ஸ்டோக்ஹோம், அக். 5- ஆண்டு தோறும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய 6 துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசுகள் வழங்கி சிறப்பிக்கப்படுகிறது. சுவீ டன் தலைநகர் ஸ்டோக் ஹோமில் 2021ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் நேற்று (4.10.2021) முதல் அறிவிக்கப்படுகி றது. அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வேயில் அறிவிக்கப்படும்.
உடலை தொடாம லேயே வெப்பம், வலி, உடல் அழுத்தம் மற்றும் இதர விவரங்களை கண் டறியும் சென்சார் கரு வியை கண்டுபிடித்ததற் காக 2021ஆம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அமெரிக் காவைச் சேர்ந்த அறிவிய லாளர்களான டேவிட் ஜூலியஸ் (David Julius), ஆர்டெம் பட்டபௌ ஷியன் (Ardem Patapoutian) ஆகிய இருவருக்கும் பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வெப்பம், குளிர் மற்றும் தொடுதல் ஆகியவை நரம்பு மண்டலத்தில் ஏற் படுத்தும் தாக்கம், அது அனுப்பும் சமிக்ஞைகள் குறித்த விஞ்ஞானிகளின் இந்த ஆய்வு, பல்வேறு உடலியல் செயல்முறை களில் அவற்றின் செயல் பாடுகளை தெளிவுபடுத் துவதுடன் நாள்பட்ட வலி உள்பட பல்வேறு நோய்களுக்கான சிகிச் சைக்குப் பயன்படுகிறது.
இந்த நோபல் பரிசு , தங்கப் பதக்கத்துடன், இந்திய மதிப்பில் ரூபாய் எட்டரை கோடி மதிப் புள்ள பரிசுத்தொகையும் கொண்டதாகும்.
No comments:
Post a Comment