புதுடில்லி, அக். 13- 'ஏர் இந்தியா' நிறுவனம், வெற்றிகரமாக 'டாடா' குழுமத்தின் கைகளுக்கு சென்றுவிட்ட நிலையில், அடுத்த கட்டமாக, அந்நிறுவனத்தின் கடன் பாக்கி பிரச்சினைகளை தீர்க்கும் முயற்சியில் ஒன்றிய அரசு இறங்கி உள்ளது.
இதையடுத்து, கடனை அடைப்ப தற்காக பத்திரங்களின் வாயிலாக, கிட்டத் தட்ட 30 ஆயிரம் கோடி ரூபாயை திரட்ட அரசு திட்டமிட்டுள்ளதாக தெரியவந்து உள்ளது.
இது குறித்து உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: ஏர் இந்தியாவின் 75 ஆயிரம் கோடி ரூபாய் கடன் மற்றும் 17 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் ஆகியவற்றை ஏற்றுக் கொண்டிருக்கும், 'ஏர் இந்தியா அசெட் ஹோல்டிங்ஸ்' நிறுவனம், விரைவில் பத்திரங்களை வெளியிட உள்ளது.
சொத்துக்களை விற்பது உள்ளிட்ட வற்றின் வாயிலாக திரட்டப்படும் தொகையை கொண்டு, ஏர் இந்தியா நிறுவனத்தின் ஒரு பகுதி கடனை அடைக்கலாம் என்றாலும், முழுமையாக கடனிலிருந்து வெளியேற, மேலும் 30 ஆயிரம் கோடி ரூபாய் வரை தேவைப் படும். எனவே, இந்த தொகையை பத்திரங் களை வெளியிடுவதன் வாயிலாக திரட்ட திட்டமிடப்படுகிறது. இந்த பத்திரங்க ளுக்கு அரசு உத்தரவாதம் அளிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment