அய்.நா. பொதுச்சபை தலைவர் தகவல்
ஜெனீவா, அக். 5- தான் இந் தியாவில் உருவாக்கப் பட்ட கோவிஷீல்டு தடுப் பூசியை செலுத்திக் கொண் டதாக அய்.நா. பொதுச் சபை தலைவர் அப்துலா சாஹீத் தெரிவித்துள்ளார்.
கோவிஷீல்டு தடுப் பூசியை இன்னும் பல அய்ரோப்பிய நாடுகளும் ஏற்றுக் கொள்ளவில்லை. கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுவந்தாலும் கூட அவர்களுக்கு கட்டாய மாக தனிமைப்படுத்து தலை அமலில் வைத்துள் ளன. குறிப்பாக, இந்தி யாவில் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களை தங் கள் நாட்டுக்குள் நுழைய பிரிட்டன் அரசு தடை விதித்து வருகிறது.
இந்நிலையில் அண் மையில் நடந்த அய்.நா. பொதுச்சபையின் 76ஆவது வருடாந்திரக் கூட்டத்தின் தலைவராக இருந்த அப்துல்லா ஷாஹீத் தான் 2 தவணை கோவி ஷீல்டு தடுப்பூசி போட்டுக் கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.
கோவிஷீல்டு தடுப் பூசியை பிரிட்டிஷ்-ஸ்வீ டிஷ் மருந்து நிறுவனமான ஆஸ்ட்ராஜெனிகாவும், புனேவின் சீரம் இன்ஸ் டிட்யூட் ஆஃப் இந்தியா நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ளன.தான் கோவிஷீல்டு போட்டுக் கொண்டது குறித்து அப் துல்லா "நான் இரண்டு டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டேன். எத்தனை நாடுகள் இதனை ஏற்றுக் கொண்டது என்று எனக் குத் தெரியவில்லை.
ஆனால், உலகளவில் பெரும்பாலானோர் இந் தத் தடுப்பூசியை செலுத் திக் கொண்டுள்ளனர். அதனால் நானும் செலுத் திக் கொண்டேன். நான் நலமுடனேயே இருக்கி றேன். இதில் ஏதும் பாதிப்பு இருக்குமா என்பதை மருத்துவர்கள் சொல்வார்கள்" என்று கூறினார்.
இன்னும் அதிகமான கோவிட் தடுப்பூசிகளை உலக சுகாதார நிறுவனம் அங்கீகரிப்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப அவர் இவ்வாறு கூறினார்.
இந்தியா இதுவரை 100க்கும் மேற்பட்ட உலக நாடுகளுக்கு 66 மில்லியன் கரோனா தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்துள்ளது. மாலத்தீவு மட்டும் 3.12 லட்சம் தடுப்பூசிகளைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment