பன்முக ஆற்றலாளர் நீதியரசர் மாயூரம் வேதநாயகம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 16, 2021

பன்முக ஆற்றலாளர் நீதியரசர் மாயூரம் வேதநாயகம்

இரா.முல்லைக்கோ

தமிழின்(ல்) முதல் புதினத்தைப் படைத்தவரும், மறுமலர்ச்சிக் கவிஞரும், சமூக சீர்திருத்தவாதியுமான மாயூரம் வேத நாயகம்  (பிள்ளை) திருச்சி மாவட்டம் குளத் தூரில் 1826ஆம் ஆண்டு அக்டோபர் 11ஆம் நாளில் பிறந்தார்.

கல்வி: தனது தந்தையாரிடம் கல்வி யைத் தொடங்கியவர், தமிழ், ஆங்கில கல்வியை தியாகராசரிடம் பயின்றார். சிறு வயதிலேயே எழுதுவதில் ஆர்வமும் ஆற்றலும் கொண்டிருந்தார். திருமணம், விருந்தினர்கள் கூடும் விருந்து போன்ற நிகழ்வுகளில் நகைச்சுவைக் கவிதைகள் படித்து அனைவரையும் மகிழ்வுறச் செய் வது அவரது வாடிக்கையாகும்.

நீதிமன்றப் பணி: நீதி மன்றத்தில் மொழி பெயர்ப்பாளர் மற்றும் பதிவாளராகப் பணியாற்றினார். பின்னர் தரங்கம் பாடியில் முன்சீப் பணியில் சேர்ந்தார். அதற்கு பிறகு மாயூரம் மாவட்ட முன்சீப்பாக 13 ஆண்டு கள் பணிபுரிந்தமையால், மாயூரம் வேத நாயகம் (பிள்ளை) என்றே அழைக்கப் பட்டார். பின்னாளில் இவ்வூரின் பெயர் மாயவரம் என்று மருவி, தற்போது மயிலாடு துறை என வழங்கப்பட்டு வருகிறது.

புதினம் உருவாக்கம்: மாயவரம் நகர் மன்றத் தலைவராகவும் பணியாற்றியுள் ளார். இந்த காலச்சூழலில் தமிழின் முதல் புதினமானபிரதாப முதலியார் சரித்திரம்எனும் நூலைப் படைத்தார். மேலும் 15 நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். மேலும் இசைக்கலையின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டு வீணை வாசிப்பதில் வல்லவராகத் திகழ்ந்தார்.

உயர்சிந்தனை: வாழ்க்கை நெறிகள், பொது நீதிகள், பெண் கல்வி, ஒற்றுமை உணர்வு, புதிய சிந்தனைகள், முற்போக்குக் கருத்துகள் ஆகியவை இவரது கவிதை களின் கருப்பொருளாய் அமைந்தன. மட மையிலும், மூடத்தனத்திலும் மூழ்கியிருந்த சமுதாயத்தில் உணர்ச்சியும் எழுச்சியும் ஊட்டுவனவாக இவருடைய நூல்கள் அமைந்தனவென்றே கூறலாம். பெண் களின் முன்னேற்றத்திற்கு கல்வியே முதன் மையானது என்ற சிந்தனையுடையவராக இருந்தார்.

அறிஞர்களின் நட்பு: வேதநாயகம் அவர்களின் சமகாலத்து தமிழ் அறிஞர்கள் மீனாட்சி சுந்தரனார், வள்ளல் இராமலிங்க அடிகள், திருவாவடுதுறை மடத்தின் அதி பர் சுப்பிரமணிய தேசிகர், கோபால கிருஷ்ண பாரதியார் ஆகியோர்களுடன் நல்ல நட்பு கொண்டிருந்தார்.

தீர்ப்பு மொழியாக்கம்: 1805 ஆம் ஆண்டு முதல் 1861 ஆம் ஆண்டு வரை யிலான நீதிமன்றத் தீர்ப்புகளை ஆங் கிலத்திலிருந்ததை தமிழில் மொழி பெயர்த்துசித்தாந்த சங்கிருதம்என்ற நூலாக வெளியிட்டார். தீர்ப்புகளை முத லில் மொழி பெயர்த்த பெருமைக்கு உரிய வர். சட்ட விதிகளைத் தொகுத்து ஆங் கிலத்தில் முதலில் வெளியிட்டார்.

இலக்கிய வளர்ச்சி: தமிழ் உரை நடையை வளம் பெறச் செய்த முன்னோடி களில் தலைசிறந்தவராகக் கருதப்படுகிறார். இவரது கட்டுரைகள், பெண் கல்வி, தாய் மொழிப்பற்று, நல்லாட்சி, நீதிநெறிகள் என பல நற்கருத்துகளை உள்ளடக்கியவை. இவை தமிழில் கட்டுரை இலக்கிய வளர்ச் சிக்கு முன்னோடியாக அமைந்தன என லாம்.

பெண்களுக்கான பள்ளி: பெண் கல்வி குறித்து இவர் எழுதிய கட்டுரைகள் உரை நடைச் சிறப்புக்கு சான்றாக விளங்கு கின்றன. மாயவரத்தில் பெண்கள் பள்ளி யைத் தொடங்கினார். இதுவே தமிழ்நாட்டில் பெண்களுக்காகத் தொடங்கப்பட்ட முதல் பள்ளியாகும்.

கொடையாளர்: இவரது காலத்தில் தமிழ்நாட்டில் மிகப் பெரிய பஞ்சமும் வறட்சியும் ஏற்பட்டபோது, தன் சொத்துகள் அனைத்தையும் இனாமாக வழங்கினார். குழந்தைத் திருமணம், உடன்கட்டை ஏறும் வழக்கங்களை கடுமையாக எதிர்த்தார். தமிழ் இலக்கிய வரலாற்றில் திருப்பு முனையை ஏற்படுத்தியவர்.  மறுமலர்ச்சிக் கவிஞர், சமூக சீர்த்திருத்தவாதி எனப் போற்றப்படும் வேதநாயகம் அவர்கள் 1889ஆம் ஆண்டு தனது 63ஆம் அகவையில் மறைவெய்தினார். இவரது உடல் மயிலாடுதுறை பேருந்து நிலையத்தி லிருந்து தஞ்சை செல்லும் சாலையில் 400 மீட்டர் தொலைவில் இடதுபுறம் உள்ள கல்லறைச் சதுக்கத்தில் அடக்கம் செய்யப் பட்டுள்ளது. அவரது மறைவு நாளில் பொது அமைப்புகளும், மக்களும் பெரும் அள வில் கூடி சிறப்பு செய்கின்றனர்.

No comments:

Post a Comment