அமெரிக்காவில் கருக்கலைப்பு செய்ய தடை: எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் போராட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 5, 2021

அமெரிக்காவில் கருக்கலைப்பு செய்ய தடை: எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் போராட்டம்

வாசிங்டன், அக். 5-  அமெரிக்காவில் கருக்கலைப்பு செய்ய தடை விதிக்கும் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏராள மான பெண்கள் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அமெரிக்கா வில் குடியரசு கட்சி ஆளும் 19 மாகாணங்களில் அடுத்தடுத்து கருக்கலைப்புக்கு கட்டுப்பாடு கள் விதிக்கும் சட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கருவில் இருக்கும் சிசுவுக்கு இதயத் துடிப்பு கண்டறியப் பட்டால் கருக்கலைப்பு செய்ய தடை விதிக்கும் மசோதா கடந்த மாதம் தாக்கல் செய்யப் பட்டு சட்டம் ஆக்கப்பட்டுள் ளது. அதன்படி கருவுக்கு 6 வாரம் நிறைந்தால் கருக் கலைப்பு செய்ய தடை விதிக்கப் படுகிறது. அமெரிக்க உச்ச நீதிமன்றமும் கருக்கலைப்புக்கு எதிரான தீர்ப்பையே வழங்கி உள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாசிங்டனில் திரண்ட ஆயிரக்கணக்கான பெண்கள், கருக்கலைப்பு என்பது பெண் களின் உரிமை என்ற முழக்கங் களுடன் பேரணியாக சென்ற னர். இதே போல், டெக்ஸ்சா சிலும் ஆயிரக்கணக்கான பெண் கள் போராட்டத்தில் ஈடுபட்ட னர். ஹூஸ்டன், நியூ யார்க் உள்ளிட்ட இடங்களிலும் கருக்கலைப்பு செய்ய தடை விதிக்கும் மசோதாவிற்கு எதிராக போராட்டம் வலுத்து வருகிறது. அமெரிக்காவின் உச்சநீதிமன்ற வாயிலில் ஏறி என் உடல் என் உரிமை என் றும் பெண்கள் முழக்கமிட்ட னர். கருக்கலைப்புக்கு விதிக் கப்பட்ட தடையை ஆதரித்தும் அதனை எதிர்ப்பவர்களை கண்டித்தும் புளோரிடாவில் ஒரு சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

No comments:

Post a Comment