ஒன்றிய அமைச்சரின் மகன் கைது-காவல்
12 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை
லக்னோ,அக்.11- பாஜக ஆளும் உ.பி.யில் போராடிய விவசாயி கள்மீது காரை ஏற்றிக்கொலை மற்றும் அதனைத் தொடர்ந்து நடைபெற்ற கலவரம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். அவ்வழக் கில் ஒன்றிய பாஜக இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ராவை கைது செய்தனர். அவரை 14 நாட்கள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் கடந்த 3.10.2021 அன்று போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது கார் மோதிய சம்பவம் மற்றும் அதையடுத்து ஏற்பட்ட கலவரத் தில் 4 விவசாயிகள் 2 பாஜகவினர் உட்பட 8 பேர் இறந்தனர். விவசாயிகள் மீதுமோதிய காரில் ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா இருந்ததாகவும் அவரைக் கைது செய்ய வேண்டும் என்றும் விவசாயிகளும் எதிர்க்கட்சியினரும் வலியுறுத்தினர். சம்ப வம் நடந்தபோது காரில் தனது மகன் ஆசிஷ் மிஸ்ரா இல்லை என்று ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ரா கூறினார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக ஆசிஷ் மிஸ்ரா மீது உத்தர பிரதேச காவல்துறையினர் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பினர். 2-வது முறை சம்மனுக்குப் பின் கடந்த 9.10.2021 அன்று காலை 10.30 மணியளவில் காவல்துறையினர் முன் ஆசிஷ் மிஸ்ரா விசாரணைக்கு ஆஜரானார். விவசாயிகள் மீது கார் மோதிய சம்பவம் மற்றும் கலவரம் தொடர்பாக 12 மணி நேரத்துக்கும் மேலாக அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி னர். பின்னர் 9.10.2021 அன்றிரவு ஆசிஷ் மிஸ்ராவை கைது செய்தனர்.
கைதுக்கு பின் மருத்துவ பரிசோதனைகள் முடிந்து லக்கிம்பூர் நீதிமன்றத்தில் ஆசிஷ்மிஸ்ராவை காவல்துறையினர் ஆஜர்படுத்தினர். அவரை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. விசா ரணைக்கு ஆசிஷ் மிஸ்ரா ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்றும் கேள்விகளுக்கு மழுப்பலாக பதிலளித்ததாகவும் காவல் துறையினர் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment