தருமபுரி, அக்.7 தரும புரியை அடுத்த அன்னசா கரத்தில் சிவசுப்பிரமணிய கோவில் உள்ளது. இந்து அறநிலைய துறைக்கு சொந்தமான இந்தக் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா உள்ளிட்ட முக் கிய விழாக்கள் நடை பெறுவது வழக்கம்.
இந்த நிலையில் 4.10.2021 அன்று கோயி லில் ஒரு கும்பல் உள்ளே புகுந்து தங்க வெள்ளி நகைகளை திருடிச் சென்ற சம்பவம் நடந்துள்ளது இரவு வழக்கமான வழி பாடுகளை முடித்து அர்ச் சகர் கோயிலை பூட்டி விட்டு புறப்பட்டுச் சென் றார். இந்த நிலையில் மறு நாள் அர்ச்சகர் தண்ட பாணி கோவிலுக்கு வந்து திறந்து உள்ளே சென்று பார்த்தபோது கோவி லின் கருவறை பூட்டு உடைக்கப்பட்டு கிடப் பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் அங்கிருந்த பீரோ பூட்டு கள் உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந் தது. அங்கு வெள்ளி வேல் மற்றும் வெள்ளி கவசம் உள்ளிட்ட வெள்ளி பொருட்கள் திருட்டு போயிருந்தது. மேலும் தங்கத் தாலியும் விடுபட்டு இருந்தது. இந்த திருட்டு சம்பவம் பற்றி கோவில் செயல் அலுவலர் விமலா வுக்கு தகவல் கொடுக்கப் பட்டது .அதன்பேரில் அவர் தர்மபுரி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து காவல் ஆய்வாளர் சரவணன் மற்றும் காவலர்கள் தடய வியல் நிபுணர்கள் விரைந்து வந்து கோவிலில் விசா ரணை நடத்தினர். இதில் நள்ளிரவில் கோவிலின் சுற்றுச் சுவரில் ஒரு கும் பல் ஏறி குதித்து உள்ளே சென்று பூட்டுகளை உடைத்து தங்க வெள்ளி நகைகளை அள்ளிச் சென்றது தெரியவந்தது. கொள்ளை போன வெள்ளி பொருட்கள் மட்டும் 25 கிலோ என கூறப்படுகிறது
இதன் மதிப்பு லட்சக் கணக்கில் இருக்கும் என காவல்துறையினர் தெரி விக்கின்றனர். இதைத் தொடர்ந்து கோவிலில் இருந்து உடைக்கப்பட்ட 8 பூட்டுகளை காவல் துறையினர் பார்வை யிட்டு ஆய்வு செய்தனர்.
மேலும் கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். மேலும் செயல் அலுவலர் முன்னி லையில் பீரோவில் இருந்த நகைகள் சரிபார்க்கப் பட்டது. சிவசுப்பிரமணிய கோயிலில் நள்ளிரவில் புகுந்த கும்பல் முதலில் சிசிடிவி கேமராவில் இருந்த ஹார்ட் டிஸ்க் கருவியை கழட்டி அதை தண்ணீரில் போட்டு திருட்டை அரங்கேற்றி யுள்ளனர்.
கோயிலில் திருடு போகும் தங்கம், வெள்ளி, தாலியை காப்பாற்ற முடி யாத கடவுள்கள், நம்மை யும் நம் உடமைகளையும் காப்பாற்றுவார்கள் என்று பொதுமக்கள் புலம்பி சென்றனர்.
No comments:
Post a Comment