நுகர்பொருள்கள் சிறப்பு விற்பனை திட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 27, 2021

நுகர்பொருள்கள் சிறப்பு விற்பனை திட்டம்

சென்னை அக். 27  இந்தியாவில் மிகவும் விரும்பப்படும் ஹைப்பர் மார்க்கெட் நிறுவனமான, 'பிக் பஜார்'  விழாக்காலத்தையொட்டி தனது வாடிக்கையாளர் களுக்கு, அக். 24 முதல் நவ. 7 வரை மிகப் பெரிய சிறப்பு விற்பனை சேவையை நடத்துகிறது.

வாடிக்கையாளர்கள் விற்பனையகத்திற்கு நேரில் சென்று பொருள்கள் வாங்கும் போதோ அல்லது sலீஷீஜீ.தீவீரீதீணீக்ஷ்ணீணீக்ஷீ.நீஷீனீ என்ற இணையதளம் வழியாக இணையத்தில் வாங்கும் போதோ அல்லது பிக் பஜார் மொபைல் ஆப் மூலம் வாங்கும் போதோ பல்வேறு பொருட்களை இலவசமாகப் பெறலாம்.

இதுதவிர பரிசளிக்க ஏற்ற நாகரீக ஆடைகள், இனிப்புகள், சாக்லேட்டுகள், சமையலறை சாதனங்கள், ஊருக்குச் செல்ல தேவையான பொருட்கள், உங்கள் வீடுகளை மறுவடிவமைக்கத் தேவையான ஃபர்னிஷிங் பொருட்கள் என அனைத்தும் இந்த சிறந்த சலுகைகளாக கிடைக்கும்  என ஃப்யூச்சர் குழுமத்தின் முதன்மை சந்தைப்படுத்துதல் அதிகாரி பவன் சார்தா தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment