலைவர் மாசிலாமணி அம்மையார், மற்றும் திமுக மாவட்ட துணைச் செயலாளர் செந்தில் குமார் உள்ளிட்ட அனைத்து கட்சியினரும் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து சமூக நீதி நாள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

 தமிழ்நாடு அரசின் சார்பில் மாவட்ட ஆட்சியர் பெரியார் அண்ணா நினைவகத்தில் உள்ள தந்தை பெரியார் அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

புழல் மற்றும் சோழவரம்

புழல் மற்றும் சோழவரம் ஒன்றிய திராவிடர் கழகம் சார்பாக அறிவுலக ஆசான் தந்தை பெரியாரின் 143ஆவது பிறந்தநாளை சமூகநீதி நாளாக கொண்டாடப்பட்டது,

இதில் கும்மிடிப்பூண்டி மாவட்ட தலைவர் புழல் .ஆனந்தன் அவர்களின் தலைமையில் புழல் மத்திய சிறை எதிரில் உள்ள அய்யா அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து உறுதிமொழி ஏற்க்கப்பட்டது.

திமுக,மதிமுக,விசிக என முற்போக்கு இயக்கங்களும் இனைந்து பெரியார் வாழ்க! பகுத்தறிவு கொள்கை வாழ்க என அனைவரும் முழக்கமிட்டனர் அதனை தொடர்ந்து சோழவரம் மற்றும் புழல் ஒன்றியங்களை உள்ளடக்கிய செங்குன்றம்,வடகரை,சோழவரம், காவாங்கரை உள்ளிட்ட பல்வேறு இடத்தில் கழக கொடியை ஏற்றி மிக சிறப்பாக அய்யாவின் 143 ஆவது பிறந்தநாளில் உறுதிமொழி ஏற்கப்பட்டது, இறுதியாக சோழவரம் ஒன்றிய திராவிடர் கழக செயலாளர் பெருங்காவூர் சண்முகம் அவர்களின் வீட்டில் கழக கொடி மற்றும் பெரியார் படத்திற்க்கு மாலை அணிவிக்கப்பட்டது

குமரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் மாணவர்களுக்கு பரிசளிப்பு

குமரிமாவட்ட திராவிடர்கழகம் சார்பாக  நாகர்கோவில் பெரியார் மய்யத்தில் நடந்த பெரியார் பிறந்த  நாள் விழாவில் பெரியாரியல்   பயிற்சி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

பொருளாதார மேதை டாக்டர் பா. நடராஜன் நினைவாகவும் மாவட்ட திராவிடர்கழகம் சார்பாகவும் பரிசுகளை மாவட்ட தலைவர் மா.மு. சுப்பிரமணியம் தலைமைதாங்கி  வழங்கினார்.  மாவட்ட தி. செயலாளர் கோ.வெற்றி வேந்தன் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தார்.

மாவட்ட கழக மைப்பாளர் ஞா. பிரான்சிஸ், துணைத்தலைவர் .நல்லபெருமாள், துணைச் செயலர் சோ.பன்னீர்செல்வம், விசிக இளஞ்சிறுத்தை பொறுப்பாளர் குடந்தை தமிழினி, கழக பொதுக்குழு உறுப்பினர் மா.மணி, பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் .சிவதாணு, இலக்கிய அணி செயலாளர் பா. பொன்னுராசன், மாநகர அமைப்பாளர் ராஜகோபால், மாநகர துணைத்தலைவர் கவிஞர் எச்.  செய்க்முகமது  இளைஞரணி தலைவர் இராஜேஷ், சேகர், தொழிலாளரணி கருணாநிதி, மகேஷ், சியாமளா, பாலகிருஷ்னன், .தமிழ்மதி, சந்தோஷ், குளச்சல் பெலிக்ஸ்,.தமிழரசன்,.. மணி மேகலை, ஆறுமுகம், .செல்வராசு, குமரிச் செல்வன்,முத்துவைரவன், பி.கென்னடி, மாணவர்கள் அபிசா, தமிழரசி,கோகுல் மற்றும் பலரும் கலந்துகொண்டனர்.  பெரியாரியல் பயிற்சி வகுப்பில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

குடந்தை

தந்தை பெரியார் 143ஆவது பிறந்தநாள் விழா சமூகநீதி நாளாக 17-09-2021 காலை 10 மணிக்கு கும்பகோணம் பழைய பேருந்து நிலையம் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

திமுக தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் சு.கல்யாணசுந்தரம் தலைமையில்,மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர்  செ.இராமலிங்கம், கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக் கோட்டை  .அன்பழகன் முன்னிலையில் தலைமை அரசு கொறடா  கோவி.செழியன் சமூக நீதி நாள் உறுதி மொழி வாசித்தார்.

