"தெற்கும், வடக்கும்" புத்தகத்தை வெளியிட்டு பட்டையைக் கிளப்பிய பால்வளத்துறை அமைச்சர்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 13, 2021

"தெற்கும், வடக்கும்" புத்தகத்தை வெளியிட்டு பட்டையைக் கிளப்பிய பால்வளத்துறை அமைச்சர்!

மூன்றாம் கட்டமாக செப் 18 அன்று ஆவடி மாவட்டம் திருமுல்லைவாயில் பகுதியின் சார்பில். "தெற்கும், வடக்கும்" புத்தக வெளியீடு ஏற்பாடு செய்யப்பட்டி ருந்தது. தி.மு.கழகத்தின் திருவள்ளூர் மாவட் டத்தின் செயலாளரும், தமிழ்நாடு அரசின் பால்வளத்துறை அமைச்சருமான சா.மு.நாசர் அவர்களிடம் புத்தகத்தின் முதல் பிரதியை வெளியிட அனுமதி கோரப்பட்டிருந்தது. அவரும், வெளி யிட்டுவிட்டு, உடனே சென்றுவிடலாம் அல்லவா? என்று கேட்டிருந்தார். நமது தரப்பிலும் ஒப்புக் கொள்ளப்பட்டிருந்தது. செப் 18 ஆம் தேதி, நிகழ்ச்சிக்கு வந்த அமைச்சர், உடனே சென்று விடுவேன் என்று சொன்னதற்கு மாறாக அரை மணி நேரத்திற்கும் மேலாக ஆரியர், திராவிடர் போராட்டம் குறித்து ஆதி, அந்தமாகப் பேசி, வந்தி ருந்தவர்களை வியப்படையச் செய்து விட்டார். குறிப்பாக, நடந்துகொண்டிருப்பது ஆரியர், திராவி டர் போராட்டம்தான் என்றும், அப்படிப்பட்ட நேரத்தில், திராவிடர் கழகத் தோழர், அருள்தாஸ் எனும் இரணியன் பெரியார், அம்பேத்கர் கருத்துகளைத் தொகுத்து, தெற்கும், வடக்கும் எனும் தலைப்பில் அருமையான தொகுப்பாக கொண்டுவந்துள்ளது பாராட்டத்தக்கது என்று முடித்துக்கொண்டார். முன்னதாக முதல் பிரதியை சட்டமன்ற உறுப்பினர் ஜோசப் சாமுவேல் பெற்றுக்கொண்டார்.

அதன் பிறகு, கழகத்தின் மாநில மகளிர் பாசறை அமைப்பாளர் சே.மெ.மதிவதனி, மாநில மாணவர் கழக செயலாளர் .பிரின்சு என்னாரெசு பெரியார் ஆகியோர் தெற்கும், வடக்கும் புத்தகம் குறித்தும், ஏன் இந்த இருபெரும் தலைவர்கள் தேவை என்பது குறித்தும் விளக்கமாகப் பேசினர். மாவட்ட இளைஞரணிச் செயலாளர் வெ.கார்வேந்தன் இணைப்புரை வழங்கி சிறப்பித்தார். நிகழ்வில் மாநில அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம், மாவட்டத்தலைவர் பா.தென்னரசு, செயலாளர்

.இளவரசன், அமைப்பாளர் உடுமலை வடிவேல், துணைச் செயலாளர் பூவை தமிழ்ச்செல்வன் மற்றும் தோழர்கள் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். தோழர்களுக்கு இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

No comments:

Post a Comment