வானிலை ஆய்வு மய்யம் தகவல்
சென்னை,அக்.7- தமிழ்நாட்டின் பல் வேறு பகுதிகளில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழ்நாட்டின் கட லோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வட மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் மிதமான மழையும், தென் மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மய்யம், சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத் திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் பெரும் பாலான பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழையும் அவ்வப்போது கன மழையும் பெய்யக்கூடும் என்றும் அறிவித்துள்ளது. மேலும், தமிழ் நாட்டின் பல்வேறு பகுதிகளில் அடுத்த 3 நாட்களுக்கு கன மழை நீடிக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மய்யம் அறிவித் துள்ளது.
சென்னை கடற்கரை பகுதிகளில் கடந்த
44 நாட்களில் நீரில் மூழ்கி 13 பேர் உயிரிழப்பு
சென்னை, அக்.7 கடந்த 44 நாட்களில் சென்னையின் மெரினா, பெசன்ட் நகர், திருவான்மியூர் கடற்கரை பகுதிகளில் 13 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா பரவல் காரணமாக சென்னையில் உள்ள மெரினா, பெசன்ட் நகர், திருவான்மியூர் உள்ளிட்ட கடற்கரைகள் மூடப்பட்டிருந்தன. இந்நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்படதை தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 23 ஆம் தேதியிலிருந்து கடற்கரைகள் மீண்டும் திறக்கப்பட்டன.
இந்த நிலையில், ஆகஸ்ட் 23-ஆம் தேதியில் இருந்து அக்டோபர் 6-ஆம் தேதி (அதாவது இன்று வரை) சென்னையின் மெரினா, பெசண்ட் நகர், திருவான்மியூர் கடற்கரை பகுதிகளில் 13 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஆகஸ்ட் 23-ஆம் தேதி பள்ளி மாணவர்கள் 3 பேரும், 27-ஆம் தேதி பள்ளி மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
* செப்டம்பர் 2-ஆம் தேதியில் 11-ஆம் வகுப்பு மாணவர் அக்பர் என்பவரும், 3-ஆம் தேதியில் கல்லூரி மாணவர் சுஷாந்த் எனபவரும் உயிரிழந்துள்ளனர். 25-ஆம் தேதி கல்லூரி மாணவர்கள், சைலேஷ்பாபு மற்றும் பிரனீத்குமார் ஆகிய இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள் ளனர்.
* அக்டோபர் 1,2,4, 5-ஆம் தேதிகளில் கல்லூரி மாணவர்கள் 3 பேரும் மற்றும் இரு வெளிமாநில தொழிலாளர்களும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
சென்னைக்கு குடிநீர் தரும் ஏரிகளில்
நீர் வரத்து அதிகரிப்பு
சென்னை,அக்.7- சென்னை, திருவள் ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட் டங்களில் நேற்று முன்தினம் (செப்.5) அதிகாலை முதல் நேற்று (செப்.6) அதிகாலை வரை விட்டு விட்டு கன மழை பெய்தது. இம்மழையால், 4 மாவட்டங்களில் உள்ள ஏரி, குளங் களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. சென்னைக்கு குடிநீர் தரும் முக்கிய 5 ஏரிகளுக்கும் நீர் வரத்து அதிகரித் துள்ளது.
இதில், நேற்று (6.10.2021) காலை நிலவரப்படி, பூண்டி ஏரிக்கு விநாடிக்கு 765 கன அடி மழை நீர் வந்து கொண் டிருக்கிறது. இதனால், 3,231 மில்லியன் கன அடி கொள்ளளவு, 35 அடி உயரம் கொண்ட பூண்டி ஏரியின் நீர் இருப்பு 2,565 மில்லியன் கன அடியாகவும், நீர்மட்டம் 33.15 அடியாகவும் உள்ளது.
3,300 மில்லியன் கன அடி கொள் ளளவு, 21.20 அடி உயரம் கொண்ட புழல் ஏரிக்கு விநாடிக்கு 339 கன அடி மழைநீர் வருவதால், நீர் இருப்பு 2,934 மில்லியன் கன அடியாகவும், நீர் மட்டம் 19.61 அடியாகவும் இருக்கிறது.
செம்பரம்பாக்கம் ஏரிக்கு விநாடிக்கு 715 கன அடி நீர் வந்து கொண்டிக்கிறது. ஆகவே, 3,645 மில்லியன் கன அடி கொள்ளளவு, 24 அடி உயரம் உள்ள செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்இருப்பு 2,894 மில்லியன் கன அடியாகவும், நீர்மட்டம் 21.15 அடியாகவும் உள்ளது.
1,081 மில்லியன் கன அடி கொள் ளளவு, 18.86 அடி உயரம் கொண்ட சோழவரம் ஏரிக்கு விநாடிக்கு 339 கன அடி நீர் வருகிறது. எனவே, சோழவரம் ஏரியின் நீர் இருப்பு 674 மில்லியன் கன அடியாகவும், நீர்மட்டம் 14.99 அடி யாகவும் இருக்கிறது.
500 மில்லியன் கன அடி கொள்ளளவு, 36.61 அடி உயரம் உள்ள கண்ணன் கோட்டை- தேர்வாய் கண்டிகை ஏரிக்கு விநாடிக்கு 35 கன அடி மழைநீர் வருவ தால், அந்த ஏரியின் நீர் இருப்பு 458 மில்லியன் கன அடியாகவும், நீர் மட்டம் 35.21 அடியாகவும் உள்ளது.
மொத்தமாக 11,757 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட இந்த 5 ஏரிகளில் 5.10.2021 அன்று 9,372 மில் லியன் கன அடி நீர் இருப்பு இருந்தது. அது நேற்று ஒரே நாளில் 153 மில்லியன் கன அடி அதிகரித்து 9,525 மில்லியன் கன அடியாக உள்ளது.
No comments:
Post a Comment