கடலூர், அக். 5- தந்தை பெரியார் அறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா கருத்தரங்கம் வள்ள லார் வாழ்வியல் மய்யத் தில் கழக. அமைப்பாளர் நா. முருகன் தலைமையில் 16.9.2021 அன்று மாலை 6மணி முதல் 9மணி வரை நடந்தது. தலைவர் புலவர் இராவணன் வரவேற் புரை கூறினார்.
பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரன் தொடக்க உரை ஆற்றி னார். மற்றும் அரங்க. பன்னீர் செல்வம், நா.தாமோ தரன், சொ. தண்டபாணி மணி வேல், நா. கனகராஜ், செந்தில் வேல், சேகர், இந்திரஜித், கோ. வேலு, சத்தியா குணசுந்தரி பத்மா, ராமநாதன், கண்ணன், திருநாவுக்கரசு ராயர் ஆகியோர் பங்கேற்றனர்.
ம. தி. மு. க தலைமைக் குழு உறுப்பினர் செந் திலதிபன் பெரியாரால் விடியல் என்னும் தலைப் பிலும், புதுவை தனித் தமிழ் கழக தலைவர் க.தமிழமல் லன் அறிஞர் அண்ணா தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினர். இரா. மாணிக்க வேல் பாடல்கள் பாடினார். நகர செயலா ளர் குண சேகரன் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment