சியோல், அக். 5-- வடகொரியா--தென்கொரியா இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. மேலும், பல்வேறு ஏவு கணை சோதனைகளில் ஈடுபட்டு வரும் வடகொ ரியா கொரிய தீபகற்பத் தில் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.
அந்த வகையில், ஆறு மாத இடைவெளிக்கு பிறகு வடகொரியா ஒரே மாதத்தில் 4 ஏவுகணை களை சோதித்து உலக நாடுகளை அதிர வைத்து உள்ளது.
இதற்கிடையில், வட கொரியா --- தென்கொரியா இடையே நேரடி தகவல் தொடர்பு இணைப்பு பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. வடகொரிய அதிகாரிகள் தொலை பேசி மூலம் தென்கொரிய அதிகாரிகளை தொடர்பு கொள்ளும் வகையில் தக வல் தொடர்பு இரு நாட் டிற்கும் இடையே உரு வாக்கப்பட்டிருந்தது.
ஆனால், தங்கள் நாட் டிற்கு எதிரான கருத்துக் கள் அடங்கிய பிரசுரங் களை தென்கொரியா தங் கள் நாட்டு எல்லைக்குள் வீசியதாக குற்றஞ்சாட் டிய வடகொரியா-தென் கொரியா உடனான தக வல் தொடர்பை கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் துண்டித்தது. மேலும், தென்கொரியாவில் இருந்து வரும் அழைப்புக ளுக்கு வடகொரியா பதி லளிக்காமல் இருந்து வந் தது.
இந்நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே யான தகவல் தொடர்பு இணைப்பு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. தென்கொரியாவில் இருந்து வந்த தொலை பேசி அழைப்பிற்கு வட கொரிய அதிகாரிகள் பதிலளித்துள்ளனர். கொரிய தீபகற்பத்தில் அமைதியை நிலைநாட்ட தென்கொரியா இடையே யான தகவல் தொடர்பை மீண்டும் ஏற்படுத்த வேண் டும் என வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் விருப்பம் தெரிவித்ததாக அந்நாட்டு அரசு தெரிவித்திருந்தது.
இதனை தொடர்ந்தே இருநாடுகளுக்கும் இடையேயான தகவல் தொடர்பு மற்றும் தொலை பேசி இணைப்புகள் மீண் டும் தொடங்கப்பட்டுள் ளது. வடகொரியாவின் இந்த நடவடிக்கை கொரிய தீபகற்பத்தில் அமைதியை ஏற்படுத்த ஒரு வாய்ப்பாக அமையும் என்று உலக நாடுகள் தெரிவித்துள்ளன.
No comments:
Post a Comment