பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் கிடையாது அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 13, 2021

பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் கிடையாது அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு

சென்னை, அக். 13- மாணவர் களுக்கு காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் நடைபெறாது என்று பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி தெரிவித்தார்.

பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் மாவட்ட முதன்மை கல்வி அதி காரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகளின் ஆலோ சனை கூட்டம் சென்னை டிபிஅய் வளாகத்தில் நேற்று நடந்தது. இதில் பள்ளிக்கல்வி ஆணையர் கே.நந்தகுமார், தொடக்க கல்வி இயக்குநர் அறி வொளி மற்றும் இணை இயக்குநர்கள் கலந்து கொண்டனர்.

பிறகு, செய்தியாளர் களிடம் அமைச்சர் அன் பில் மகேஷ் பொய்யா மொழி கூறியதாவது:

பள்ளிக்கல்வித் துறை சார்பில் வழக்கமாக நடைபெறும் மாதாந்திர ஆய்வுக் கூட்டம்தான் இது. 1  -  8 வகுப்புகளுக்கு நவம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறப்பது குறித்து இதில் ஆய்வு செய்யப்பட்டது. திட்ட மிட்டபடி நவம்பர் 1ஆம் தேதி 1 - 8 வகுப்பு மாணவர் களுக்கு பள்ளிகள் செயல் படும். பள்ளிகள் திறப்பு என்பது மாணவர்கள் பள்ளிக்கு தொடர்ந்து வருவதை பழக்கப்படுத்து வதற்குதான். அந்த வகை யில், பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு பெற் றோர் தைரியமூட்டும் வகையில் அறிவுரை வழங்க வேண்டும்.

தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு மாண வர்களுக்கு காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் நடைபெறாது, அதற்கு பதில், பொதுத் தேர்வை எதிர்கொள்ளும் வகை யில் டிசம்பரில் சிறப்புத் தேர்வு நடத்தப்படும். மேல் நிலை மாணவர்களுக்கு மார்ச்சில் பொதுத் தேர்வு நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.


No comments:

Post a Comment