குடந்தையில் தமிழர் தலைவர் பேட்டி
குடந்தை, அக்.4 'நீட்' இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது; மாநாடுகளும் - போராட்டங்களும் விரைவில் தொடங்கும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.
நேற்று (3.10.2021) குடந்தை சென்ற திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தார்.
அவ்விவரம் வருமாறு:
நீட் தேர்வினுடைய நோக்கம் ஏழை, எளியவர்களைக் காப்பாற்றுவது அல்ல
'நீட்' தேர்வு என்பது அரசமைப்புச் சட்டத் திட்டத்திற்கு விரோதமான ஒன்றாகும். மாநி லங்களின்மீது அவர்களுடைய ஒப்புதல் இல் லாமல் திணிக்கப்பட்ட ஒரு தேர்வாகும்.
நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் அமைக் கப்பட்ட குழு கொடுத்த அறிக்கையின்படி, அரசமைப்புச் சட்டத்தின் பல விதிகளுக்கு அந்தத் தேர்வு விரோதமாக இருப்பதோடு மட்டுமல்லாமல், நீட் தேர்வினுடைய நோக்கம் ஏழை, எளியவர்களைக் காப்பாற்றுவது அல்ல.
முழுக்க முழுக்க அது பணக்காரர்கள், வசதிபடைத்தவர்களுடையபிள்ளைகள் டாக் டர்களாக வருவதற்கும், அதில் பாரம்பரியமாகப் படித்துக்கொண்டிருக்கின்றவர்களும்வரக் கூடிய சூழல்தான் அதில் இருக்கிறது. புள்ளி விவரங்கள் அதனைத் தெளிவாகச் சொல்கின் றன.
தமிழில் படிக்கக் கூடியவர்களுக்கு வாய்ப் புகள் இன்னும் அறவே குறைந்திருக்கின்றன. இவையெல்லாவற்றையும் வைத்துப் பார்க்கும் பொழுது, இதை ஒழிக்கவேண்டும் என்ற நிலையில், திராவிட முன்னேற்றக் கழக அரசு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடரில், ஒரு மசோதாவை ஒருமனதாக நிறைவேற்றி இருக்கிறார்.
அந்த மசோதா ஒப்புதலுக்காக தமிழ்நாடு ஆளுநருக்கு அனுப்பப்பட்டு இருக்கிறது. இன்னும் ஒப்புதல் வராத நிலை. உடனடியாக ஆளுநர் ஒப்புதல் தரவேண்டும். இதை பொதுமக்களுடைய கருத்தாகத் தெரிவித்துக் கொள்கிறோம்.
நாடாளுமன்ற நிலைக் குழுவில் எடுத்த முடிவு
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத் தில்கூட, நாடாளுமன்ற நிலைக் குழுவில், எந்த மாநில அரசு நீட் தேர்விலிருந்து விலக்குக் கேட்கிறதோ, அந்த மாநிலத்திற்கு விதிவிலக்கு அளிக்கலாம் என்று முடிவெடுத்தார்கள்.
குறைந்தபட்சம் மற்ற மாநிலங்களுக்குச் செய்யவில்லை என்றாலும், தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், விதிவிலக்கு வேண்டும் என்பதற்கு நியாயமான காரணங்கள் இருக் கின்றன.
ஜெயலலிதா அம்மையார் அவர்கள் முதல மைச்சராக இருந்தபொழுது நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்குக் கொடுத்தார்கள்.
எனவே, இந்தியா முழுவதும் ஒரே நிலை என்று சொல்வதற்கு வாய்ப்பில்லை. படிப்புகள் வித்தியாசமாக இருக்கின்றன.
அதையும் தாண்டி, ஊழல்களை ஒழிப்ப தற்காகத்தான் நீட் தேர்வை கொண்டு வந்தி ருக்கின்றோம் என்று சொன்னதும் பொய்யாகி விட்டது.
காரணம்,ஆள் மாறாட்டம், 35 லட்சம் ரூபாய் கொடுத்து நீட் தேர்வு கேள்வித்தாள்களை வாங்கி தேர்வுகளை எழுதியிருக்கிறார்கள். பாடப் புத்தகங்களில் குளறுபடி இவை அத்த னையும் நடைபெற்று இருக்கின்றன.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில்...
ஆகவேதான், தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில், சட்டபூர்வமாக, ஒரு கமிட்டியின் பரிந்துரையை ஏற்று, ஒரு மசோதாவை நிறை வேற்றி இருக்கிறார்கள். அதற்கான காரண, காரிய விளக்கங்களை சொல்லியிருக்கிறார்கள்.
சட்டப் போராட்டமாக நடந்தாலும், மக்கள் போராட்டமாக நீட்டிற்கு எதிரான சூழல் இருக்கின்றது. இதுவரை 18 பிள்ளைகள் தங்களுடைய உயிரைப் போக்கிக் கொண் டிருக்கிறார்கள். நீட் ஒரு பலிபீடமாக இருக் கின்றது என்பதற்காகத்தான், ஒரு பெரிய பிரச்சார இயக்கத்தைக் கட்டக் கூடிய அளவில் இருக்கிறோம். பிரச்சாரமும், போராட்டமும் நடைபெறவிருக்கின்றன.
எங்கள் பயணத்தின் நோக்கம்!
கடந்த 21 ஆம் தேதி, சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில்,ஒத்தக்கருத்துள்ளவர்கள்அனை வரும்முடிவுசெய்து,பஞ்சாயத்துத்தேர்தல் கள் எல்லாம் முடிந்த பிறகு, தமிழ்நாடு முழுவதும், இந்த இயக்கத்தைப் பலப்படுத்தி, பரவலாக்கவேண்டும் என்பதற்கு அடை யாளமாக, பல முக்கிய ஊர்களிலும் நீட் தேர்வு எதிர்ப்பை அனைத்துக் கட்சிக் குழுவினரும் சேர்ந்து செய்யவேண்டும் என்று வந்தபொழுது, குடந்தையிலும் அதே முடிவினை எடுத்திருக்கிறார்கள். ஆகவே, அந்தப் பணியை நாங்கள் தொடருவோம். அது தான் இந்தப் பயணத்தினுடைய நோக்கமாகும்.
செய்தியாளர்: நீட் தேர்வு பிரச்சினை என்பது தேர்தல் பிரச்சாரத்திற்கு மட்டும் பயன் படுத்தப்படுகின்ற ஒரு சங்கதியாக இருக்குமா?
தமிழர் தலைவர்: தேர்தல் என்பது சில மாவட்டங்களில்தான் நடைபெறுகிறது. ஒரு பக்கத்தில் தேர்தல் நடைபெற்றாலும், தேர்தல் முடியும்வரை காத்திருக்க வேண்டாம் என்பதற்காக, நேற்று தஞ்சாவூர், இன்றைக்கு மாலை திருச்சிக்குச் செல்லவிருக்கிறோம்.
எல்லாக் கட்சியின் முக்கியத் தலைவர்களும் கலந்துகொள்ளக்கூடிய கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.
முக்கிய பெருநகரங்களில் கூட்டம்
முதலில் சென்னை, மதுரை, கோவை, திரு நெல்வேலி போன்ற முக்கிய பெருநகரங்களில் கூட்டம் நடத்தவேண்டும் என்று முடிவு செய்திருக்கிறோம்.
சில பகுதிகளில் ஊராட்சி மன்றத் தேர்தல் களில் அக்கட்சித் தலைவர்கள் ஈடுபட்டு இருக்கிறார்கள் என்பதற்காகவும்,
கரோனா காலகட்டம் என்பதால், அரசாங் கத்தால் ஊரடங்கு நீடித்திருப்பதாலும், இன்னும் அந்த ஆபத்து இருப்பதினால், பொது இடங்களில் மக்களைத் திரட்ட முடியாது.
நீட் தேர்வு ஒழிகின்ற வரையில், பல்வேறு வடிவங்களில் போராட்டம் தொடரும்
ஆகவே, முழு தளர்வுகள் வந்தவுடன், அனைத்துக் கட்சித் தலைவர்களையும் அழைத்து, நீட் தேர்வை எதிர்த்துத் தொடர் போராட்டங்கள் நடைபெறும். நீட் தேர்வு ஒழிகின்ற வரையில், பல்வேறு வடிவங்களில் போராட்டம் தொடரும்.
முதலில் பிரச்சாரத்தின்மூலம் மக்களை ஆயத்தப்படுத்துவது - பெரியார் அப்படித்தான் செய்தார் - 1951 இல் வகுப்புரிமை செல்லாது என்று சொன்னபொழுது செய்து காட்டினார்.
சமூகநீதியின் இன்னொரு அம்சம்தான் இது. அதற்காக மக்களை ஒன்று திரட்டி வருகிறோம்.
தமிழ்நாடுதான் நீட் தேர்வை எதிர்க்கிறது என்கிற நிலைமை மாறிப் போயிருக்கிறது. இப்பொழுது மேற்கு வங்கத்தில் கடுமையான எதிர்ப்பு இருக்கிறது. மகாராட்டிரத்தில் கடுமை யான எதிர்ப்பு இருக்கிறது. கருநாடகத்தில், உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் கடுமையான எதிர்ப்புகள் எழுந்திருக்கின்றன.
எல்லா மாநிலங்களிலும் நீட் தேர்வுக்கு எதிர்ப்புகள் வலுத்துக் கொண்டிருக்கின்றன
எனவே, எல்லா இடங்களிலும் நீட் தேர்வுக்கு எதிர்ப்புகள் வலுத்துக் கொண்டிருக்கின்றன.
எனவே, விரைவில் இப்போராட்டம் வலுப் பெறும்.
எனவே, உங்கள் மூலமாக என்னுடைய வேண்டுகோள் - தமிழ்நாட்டின் புதிய ஆளு நர் அவர்கள், இந்த மசோதாவிற்கு ஒப்புதல் தருவதற்குத் தாமதப்படுத்தக் கூடாது. அதே போன்று, குடியரசுத் தலைவரும் அந்த மசோதாவுக்கு ஒப்புதல் தரவேண்டும்.
போராட்டத்தை மக்கள்மீது திணிக்காதீர்கள்! மக்களுடைய உணர்வுகளைப் புரிந்துகொள்ளுங்கள்!!
அரசமைப்புச் சட்ட ரீதியாக ஒரு குழுவை அமைத்து, அறிஞர்கள் குழுவின் பரிந் துரையின்படி செய்யவேண்டும் என்பதற்கான வேண்டுகோளை வைக்கிறோம்.
போராட்டத்தை மக்கள்மீது திணிக்காதீர் கள். மக்களுடைய உணர்வுகளைப் புரிந்து கொள்ளுங்கள். அதுதான் மக்களாட்சியினு டைய தத்துவம் - ஜனநாயகமாகும்.
நன்றி, வணக்கம்!
- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர் கள் செய்தியாளர்களிடையே கூறினார்.
No comments:
Post a Comment