திருச்சி, அக். 15- குடுகுடுப்பைக்காரன் சொன்னதை நம்பி தாலி சங்கிலியை பறிகொடுத்த பெண் மன உளைச்சலில் தற்கொலை செய்துகொண்டார்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவானைக்கோவில் பகுதியை சார்ந்தவர் சுகந்தி. இவர் சம்பவத்தன்று வீட்டி லிருக்கும்போது அவரது வீட்டிற்கு குடுகுடுப்பைக்காரன் வேடத்தில் திருடன் வந்துள்ளான். இதனை அறியாத பெண் மணி அவன் சொல்வதை ‘அருள்வாக்கு' என எண்ணி யுள்ளார். குடுகுடுப்பைக்காரன் என்ற பெயரில் வந்த திருடனோ, உனக்கு தாலி தோசம் உள்ளது, உனது கணவன் உயிருக்கு ஆபத்து என கதையை அளந்துவிட, பதறிப் போன பெண்மணி பரிகாரம் கேட்டுள்ளார். அவரிடம் தாலிதோசம் என்று கூறி தங்க தாலி சங்கிலியை வாங்கியவன் தாலியை எடுத்துகொண்டு ஓடிவிட்டான்.
நகையை பறிகொடுத்த பெண்மணிக்கு தாமதமாக நிலை உணர்வுக்கு வர தாலி பறிபோன கவலையில் சுகந்தி வீட்டில் தனிமையில் இருந்து புலம்பியுள்ளார். பின்னர், நகையை பறிகொடுத்துவிட்டோமே என்ற மன உளைச்சலில் அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த திருவானைக் காவல் காவல் துறையினர், நிகழ்விடத்திற்கு இடத்திற்கு விரைந்து சுகந்தியின் உடலை உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நியாயவிலைக் கடைகள் காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை திறக்க உத்தரவு
சென்னை, அக். 15- நவம்பர் 1ஆம் தேதி முதல் 3ஆம் தேதி வரை காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை நியாய விலைக் கடைகள் திறந்து வைக்க உணவு வழங்கல் துறை சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.
உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் தலைமை யில் கடந்த 11ஆம் தேதி நடைப்பெற்ற ஆய்வுக்கூட்டத்தில், 2021 பண்டிகையை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களும் பயன்பெறும் வகையில் நவம்பர் 2021 மாதத்திற்கான சிறப்பு அத்தியாவசியப் பொருட்கள் அதிக பட்சமாக முன்நகர்வு முடிக்க வேண்டும் என உத்தரவிடப் பட்டது. அதன்படி, நவம்பர் 1ஆம் தேதி முதல் 3ஆம் தேதி வரையிலான தினங்களில் நியாயவிலைக் கடைகள் காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை திறக்கப்பட வேண்டும் எனவும், குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுவதை உறுதி செய்திட வேண்டும் எனவும் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை உத்தரவிட்டுள்ளது.
இலங்கை கடற்படையினரின் தொடரும் அட்டூழியம்
தமிழ்நாட்டு மீனவர்கள் 23 பேர் கைது
நாகை, அக். 15-நாகை துறைமுகத்தில் இருந்து கடந்த 11ஆம் தேதி அக்கரைப்பேட்டை, சமந்தன்பேட்டை, சந்திரபாடி, புதுப்பேட்டை, பெருமாள்பேட்டை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த இருபத்தி மூன்று மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.
இந்த நிலையில் 13.10.2021 அன்று இரவு 8 மணி அளவில் கோடியக்கரை தென்கிழக்கே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இரண்டு விசைப்படகையும், படகில் இருந்த 23 மீனவர்களையும் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்களிடம் காங்கேசன்துறை கடற்படை முகாமில் வைத்து விசாரணை மேற்கொள்ளப் பட்டு வருகிறது. இலங்கை கடற்படையினர் தமிழ்நாட்டு மீனவர்களை கல்வீசி தாக்குவது, மீனவர்களின் படகுகளை சேதப்படுத்துவது, உயிரையும் பொருட்படுத்தாமல் தங்க ளின் வாழ்வாதாரத்துக்காக மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வரும் மீனவர்களை நடுக்கடலில் பிடிப்பது, துன்புறுத்துவது, கைது செய்வது, அவர்களின் பொருள்களை பறிமுதல் செய்வது என இலங்கை கடற்படையினரின் அட்டூழியங்கள், அத்துமீறல்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. 23 பேர் கைதுசெய்யப்பட்டதானது மீனவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரோனாவால் இறந்தால் 3 ஆண்டுகளுக்கு மாதம் தோறும் ரூ.5,000 வழங்கப்படும்
கேரள அரசு அறிவிப்பு
திருவானந்தபுரம், அக். 15- குடும்பத்துக்கு வருமானம் ஈட்டித்தருபவர் கரோனாவால் இறந்தால், அந்த குடும்பத் துக்கு 3 ஆண்டுகளுக்கு மாதம் தோறும் ரூ.5,000 வழங்கப் படும் என கேரளா அரசு அறிவித்துள்ளது. கேரளா அல்லது வேறு எங்கு இறந்திருந்தாலும் இந்த நிவாரணம் பொருந்தும் என்று கேரளா முதலமைச்சர் பினராயிவிஜயன் விளக்க மளித்துளளார்.
கோயில் நிலங்கள் மற்றவர்கள் பெயரிலிருப்பின் பட்டாக்கள் ரத்து
மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை, அக். 15- கோயில் நிலங்கள் மற்றவர்கள் பெயரிலிருப் பின், அந்த பட்டாக்களை ரத்து செய்ய அறநிலையத்துறை ஆய்வாளர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே வடசேரியைச் சேர்ந்த பொன்னம்பலம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், ‘‘குளித்தலை தாலுகா ராச்சாண்டார் திருமலை கிராமத்தில் சோழ மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட வீரையாச்சலே சுவரர் கோயில் உள்ளது. இந்தக் கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் யூடிஆர் திட்டத்தில் தவறுதலாக குறிப்பிடப்பட்டு வீரையாச்சலேசுவரர் கோயில் மேனேஜர், அய்.பூவாயி, பெரியக்காள், ராஜாமணி என்ற பெயர்களில் பட்டா பதிவாகி யுள்ளது. எனவே இந்த பட்டாக்களை ரத்து செய்து, வீரையாச்சலேசுவரர் கோயில் பெயரில் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட வேண்டும்’’ என கூறி யிருந்தார். இந்த மனுவினை நீதிபதிகள் துரைச்சுவாமி, முரளிசங்கர் அமர்வு விசாரித்தனர். அரசு தரப்பில், ‘பட்டாவை ரத்து செய்யக்கோரி பரிந்துரைக்கப்பட்டுள்ளது, பட்டாக்களை ரத்து செய்ய மேல்நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், கோயில் நிலங்களுக்கு மற்றவர்கள் பெயரில் பட்டாக்கள் இருப்பின் அவற்றை ரத்து செய்ய அறநிலையத்துறை ஆய்வாளர் விரைந்து நட வடிக்கை எடுக்க வேண்டும். பட்டாக்களை ரத்து செய்வது தொடர்பாக அறநிலையத்துறை ஆய்வாளர் மேல்முறையீடு செய்தால், அதை குளித்தலை வருவாய்த்துறை சட்டத்திற்கு உட்பட்டு விரைந்து முடிக்க வேண்டும்’ என உத்தர விட்டுள்ளனர்.
No comments:
Post a Comment