தமிழ்நாட்டில் ஒமைக்ரான் வைரசை கண்டறியும் வசதி 12 அரசு ஆய்வகங்களில் அறிமுகம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 30, 2021

தமிழ்நாட்டில் ஒமைக்ரான் வைரசை கண்டறியும் வசதி 12 அரசு ஆய்வகங்களில் அறிமுகம்

சென்னை, நவ. 30- ஒமைக்ரான் வைரசை கண்டறியும் சோதனை வசதி தமிழ் நாட்டில் உள்ள 12 அரசு ஆய்வகங்களில் அறிமு கம் செய்யப்பட்டுள்ளது.

உருமாற்றம் அடைந்த புதிய கரோனா வைரசான பி.1.1.529 என்ற ஒமைக்ரான், தமிழ்நாட்டில் பரவாமல் இருக்க அரசு முன்னெச் சரிக்கை நடவடிக்கை களை எடுத்து வருகிறது.

அதன்படி பிரிட்டன் உள்ளிட்ட அய்ரோப்பிய நாடுகள், தென்னாப்பி ரிக்கா, பிரேசில், வங்க தேசம், சீனா, மெரிசியஸ், சிங்கப்பூர் உள்ளிட்ட 12 நாடுகளில் இருந்து தமிழ் நாடு வரும் பயணிகள், கூடுதல் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுவார்கள் என பொது சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

இந்நிலையில், ஒமைக் ரான் கரோனா உறுதி செய்யப்பட்ட நாடுகளில் இருந்து விமானங்கள் மூலம் வரும் பயணிகளுக்கு கோவை விமானநிலையத் தில் கரோனா பரிசோ தனை செய்யப்பட்டு வரு கிறது. அதன்படி, பயணிக ளிடம் இருந்து எடுக்கப் படும் சளி மாதிரிகள் உட னுக்குடன் பரிசோதனை கூடத்திற்கு அனுப்பப் பட்டு வருவதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே ஒமைக்ரான் வகை கரோ னாவை தடுக்க தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என்று தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ் ணன், அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், விமான நிலைய இயக்குநர்கள், பொது சுகாதாரத்துறை இயக்குநர், பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.

இந்நிலையில், ஒமைக் ரான் வைரசை கண்டறி யும் சோதனை வசதி தமிழ் நாட்டில் உள்ள 12 அரசு ஆய்வகங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை, கோவை, மதுரை, திருச்சி என 4 நகரங்களில் 12 அரசு ஆய்வகங்களில் இந்த சோதனை வசதி அறி முகம் செய்யப்பட்டுள்ள தாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. குறிப்பாக, சென்னையில் ஸ்டான்லி, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி, கிண்டி கிங் இன்ஸ்டி டியூட் ஆகிய அரசு ஆய் வகங்களில் தொற்று கண் டறியும் சோதனை வசதி ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

மேலும், இந்த ஆய்வ கங்களில் டேக்பாத் என்ற கிட் மூலம் பரிசோதனை செய்து முடிவுகள் அறி விக்க வழிவகை செய்யப் பட்டுள்ளது.

முதல்கட்டபரி சோதனையில் மரபணு மாற்றம் இருப்பது தெரிந்த பிறகு,  மரபணு பகுப் பாய்வு செய்யப்படுகிறது. இதன் முடிவுகள் தெரிய 7 நாட்கள் வரை ஆகும் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது என் பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment