தமிழ்நாட்டில் மேலும் ஊரடங்கு தளர்வுகள் : முதலமைச்சர் உத்தரவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 15, 2021

தமிழ்நாட்டில் மேலும் ஊரடங்கு தளர்வுகள் : முதலமைச்சர் உத்தரவு

சென்னை, அக்.15 தமிழ்நாட்டில் பல்வேறு தளர்வுகளுக்கு அனுமதி அளித்து முதலமைச்சர் மு..ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.

இது தொடர்பாக, முதல மைச்சர் மு..ஸ்டாலின் நேற்று (14.10.2021) வெளியிட்ட உத்தரவு:

தமிழ்நாட்டில் கரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், அரசு ஆணை எண்.631. வரு வாய் மற்றும் பேரிடர் மேலாண் மைத் துறை. நாள்: 05.10.2021 இன்படி, 31.10.2021 காலை 6.00 மணி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறை யில் இருந்து வருகிறது.

எதிர்வரும் விழாக் காலங் களில், கரோனா நோய்த் தொற் றுப் பரவலைத் தொடர்ந்து கண்காணித்து கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கை கள் குறித்தும், அண்டை மாநி லங்களில் நோய்த் தொற்று நிலையினைக் கருத்தில் கொண் டும், தலைமைச் செயலகத்தில் என் தலைமையில் 13.10.2021 அன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அதன் அடிப்படையில், பொதுமக்கள் அனைவரும் எதிர்வரும் விழாக் காலங்களில், கூட்டம் கூடுவதை தவிர்க்கு மாறும் பொது இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிவ தோடு, தனிமனித இடைவெளியினைக் கண்டிப்பாகக் கடைப் பிடிக்குமாறும், மாவட்ட நிர் வாகம், பெருநகர சென்னை மாநகராட்சி, மருத்துவத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்பு கள் மூலம் நடத்தப்படும் தடுப் பூசி முகாம்களுக்குச் சென்று பொதுமக்கள் தடுப்பூசி செலுத் திக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கிறேன்.

விழாக் காலங்களில் பொது மக்கள் அத்தியாவசியத் தேவை களுக்காகக் கடைகளுக்குச் செல் வதைக் கருத்தில் கொண்டு, இன்று முதல் ஏற்கெனவே செயல்பட அனுமதிக்கப்பட் டுள்ள அனைத்து வகைக் கடை கள், உணவகங்கள் மற்றும் அடு மனைகள் இரவு 11.00 மணிவரை இயங்க அனுமதிக்கப்படுகிறது.

மேலும், அனைத்து வழி பாட்டுத் தலங்களிலும் வெள்ளி,  சனி, ஞாயிறு உட்பட அனைத்து நாட்களிலும் பொதுமக்கள் வழிபாட்டுக்கு அனுமதி அளிக் கப்படுகிறது.

அனைத்து தனிப்பயிற்சி நிலையங்கள், அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் கள் ஆகியவையும் இன்று முதல் செயல்பட அனுமதிக்கப்படுகி றது.

1-11-2021 முதல் தளர்வுகள்

மேலும், பின்வரும் செயல் பாடுகளுக்கு 1-.11-.2021 முதல் அனுமதி அளிக்கப்படுகிறது.

* மாவட்ட நிர்வாகத்தால் நடத்தப்படும் மாதாந்திர மக்கள் தொடர்பு முகாம்களை நடத்தலாம்.

*தனியார் நிறுவனங்கள் நடத்தும் பொருட்காட்சிகள் உரிய கரோனா தடுப்பு வழி காட்டு நெறிமுறைகளைப் பின்பற்றிச் செயல்படலாம்.

* மழலையர் விளையாட்டுப் பள்ளிகள், நர்சரி பள்ளிகள், அங்கன்வாடி பள்ளிகள் முழு மையாகச் செயல்படலாம். காப்பாளர், சமையலர் உட்பட அனைத்துப் பணியாளர்களும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்.

* ஞாயிற்றுக்கிழமைகளில் கடற்கரைக்குச் செல்ல பொது மக்களுக்கு அனுமதி.

* திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகளில் 100 நபர்கள் பங்கு பெற அனுமதி.

* இறப்பு சார்ந்த நிகழ்வு களில் 50 நபர்கள் கலந்து கொள்வதற்கு அனுமதி

ஏற்கெனவே அனுமதிக்கப் பட்டுள்ள செயல்பாடுகள் உரிய கட்டுப்பாடுகளுடன் தொடர்ந்து அனுமதிக்கப்படும்.

திருவிழாக்கள், அரசியல், சமுதாய மற்றும் கலாச்சார நிகழ்வுகளுக்கு நடைமுறையிலுள்ள தடை தொடரும்.”

இவ்வாறு முதலமைச்சர் மு..ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.

No comments:

Post a Comment