தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கம் வேண்டுகோள்
சென்னை,அக்.28- மருத்துவர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிப்பதை அறநிலையத்துறை கைவிட வேண்டும் என தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. அதன் விவரம் வருமாறு,
கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா பெருந்தொற்றுக் காரணமாக, மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களை தமிழ் நாடு அரசு தற்காலிக மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தி வரு கிறது. கரோனா பெருந்தொற்றின் அவச ரம் கருதி அதனை ஒரு தற்காலிக ஏற்பாடாக ஏற்றுக்கொண்டோம்.
ஆனால் தற்போது அறநிலையத் துறை சார்பில்,ஒப்பந்த அடிப்படையில் கோவில்களில் அவசர சிகிச்சைக்கான மருத்துவர், செவிலியர் நியமனம் நடைபெற இருக்கிறது.
ஹிந்து சமய அறநிலையத் துறை சார்பில் மருத்துவ உதவி மய்யங்களை உருவாக்குவது வரவேற்புக் குரியது.
ஆனால்,ஒப்பந்த அடிப்படையி லான தற்காலிக பணிநியமனம் மிகுந்த வருத்தத்தை தருகிறது.
தற்பொழுது ஹிந்து சமய அற நிலையத்துறையால் விழுப்புரம் மாவட் டம்,மேல்மலையனூர் வட்டம், அங்கா ளம்மன் கோவிலில் அமைக்கப்படும் அவசர சிகிச்சை மருத்துவ நிலையத் திலும், மேலும் சில கோவில்களிலும் *தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் இதர பணியாளர்களை பணி நியமனம் செய்வது சரியல்ல.
மருத்துவர், தொழிலாளர் நலனில் அக்கறை கொண்டிருக்கும் தமிழ்நாடு அரசு, நிரந்தர அடிப்படையில் மருத் துவர்களை, எம்.ஆர்.பி மூலம் நியமனம் செய்திட வேண்டும் .
மூன்று ஆண்டுகளாக நடத்தப்படா திருக்கும் விஙிஙிஷி மருத்துவர்களுக் கான விஸிஙி தேர்வை விரைவில் நடத்தி, மருத் துவப் பணியிடங்களை நிரப்பிட வேண் டும் என தமிழ்நாடு மருத்துவ மாண வர்கள் சங்கம் தமிழ்நாடு அரசை கேட்டுக் கொள்கிறது.
இவ்வாறு தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment