சுரர்களின் ஒழுக்கக்கேடு - மறைமலையடிகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 30, 2021

சுரர்களின் ஒழுக்கக்கேடு - மறைமலையடிகள்

(கள்ளுண்டு. காமம் மிகுந்து சுரர்கள் - என்னென்ன செய்தனர் எனப் பட்டியலிடுகிறார். மறைமலை அடிகள் தம் "மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்" என்ற நூலில்! )

"ஆரிய மாந்தரும் அவரால் தெய்வ மாகக் - கொள்ளப்பட்டோரும் செய்த காமப்புன்செயல்கள் அவரெழுதி வைத்த நூல்களிலேயே காணப்படு கின்றன. பிரஜாபதி (பிரம்மா) காமங் காழ்ப்பேறித் - தன் புதல்வியைப் புணர்ந்து, பின்னர்த் தான் செய்த அத் தீவினையை நினைந்து மிக வருந் தினமை - சதபதபிரமாணம் (174) அய்த ரேய பிரமாணம் (3) 13) மத்ஸ்யபுராணம் (3-3249) முதலிய நூல்களில் வெளிப் படையாகச் சொல்லப் பட்டிருக்கின்றது. இந்திரன் அங்ஙனமே வெறி கொண்டு கவுதம முனிவரின் மனைவியான அசுலி கையைப் புணர்ந்தமை இராமாயண உத்தர காண்டத்தில் (30 19, 31) குறிக்கப் பட்டிருக்கின்றது.

விவஸ்வான் புதல்வரான யமனும் யமியும் தமையனுந் தங்கையுமா யிருந் தும், யமி தன் தமையனைப் புணர முயன் றமை இருக்கு வேதத்திலேயே (1010) நன் கெடுத்துச் சொல்லப்பட்டது” "வருணப் பிரகாசம் என்னும் வேள்வியை வேட் கும் குரவன் தன் மனைவி பலரைக் கூடி யிருக்க வேண்டுமெனக் கருதி, அவளை அவன் வேள்விக் களத்திற்குக் கொண்டு வருகையில் நீ எவ்வெவரோடு கூடி யிருந்தனை?' எனக் கேட்டு அவள் வாய் மொழி வினவுதலைச் சதபத பிராமணம் (25.2,20) கூறுதல் கொண்டும் பண்டை ஆரியப் பார்ப்பன மாதரின் காம வொழுக்கம் இனைத்தென்பது துணியப் படுகின்றதன்றோ?" என்று மேலும் சுரர்களின் ஒழுக்கச் சிறப்பை" மறை மலை அடிகள் விளக்குகிறார்.

இப்பேர்ப்பட்ட குடிகேடர்கள், சூதா டிகள், காமவெறியர்கள்தாம் சுரர்கள். இவையேதும் இல்லாத மக்களை இக் கேடர்கள் அசுரர்கள் எனக் குறிப்பிடத் தொடங்கி - தஸ்யுக்கள், தாசர்கள். இராட் சதர்கள் என்றெல்லாம் பெயர் சூட்டி மகிழ்ந்தனர். அசுரர்களை, இராக்கதர் களைக் கொன்றமை எனப் புனைகதை எழுதி வைத்து விழாக் கொண்டாடுகின் றனர். அதன் வழியே, நவராத்திரி, தீபா வளி விழாக்கள் சுரர்களால் அசுரர்கள் அழிக்கப்பட்டனர் எனும் வெற்றி விழாக் கள் எனஅவாளால்" வழங்கப்படுகின் றன. இம் மயக்கம் தெளிந்து மதிபெறும் நாள் தம்மவர்க்கு வரும் நாள் எந்நாளோ?

(ஆதாரம்: 'மாணிக்கவாசகர் - வரலாறும் காலமும்' இரண்டாம் பகுதி)


No comments:

Post a Comment