பெரியார் பெருந்தொண்டர் ராசகிரி கோ.தங்கராசு மறைவு: வைகோ இரங்கல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 8, 2021

பெரியார் பெருந்தொண்டர் ராசகிரி கோ.தங்கராசு மறைவு: வைகோ இரங்கல்

சென்னை,அக்.8- பெரியார் பெருந் தொண்டர் ராசகிரி கோ.தங்கராசு மறைவுக்கு இரங்கல் தெரிவித்து .தி.மு.. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு,

திராவிடர் கழகத்தின் காப்பாளர்களாக பணியாற்றுபவர்களில் மூத்தவரும், மேனாள் செயலவைத் தலைவரும், பெரியார் சுயமரி யாதை பிரச்சார நிறுவனத்தின் மேனாள் துணைத் தலைவருமான ராசகிரி கோ.தங்கராசு அவர்கள் மறைந்த செய்தி கேட்டு துயரம் அடைந்தேன்.

தந்தை பெரியார் காலம் தொட்டு தஞ்சை மாவட்டத்தில் திராவிடர் கழகத்தை வளர்த் தெடுக்க அரும்பாடுபட்ட அய்யா கோ.தங்கராசு அவர்கள் திராவிடர் கழகம் நடத்திய அரசமைப்புச் சட்ட எரிப்புப் போராட்டம் உள்ளிட்ட பல போராட்டங்களில் கலந்துகொண்டு சிறை சென்றவர் ஆவார்.

97 வயதைத் தொட்ட அவர் வாழ்நாள் முழுதும் பெரியார் கொள்கை பரப்பும் பணியில் இளையவராகவே செயல்பட்டு சாதனை படைத்தவர் ஆவார்.

அவரது மறைவால் துயரில் மூழ்கியுள்ள திராவிடர் கழகத் தலைவர் மானமிகு அண்ணன் கி.வீரமணி அவர்களுக்கும், அவரது வழியில் திராவிடர் கழகம் வளர்க்கும் அன்புச் செல்வங்களான பூவானந்தம், பாண்டியன், மலர்கொடி, திலகவதி ஆகியோ ருக்கும் மற்றும் உள்ள உற்றார் உறவினர் களுக்கும் மறுமலர்ச்சி தி.மு.. சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள் கிறேன்.

இவ்வாறு வைகோ வெளியிட்டுள்ள இரங்கலில் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment