கூடங்குளம் அணுக்கழிவுகளை அணுமின் வளாகத்தில் சேமிக்க அளித்த ஒப்புதலை திரும்பப் பெற வேண்டும்: பிரதமருக்கு டி.ஆர்.பாலு எம்.பி. கோரிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 8, 2021

கூடங்குளம் அணுக்கழிவுகளை அணுமின் வளாகத்தில் சேமிக்க அளித்த ஒப்புதலை திரும்பப் பெற வேண்டும்: பிரதமருக்கு டி.ஆர்.பாலு எம்.பி. கோரிக்கை

சென்னை, அக்.8  கூடங்குளம் அணுக்கழிவுகளை அணுமின் வளாகத்தில் சேமிக்க அளித்த ஒப்புதலை திரும்பப் பெற வேண்டும்  என்று பிரதமருக்கு, டி.ஆர்.பாலு எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளார்.

கூடங்குளம் அணுமின் நிலையத் தில் இருந்து வெளியேறும் அணுக் கழிவுகளை கூடங்குளம் அணு மின்நிலைய வளாகத்திலேயே நிரந்தரமாக சேமித்து வைக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆனால், இந்திய அணுசக்தி ஒழுங்காற்று வாரியத்தின் ஒப்புத லுடன் கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்திலேயே அணுக் கழிவுகளை சேகரித்து வைக்கும் வகையில் சேமிப்பு கிடங்கை ஏற் படுத்த இந்திய அணுசக்தி ஒழுங் காற்று வாரியம் அனுமதி அளித் துள்ளது.

இது, உச்சநீதிமன்றம் உத்தரவை மீறும் செயலாகும்.

கூடங்குளம் அணு உலையில் இருந்து வெளியேறும் அணுக் கழிவுகள் ரஷ்யாவுக்கு திரும்ப எடுத்து செல்லப்படும் என்ற உத்தர வாதத்தின் அடிப்படையிலேயே அணு உலை அமைக்க அனுமதி அளிக்கப்பட்டது.

அணுக்கழிவுகளை ரஷ்யாவுக்கு எடுத்து சென்று கையாள்வதில் பல்வேறு பிரச்சினைகளை ரஷ்யா சந்தித்து வருகிறது.

இதன்காரணமாக அணுக்கழிவு களை திரும்ப எடுத்து செல்வதில் ரஷ்யா தயக்கம் காட்டி வருகிறது.

அணுக்கழிவுகளால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க நிரந்தர நிலத் தடி ஆழ்நிலை கிடங்கு உருவாக்கப் பட வேண்டும். இல்லாதபட்சத்தில்  கதிர் வீச்சால் பேராபத்து நேரிடும். மக்களிடையே உயிர் பாதுகாப்பு அச்சமும் பலமடங்கு அதிகரிக்கும்.

நிலத்தடி ஆழ்நிலை கிடங்கு இல்லாத நிலையில் கூடங்குளம் வளாகத்திலேயே தற்போது அமைக்கப்பட உள்ள சேமிப்புக் கிடங்கு காலப்போக்கில் நிரந்தர கிடங்காக உருவெடுத்து விடும். எனவே, கூடங்குளம் அணு உலை யில் இருந்து வெளியேறும் அணுக் கழிவுகளை ரஷ்யாவுக்கு அனுப்பி வைக்க ஒன்றிய அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

கூடங்குளம் அணுமின் நிலை யத்தில் இருந்து வெளியேறும் அணுக்கழிவுகளை கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்துக்கு உள்ளேயே சேமித்து வைக்கும் வகையில் சேமிப்பு கிடங்கு அமைக்க அனுமதி அளித்த இந்திய அணுசக்தி ஒழுங்காற்று வாரியத்தின் ஒப்புதலை ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும்.

உடனடி நடவடிக்கை

கூடங்குளம், கல்பாக்கம் உள் ளிட்ட அனைத்து அணுமின் நிலை யங்களின் அணுக்கழிவுகளை பாது காக்க நிரந்தர நிலத்தடி ஆழ்நிலைக் கிடங்கு உருவாக்கப்பட வேண்டும். இது, மக்கள் வசிக்காத நிலப்பகுதியில் கட்டப்பட வேண் டும்.

சென்னை, புதுச்சேரி மற்றும் தென் தமிழ்நாட்டில் வசிக்கும் கோடிக்கணக்கான மக்களின் உயிர் பாதுகாப்புடன் தொடர்புடைய அதிமுக்கியமான இந்த விஷயத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

No comments:

Post a Comment