செவ்வாய்க் கோளில் இரண்டு ஆண்டு களாக அதன் மேற்பரப்பில் இறங்கி ஆய்வு செய்துவரும் ஆய்வுக்கலன் ரோவர் பெர்சவரன்ஸ் அங்கு உள்ள கிரனைட் பாறையைத்துளைத்து அதன் மாதிரியை சோதனை செய்து பூமிக்கு அனுப்பியது. மேலும் செவ்வாய் மாலை நேர சூரியன் மறைவைப் படம் பிடித்து அனுப்பியது.
மேலும் அங்கு தரைத்தளத்தில் பரவியுள்ள கார்பண்டை ஆக்ஸ்சைடிலி ருந்து சிறிதளவு ஆக்ஸிஜனையும் தயா ரித்து அதனை எரிபொருளாக்கி சோதனை செய்து அதில் வெற்றியும் பெற்றது,
தற்போது
நீண்ட பள்ளத்தாக்குப் பகுதியை தொடர்ந்து ஆய்வு
செய்து பூமிக்கு அதன் படத்தை அனுப்பியது,
அந்தப்படத்தை ஆய்வு செய்த போது
அது ஆய்வு செய்த தரைதளம்
300 கோடி ஆண்டுகளுக்கு முன்பு நன்னீராக வெள்
ளப் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டு இருந்த ஒரு ஆற்றின்
பாதை என்று கண்டறியப் பட்டது,
ஏற்கெனவே கடல் ஏரி மற்றும் சிறிய நீர் நிலைகள் அங்கு இருந்ததையும் இதற்கு முன்பு அனுப்பிய க்யுரியோசிடி ரோவர் இறங்கிய பகுதியே வற்றிப்போன ஏரியின் நடுப்பகுதி என கண்டுபிடிக்கப்பட்டது, இந்த நிலையில் தற்போது அங்கு ஆறுகள் ஓடிய தடமும் கிடைத்துள்ளது.
இதன்மூலம் செவ்வாய் உயிரோட்டம் உள்ள கோளாக இருந்ததும், அதன் காந்தப் புலன் விலகிய பிறகு அதன் நிலையற்ற சுழற்சி காரணமாக பருவநிலை சீர்கெட்டு ஓசோன் படலம் விலகி செவ்வாய் உயிர் கோளம் ஒன்று உள்ளதைப்போல் மாறி விட்டது என்பது மேலும் உண்மையாகி வருகிறது.
ஒருவேளை அங்கு உயிரினங்கள் இருந்திருந்தால் அது எவ்வகையில் இருந் திருக்கும் என்பதுதான் வானியல் ஆய்வா ளர்கள் முன் இருக்கும் பெரிய கேள்வி ஆகும்.
No comments:
Post a Comment