நிகழ்ச்சியில் சிபிஅய் மாவட்ட செயலாளர் மு..பாரதி, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சின்னை.பாண்டியன், மதிமுக மாவட்ட செயலாளர் இரா.முருகன்,விசிக மண்டல செயலாளர் சா.விவேகானந்தன், விசிக மாவட்ட செயலாளர் இரா.உறவழகன், நீலப்புலிகள் இயக்க தலைவர் .இளங்கோவன்,தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட செயலாளர் செல்வம், விடுதலை தமிழ் புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் தை.சேகர், காங்கிரஸ் நகர தலைவர் அய்யப்பன், தீண்டாமை ஒழிப்பு முண்ணணி நகர செயலாளர் பழ.அன்புமணி ஆகியோர்கள் அவர்களது கட்சி தோழர்களுடன் பெரும் திரளாக கலந்துகொண்டனர். வருகை தந்த அனைவரையும் குடந்தை மாவட்ட திக  தலைவர் கு.நிம்மதி வரவேற்றும், திமுக நகர செயலாளர் சுப.தமிழகன் நன்றியும் கூறினர். தஞ்சை மண்டல தி.. செயலாளர் .குருசாமி, நகர தலைவர் கு.கவுதமன், பக மாவட்ட தலைவர் ஆடிட்டர் சு.சண்முகம்,நகர செயலாளர் பீ.இரமேஷ்,மாவட்ட து.செயலாளர் .தமிழ்மணி,மாவட்ட இளைரணி தலைவர் .சிவக்குமார்,மாவட்ட மகளிரணி து.செயலாளர் மு.திரிபுரசுந்தரி, ஒன்றிய செயலாளர் கோவி.மகாலிங்கம், தோழர்கள் கொற்கை நாதன், மோகன், மரு.சக்திவேல், காமராஜ், அசூர் செல்வம்,மாநில மாணவர் கழக து.செயலாளர் .அஜிதன், செந்தமிழன் மற்றும் கழக தோழர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

  கோவை

கோவை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் தந்தை பெரியாரின் 143ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா சமூக நீதி நாளாக சிறப்பாக கொண்டாடப்பட்டது

தந்தை பெரியார் பிறந்த நாள் விழா கோவை மாவட்டத்தில் சுந்தராபுரம் பகுதியில் மாவட்ட தலைவர் .சந்திரசேகர் அவர்கள் தலைமையில் தந்தை பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து கழகக் கொடி ஏற்றி சமூக நீதி நாள் உறுதிமொழியை கழகத் தோழர்கள் ஏற்றுக்கொண்டனர்.

தொடர்ந்து ஆத்துப்பாலம் பகுதியில் தோழர் சூசைராஜ் அவர்கள் தலைமையில் தந்தை பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து கழகக் கொடி ஏற்றியும்,

சுண்ணாம்பு கால்வாய் பகுதியில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு வே. தமிழ்முரசு அவர்கள் தலைமையில் மாலை அணிவித்து கழக கொடி ஏற்றியும்,

குனியமுத்தூர் பகுதியில் மாவட்ட அமைப்பாளர் மு.தமிழ்ச்செல்வம் அவர்கள் தலைமையில் தந்தை பெரியாரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து கழக கொடி ஏற்றியும்,

புலியகுளம் பகுதியில் தந்தை பெரியாரின் சிலைக்கு மாநகர தலைவர் .வீரமணி தலைமையில் மாலை அணிவித்து கழக கொடி ஏற்றியும், வெள்ளலூர் பகுதியில் உள்ள தந்தை பெரியாரின் சிலைக்கு மண்டல இளைஞரணி செயலாளர் .பிரபாகரன் அவர்கள் தலைமையில் பறையிசை முழங்க மாலை அணிவித்து கழகக் கொடி ஏற்றியும்,

வெள்ளலூர் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் மாவட்ட துணைத்தலைவர் காளிமுத்து தலைமையில் தந்தை பெரியாரின் படத்திற்கு மாலை அணிவித்து கழக கொடி ஏற்றியும்,

கேஜிஎம் பள்ளி அருகில் தொழிலாளர் அணி செயலாளர் ஆர்,வெங்கிடு தலைமையில் தந்தை பெரியார் படத்திற்கு மாலை அணிவித்து கழகக் கொடி ஏற்றியும்,

முத்துநகர் பகுதியில் தோழர் புண்ணியமூர்த்தி தலைமையில் தந்தை பெரியாரின் படத்திற்கு மாலை அணிவித்து கழகக் கொடி ஏற்றியும்

பிள்ளையார் புரம் பகுதியில் ஆனந்த் தலைமையில் பெரியார் படத்திற்கு மாலை அணிவித்து கழகக் கொடி ஏற்றியும்,

.நாக வீதியில் தோழர் ஆட்டோ சக்தி அவர்கள் தலைமையில் தந்தை பெரியார் படத்திற்கு மாலை அணிவித்தும்,

காமராஜ் நகரில் மாவட்ட செயலாளர் திக செந்தில்நாதன் தலைமையில் தந்தை பெரியாரின் படத்திற்கு மாலை அணிவித்து கழக கொடி ஏற்றியும், குறிச்சி பேருந்து நிறுத்தம் அருகில் மண்டல மகளிரணி செயலாளர் .கலைச்செல்வி அவர்கள் தலைமையில் தந்தை பெரியாரின் படத்திற்கு மாலை அணிவித்து கழக கொடி ஏற்றியும், குறிச்சி பாவேந்தர் படிப்பகம் பகுதியில் வெற்றிச்செல்வன் தலைமையில் அய்யாவின் படத்திற்கு மாலை அணிவித்து கழக கொடி ஏற்றியும்,

முருகாநகர் படிப்பகத்தில் மண்டல செயலாளர் .சிற்றரசு அவர்கள் தலைமையில் தந்தை பெரியார் படத்திற்கு மாலை அணிவித்து கழக கொடி ஏற்றியும்

அஞ்சுகம் நகர் பகுதியில் கவிகிருஸ்னன் தலைமையில் தந்தை பெரியார் படத்திற்கு மாலை அணிவித்தும், கோவை மாவட்டகழக அலுவலகத்தில் பொறுப்பாளர் .மு.ராஜா  தலைமையில் தந்தை பெரியார் படத்திற்கு மாலை அணிவித்தும், முதல் முறையாக மத்தம்பாளையம் கோட்டை பிரிவு பகுதியில் தோழியர் கவிதா ஜெகதீஷ் அவர்கள் இல்லத்தில் தந்தை பெரியாரின் படத்திற்கு மாலை அணிவித்து கேக் வெட்டி பெரியார் பிறந்த நாள் விழா சிறப்பாக நடைபெற்றது.

கோவை மாவட்டம் முழுவதும் நடைபெற்ற தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவில் திராவிடர் கழகம்,  திமுக, காங்கிரஸ், மதிமுக, விசிக, கம்யூனிஸ்ட், ஆகிய கட்சி முன்னணி பொறுப்பாளர்கள் தோழர்கள் உற்சாகமாக கலந்து கொண்டு அனைத்து பகுதிகளிலும் சமூக நீதிநாள் உறுதிமொழியினை உற்சாகமாக ஏற்றுக்கொண்டது குறிப்பிடத் தக்கதாகும்.

புலியகுளம் பகுதியில் .வீரமணி குடும்பத் தினர் பெரியார் பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற தோழர்களுக்கு காலை உணவையும்,

பெரியார் பெருந்தொண்டர் வசந்தம் கு.இராமச்சந்திரன், வாழ்விணையர் ஆகியோர் அனைவருக்கும் இனிப்பு (கேசரி) வழங்கியும் மகிழ்ந்தனர்.

தந்தை பெரியார் பிறந்த நாள் விழா சமுக நீதி நாள் விழாவில் கலந்து கொண்ட அனை வருக்கும் மாவட்ட தலைவர் .சந்திரசேகர் சார்பில் அனைவருக்கும் மதியம் உணவாக பிரியாணி விருந்து வழங்கி சிறப்பு செய்தார்.

காலை 7 மணிக்கு எழுச்சியுடன் தொடங்கிய தந்தை பெரியார் பிறந்தநாள் சமூக நீதி நாள் விழா மாலை 7 மணிக்கு பெயின்டர் குமார் அவர்கள் ஏற்பாட்டில் வானவேடிக்கையுடன் மகிழ்ச்சியுடன் நிறைவு பெற்றது.

பொள்ளாச்சி பகுதியில் வடசித்தூர் சமத்துவபுரம் தந்தை பெரியார் சிலைக்கு பொறியாளர் தி.பரமசிவம் தலைமையில் கழக தோழர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி கழக உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். தொடர்ந்து ஜமீன்ஊத்துக்குழி, சிங்காநல்லூர், வேட்டைக்காரன் புதூர், கருமாபுரம், பொள்ளாச்சி தொழில்பேட்டை, ஆலாம்பாளையம், காளியப்பா நகர், பொள்ளாச்சி பேருந்து நிலையம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் ஊர்வலமாகச் சென்று தந்தை பெரியார் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

No comments:

Post a Comment