அமெரிக்காவில் கருக்கலைப்புக்கு எதிரான சட்டத்துக்கு தடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 9, 2021

அமெரிக்காவில் கருக்கலைப்புக்கு எதிரான சட்டத்துக்கு தடை

டெக்சாஸ், அக். 9- அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத் தில் கருக்கலைப்புக்கு எதிராக சட்டம் கொண்டு வரப்பட் டது. அந்த மாகாணத்தை ஆளும் குடியரசு கட்சி கொண்டு வந்த இந்த சட்டம், நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பெண்கள் அமைப்புகள் போராட்டங்களை யும் நடத்தினர்.

இந்த சட்டத்துக்கு எதிராக அங்குள்ள மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை நீதிபதி ராபர்ட் பிட்மேன் விசாரித்து, அந்த சட்டத்துக்கு அதிரடி தடை விதித்து தீர்ப்பு அளித்தார். 113 பக்கங்களைக் கொண்ட அந்த தீர்ப்பில் கூறி இருப்பதாவது:- செப்டம்பர் 1-ஆம் தேதி இந்த சட்டம் நடைமுறைக்கு வந்தது முதல், அரசியல் சாசனத்தின் மூலம் பாதுகாக்கப்படுகிற வழிக ளில், பெண்கள் தங்கள் வாழ்வின் மீதான கட்டுப்பாட்டைக் கொண்டிருப்பது சட்டவிரோதமாக தடுக்கப்பட்டுள்ளது. இந்த இழப்பை இந்த நீதிமன்றம் இன்னும் ஒருநாள் கூட அனுமதிக்காது. இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த தீர்ப்பை அமெரிக்க அதிபர் மாளிகை வரவேற்று உள்ளது. பெண்களின் அரசியல் சாசன உரிமைகளை மீட்டெடுப்பதில் இது ஒரு முக்கியமான நடவடிக்கை என அமெரிக்க அதிபரின் வாசிங்டன் வெள்ளை மாளிகை கருத்து தெரிவித்துள்ளது. ஆனால் கருக்கலைப்புக்கு எதிரான குழு இந்த தீர்ப்பை விமர்சித்துள்ளது. நீதிபதிகள் கருக்கலைப்பு தொழிலுக்கு சாதகமாக தீர்ப்பளித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து டெக்சாஸ் மாகாணத்தின் சார்பில் உடனடியாக மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

ஆண்டு இறுதிக்குள் 40 விழுக்காடு மக்களுக்கு தடுப்பூசி செலுத்த

உலக சுகாதார அமைப்பு திட்டம்

ஜெனீவா, அக். 9- உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டெட்ராஸ் அதானம் வெளியிட்டுள்ள செய்தி யில், நடப்பு ஆண்டு இறுதிக்குள் ஒவ்வொரு நாட்டிலும் 40 சதவீத மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும்.

இதேபோன்று, வருகிற 2022ஆம் ஆண்டு மத்தியில் 70 சதவீதம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தவும் திட்டமிடப்பட்டு உள்ளது என கூறியுள்ளார்.

இந்த இலக்குகளை எட்டுவதற்கு 1,100 கோடி கரோனா தடுப்பூசி டோஸ்கள் தேவைப்படும் என்றும் கூறியுள்ளார்.  உலக அளவில் மாதம் ஒன்றுக்கு 150 கோடி தடுப்பூசி டோஸ்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.  இதனால், நம்முடைய இலக்குகளை அடைவதற்கு தேவையான விநியோகம் உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment