பரிமாற்றம்
தினமும் ரூ. 5 லட்சம் வரை டிஜிட்டல் முறையில் பணப் பரிமாற்றம் செய்யலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
கண்டுபிடிப்பு
அய்தராபாத்தை சேர்ந்த ஹெடேரோ மருந்து நிறுவனத்தில் கணக்கில் வராத ரூ.550 கோடி வருவாய் கண்டுபிடிப்பு.
தட்டுப்பாடு
இந்தியாவில் நிலக்கரி பற்றாக்குறை காரணமாக டில்லி, ஆந்திரா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் மின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
கனமழைக்கு...
தமிழ்நாட்டில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது.
ரத்து
அ.தி.மு.க. ஆட்சியில் அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள் மீது தொடரப்பட்ட 52 அவதூறு வழக்குகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மாறும்
கரோனா வைரஸ் தொற்றானது, சாதாரண ஜலதோஷ வைரஸ் போல மாறிவிடும். ஆனால் அதற்கு இன்னும் நீண்ட காலம் ஆகும் என இங்கிலாந்து மருத்துவ நிபுணர் சர் மால்கம் கிராண்ட் தெரிவித்துள்ளார்.
மன்னிப்பு
பேஸ்புக், வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் சேவை இந்த வாரத்தில் மீண்டும் முடங்கியதால் முகநூல் நிர்வாகம் பயனாளிகளிடம் மன்னிப்புக் கோரியது.
பாதிப்பு
உலகம் முழுவதும் கரோனாவால் பாதிப்பு அடைந் தோர் எண்ணிக்கை 23.79 கோடியைக் கடந்துள்ளது.
இடிப்பு
உத்தரப்பிரதேசத்தில் கோயில் இடிப்புக்கு எதிராக மனுத்தாக்கல் செய்தவருக்கு உச்சநீதிமன்றம் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment