ஆவடி மாவட்டத்தில் தந்தைபெரியாரின் 143 ஆம் பிறந்தநாள் விழா! சமூகநீதி நாளாக, நான்கு நாட்கள் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 13, 2021

ஆவடி மாவட்டத்தில் தந்தைபெரியாரின் 143 ஆம் பிறந்தநாள் விழா! சமூகநீதி நாளாக, நான்கு நாட்கள் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது!

சென்னை, அக்.13 தந்தை பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு, ஆவடி மாவட்டத்தில் பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை, 73 இடங்களில் கழகக் கொடியேற்றுதல், புத்தகவெளியீடு என்று நான்கு நாட்களாக சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

தந்தைபெரியாரின் 143 ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு, ஆவடியில் ஒவ்வொரு ஆண் டும் மிகச்சிறப்பாகக் கொண்டாடுவது வழமை. ஆனால், இந்த ஆண்டு ஊரடங்கு நடைமுறை களுக்கேற்ப, ஒரே நாளில் கொண்டாடுவதைத் தவிர்த்து, செப் 15, 17, 18, 19 ஆகிய நான்கு கட்டங்களாக கொண்டாடப்பட்டன.

செப். 15 இல் கோரா இல்லத்தில் கழகக் கொடி யேற்றப்பட்டது. தந்தை பெரியார் பிறந்தநாளான செப். 17 இல் 17 இடங்களில் கொடியேற்றப்பட்டு, ஆறு இடங்களில் பெரியார் சிலைகளுக்கு மாலையணிவிக்கப் பட்டன. செப். 18 இல் புத்தக வெளியீடும், செப் 19 இல் 55 இடங்களில் கொடிகளும் ஏற்றப்பட்டன. ஆக மொத்தம் 73 இடங்களில் கழகக் கொடிகள் ஏற்றப்பட்டது. இதில் 13 கொடிமரங்கள் புதியது என்பது குறிப்பிடத்தக்கது. 19 ஆம் தேதி மாநில அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு, காலை முதல் இரவு வரை 55 இடங்களில் அவரது முன்னிலையில் கழகக் கொடியேற்றி, சமூகநீதிநாள் உறுதிமொழி ஏற்றுக் கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

பெரியார் சிலையைத்தேடி கோரா இல்லம் வந்த பூவை சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி!

முதல் கட்டமாக, 15 ஆம் தேதி மாவட்டத் தலைவர் பா.தென்னரசு தலைமையில் செவ்வாய்ப் பேட்டை கோரா இல்லத்தில் பெரியார் சிலைக்கு மாலையணிவித்து, கழகக்கொடியேற்றி அனை வருக்கும் இனிப்பும், சிற்றுண்டியும் வழங்கிக் கொண்டாடப்பட்டது. அதைத் தொடர்ந்து செப் 17 ஆம் தேதி, செவ்வாய்ப் பேட்டைக்கு வேறு பணி நிமித்தமாக வந்திருந்த பூவிருந்தவல்லி  சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி அவர்கள், பெரியார் படம் ஏற்பாடு செய்யுங்கள், இங்கேயே பெரியார் பிறந்தநாளைக் கொண்டாடிவிடலாம் என்று தி.மு.. தோழர்களைக் கேட்டிருக்கிறார். அவர் களோ, பெரியார் படம் கோரா இல்லத்தில் தான் இருக்கும் என்று வந்து கேட்டிருக்கிறார்கள். கோராவோ, படம் எதுக்குங்க அதான் அய்யா சிலையே இருக்குதே, அதுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யுங்களேன் என்று ஆலோசனை யாகக் கூறியிருக்கிறார். தகவல் அறிந்த சட்டமன்ற உறுப்பினர் அவர்கள், சிலையே இருக்கிறதா, இதோ நானே வருகிறேன் என்று வந்து, கோராவின் இல்லத் திலேயே பெரியாரின் பிறந்தநாளை மிகச் சிறப்பாகக் கொண்டாடி மகிழ்ந்திருக்கின்றனர்.

பிரதமர் மோடியின் பிறந்தநாளைக் கொண்டாட முயன்று, மூக்கறுபட்ட பா...வினர்!

இரண்டாம் கட்டமாக, செப்.17 ஆம் தேதி வழக்கம் போல திருநின்றவூர் பகுதித் தலைவர் இரகுபதி மகள் சித்ரா தலைமையில், நாசிக்நகர் முதன்மைச் சாலையில் மாவட்டத் தலைவர் முன் னிலையில், வழமை போல கழகக்கொடியேற்றப் பட்டது. கழகத்தோழர்கள் மற்ற இடங்களுக்கு கொடியேற்ற சென்றிருந்த நேரத்தில், என்றைக்கும் இல்லாமல் இந்த ஆண்டு, புதிதாக வந்துள்ள பா... ஒன்றியச் செயலாளர் ஜெயக்குமார், அதே இடத்தில் பா... கொடியை ஏற்றி, அனுமதி பெறாமல் ஒலிபெருக்கியும் வைத்ததோடு இல் லாமல், ”யார் இங்கே திராவிடர் கழகக் கொடியை ஏற்றியது?” என்று அடாவடி செய்திருக்கிறார். கழகத்தோழர் இரகுபதியின் மகள் சித்ரா தனியாகச் சென்று, அவருக்கு சரியான பதிலடி கொடுத் துள்ளார். அதற்குள் தகவலறிந்து தி.மு.. பகுதிச் செயலாளர் ஸ்டாலின், கலைவாணன், விடுதலை சிறுத்தைகள் கட்சித்தோழர்கள் பலரும் அங்கே திரண்டுவந்து, “பல ஆண்டுகளாக இங்கே திராவிடர் கழகக் கொடியிருக்கிறதேஎன்று சித்ராவின் பக்கம் பேசியிருக்கின்றனர். இந்த சம்பவம் நடந்துகொண்டிருக்கும் போதே, கைபேசிகளில் சிலர் இதை படம்பிடித்துள்ளனர். அதிலொருவர் பா...வின் கொடி தலைகீழாகப் பறப்பதையும் படம்பிடித்து, அதை வெளிச்சம் தொலைக்காட்சிக்கு அனுப்பிவைத்து, அது அன் றைக்கே ஒளிபரப்பும் ஆகியிருக்கிறது. இதன் பிறகு, பா...வினர் ஏற்றிய கொடி காணாமல் போனதாக, தி.மு.. தோழர் கலைவாணன் மீது பாலமேடு பஞ்சாயத்து காவல் நிலையத்தில் பா... வினர் புகார் கொடுத்துள்ளனர். காவல் துறையினர் தீரவிசாரித்து, அனுமதி இல்லாமல் ஒலிபெருக்கி வைத்ததை எல்லாம் அறிந்து, பா... வினரை எச்சரித்து அனுப்பியுள்ளனர். பெரியார் பிறந்தநாளுக்குப் போட்டியாக பிரதமர் மோடியின் பிறந்தநாளைக் கொண்டாட எண்ணி, பா...வினர் மூக்கறுபட்டதுதான் மிச்சமாயிற்று. தலைகீழாகப் பறந்ததால், பா...காரர்களே அவர்களின் கொடியைக் கழற்றியிருப்பார்கள் என அங்கிருந்த மக்கள் பேசிக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

ஆவடி மாவட்டத் தலைவர் தலைமையில் அரசுப்பள்ளியில் சமூகநீதி நாள் உறுதியேற்பு!

தந்தை பெரியாரின் பிறந்தநாளான செப் 17 ஆம் தேதியை சமூகநீதி நாளாக தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளதையொட்டி, ஆவடி மாநகராட்சி 45 ஆவது வார்டு, உழைப்பாளர் நகரில் உள்ள பி.டி.எம்.எஸ். அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்கள், ஆசிரியர்கள் அனை வரும் சமூகநீதிநாள் உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர். பள்ளியின் தலைமை ஆசிரியர் பு.தே. மணிவண்ணன் முன்னிலையில், பட்டதாரி தமிழ் ஆசிரியை திருமதி சரளாதேவி உறுதி மொழியை வாசிக்கஅனைவரும் அதைப் பின்பற்றி உறுதியேற்றனர். இந்நிகழ்ச்சிக்கு ஆவடி மாவட்டத் தலைவர் பா.தென்னரசு தலைமை தாங்கினார். முன்னதாக ஆவடி மாவட்டத்தலைவர் பா.தென்னரசு மாணவர்கள் மத்தியில் பெரியாரின் தேவை குறித்து உரையாற்றினார். நிகழ்வில், தி.மு.. மேனாள் கவுன்சிலர் சதீஷ்குமார், பெரியசாமி செல்வராஜ், ஜெயசந்திரன், ஜான், முருகேசன், ஸ்டீபன் ஆகியோர் கலந்துகொண்டனர். பட்டாபிராம் பகுதியில் திராவிடர் கழகத்தில் புதிதாக தன்னை இணைத்துக் கொண்ட, பெரியார் பெருந்தொண்டர் வேல்முருகன் இந்நிகழ்வினை சிறப்பாக ஒருங்கிணைத்துக் கொடுத்தார்.

தி.மு.. தோழர் ஏற்பாடு செய்துகொடுத்த

திராவிடர் கழகக் கொடிமரம்!

நான்காம் கட்டமாக செப்.19 இல், ஆவடி பெரியார் மாளிகையில் தொடங்கி, கலைஞர் பகுத்தறிவுப் பாசறையுடன் 55 இடங்களில் கொடி யேற்றப்பட்டது. குறிப்பாக, கோயில்பதாகையில் புதிதாக அறிமுகமான தோழர் ஜானகிராமன், கம்யூனிஸ்ட் (எம்) கட்சியில் இருந்து, கடந்த 2 ஆண்டுகளாக விலகியிருந்து பெரியாரியத்தைப் போற்றிப் பரப்பிக்கொண்டிருப்பவர். அந்தப் பகுதியில் சுயமரியாதைச் சுடரொளி மொழி யன்பன் இல்லத்தில் மட்டும் கழகக் கொடி பறக்கிறது.

அது போதாது இன்னொன்றும் தேவை என்று, கோயில்பதாகையில் தி.மு.. வட்டச்செயலாளர் சிங்காரம் மூலமாக, மக்கள் பார்வையுள்ள இடத்தில் கனமான இரும்புப் பைப்பில் கொடிமரம் ஒன்றை ஏற்பாடு செய்து, அதைத் தான் பரா மரித்துக் கொள்வதாகவும் கூறியிருந்தார். அந்தப்படியே ஏற்பாடும் செய்யப்பட்டிருந்தது. திட்டமிட்டிருந்த படியே, கொடிமரம் ஏற்பாடு செய்த தி.மு.. வட்டச் செயலாளர் சிங்காரம் தலைமையில், புதிய தோழர் ஜானகிராமன் கொடியேற்றினார்.

ஆவடி மாவட்டச் செயலாளர் .இளவரசன் சமூகநீதிநாள் உறுதிமொழியை வாசிக்க, சாலையில் செல்லும் அனைவரும் வியப்புடன் கண்டுகளிக்கும் வண் ணம், மற்றவர்களும் கை களை நீட்டி, உறுதி யேற்றனர். பிறகு உற்சாகத்துடன் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி தோழர்கள் மகிழ்ந்தனர்.

சுவரெழுத்துகளும்,

பெரிய மரமும், கொடியும்!

முன்னதாக ஆவடி மாவட்டத்தில் தந்தை பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு, 10 இடங்களில் சுவர் எழுத்து விளம்பரம் எழுதப்பட்டது. மண் டலக் கலந்துரையாடலில் வடித்தெடுத்த தீர்மா னங்கள், மாவட்டக் கலந்துரையாடலில் வழி மொழியப்பட்டு, அதன்படி விழாக்குழு அமைத்து, விழாக்குழுவின் தலைவராக அம்பத்தூர் ஏழுமலை அவர்கள் தெரிவு செய்யப்பட்டு, புதிதாக 100 கொடிகள் தயாரிக்கக் கொடுக்கப்பட்டு திட்டமிட்டபடி தந்தை பெரியாரின் பிறந்தநாள் மிகச்சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

தோழர் ஏழுமலை பராமரித்து வரும் அம்பத் தூர் பேருந்து நிறுத்தத்தில் உள்ள 30 அடி உயரக் கொடிமரமும், பட்டாபிராம் பேருந்து நிறுத்தத்தில் உள்ள தோழர் ஸ்டீபன் பராமரித்து வரும் 5 அடி அகலம், 7 அடி நீளமும் கொண்ட பெரிய கொடியும், காண்போரின் கவனத்தை ஈர்த்துவருவது குறிப்பிடத்தக்கது.

கலந்துகொண்ட

தோழர்கள்!

மாவட்டச் செயலாளர் .இளவரசன், இளைஞரணித் தலைவர் வெ.கார்வேந்தன், தோழர் வை.கலையரசன், பொதுக்குழு உறுப்பினர் பூவை செல்வி, ஆவடி நகரத் தலைவர் கோ.முருகன், செயலாளர் .தமிழ்மணி, துணைச் செயலாளர் பூவை தமிழ்ச்செல்வன், அம்பத்தூர் பகுதித் தலைவர் இராமலிங்கம், மாவட்ட மகளிர் பாசறைத் தலைவர் ஜெயந்தி, மகளிரணித் தலைவர் இராணி, இரகுபதி, பகுத்தறிவு பாசறை இரா.கோபால், ஆவடி முருகேசன், முகப்பேர் முரளி, பெரியார் பெருந்தொண்டர் இளங்கோ, அம்பத்தூர் சிவக்குமார் மற்றும் தோழர்கள் பலரும் கலந்துகொண்டு இன்புற்றனர்

No comments:

Post a Comment