சிங்கப்பூர்-, அக். 13- இறக் கும் நிலையில் இருந்த புற்றுநோயாளி பெண் ணின் கடைசி ஆசையை சிங்கப்பூர் மருத்துவர்கள் குழு, நிறைவேற்றியுள்ளது. தமிழ்நாட்டின் திருச்சி யைச் சேர்ந்த ராஜேஸ்வரி, கணவர் ராஜகோபாலு டன் தென் கிழக்கு ஆசி யாவைச் சேர்ந்த சிங்கப் பூரில் வசித்து வந்தார்.
ராஜேஸ்வரிக்கு தொண்டைப் புற்றுநோய் ஏற்பட்டது. நோய் முற்றி யதை அடுத்து, திருச்சியில் உள்ள உறவினர்களிடம் வளரும், தன் 12 மற்றும் 9 வயது மகன்களை காண விரும்பினார் ராஜேஸ் வரி. கடந்த ஆண்டு கரோனா கட்டுப்பாடு காரணமாக இந்தியா வுக்கு சில விமானங்களே இயக்கப்பட்டு வந்த நிலையில், ராஜேஸ்வரி சிகிச்சை பெற்று வந்த டன் டாக் செங் மருத்து வமனை, வெளியுறவுத் துறை அமைச்சகங்களி டம் பேசி, அவரை இந் தியாவுக்கு அனுப்ப ஏற் பாடு செய்தது. எனினும் விமானம் புறப்படுவதற்கு நான்கு மணி நேரத்திற்கு முன்தான், அவருக்கு அனுமதி கிடைத்தது
இது குறித்து, ராஜேஸ் வரியின் கணவர் ராஜ கோபாலன் கூறியதாவது: கடைசி நேரத்தில் அனு மதி கிடைத்ததால் விமா னத்தில் எங்களுக்கு இட மில்லை. சக பயணியர் மனது வைத்ததால் எங் களுக்கு இடம் கிடைத் தது. இந்தியா வந்து மகன் களை பார்த்த சந்தோஷத் தில், இரு வாரங்களில் என் மனைவி இறந்து விட்டார். மகன்களை நேரில் பார்க்காமல் என் உயிர் போகாது என அவர் கூறியதை நிறை வேற்றி விட்டார். அதற்கு உதவிய டன் டாக் செங் மருத்துவமனைக்கு என்றும் நன்றிக் கடன் பட்டுள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment