சென்னை, நவ. 30- தமிழ்நாட் டில் யாருக்கும் ஒமிக்ரான் தொற்று இல்லை என்று அமைச்சர் மா.சுப்பிர மணியன் தெரிவித்தார்.
சென்னை தேனாம் பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள மாநில பொது சுகாதார ஆய்வகத்தில் முழு கவச உடை அணிந்து மருத்து வம் மற்றும் மக்கள் நல் வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று (29.11.2021) ஆய்வு மேற் கொண்டார்.
அப்போது, மருத்து வம் மற்றும் மக்கள் நல் வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் செல்வ விநாயகம், துணை இயக்குநர் ராஜு உள் ளிட்ட அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.
பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-
கரோனா வைரசின் தன்மைகளை கண்டறிவ தற்கு ஏராளமான அதி நவீன வசதிகள் கொண்ட ஆய்வகங்கள் தமிழ்நாட் டில் அரசும், தனியார் நிறு வனங்களும் நடத்திக் கொண்டு இருக்கிறார் கள். தமிழகத்தில் இது வரை 5 கோடியே 40 லட்சத்து 69 ஆயிரத்து 791 பேருக்கு ஆர்.டி.பி. சி.ஆர். பரிசோதனைகள் செய்யப்பட்டு இருக்கி றது. மாநில பொது சுகா தார ஆய்வகத்தில் இது வரை 23 லட்சம் சளி மாதி ரிகள் கொண்டு ஆர்.டி.பி. சி.ஆர். பரிசோதனை செய்யப்பப்பட்டு இருக் கிறது.
ஒமைக்ரான்
கரோனா மரபணு மாற்றத்தை தெரிந்து கொள்ள வசதியாக உயர் தரமான முழு மரபணு பரிசோதனை மய்யத்தை முதல்-அமைச்சர் கடந்த மாதம் திறந்து வைத்தார். இந்த மய்யத்தில் இது வரை 469 மாதிரிகள் மரபணு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு அதில் 95 சதவீதத்திற்கும் மேலாக அந்த சோதனைகளின் முடிவில் டெல்டா வகை வைரஸ் தான் என்பது கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இது வரை இந்த உயர்தரமான முழு மரபணு பரிசோத னைக்காக 6 ஆயிரத்து 714 மாதிரிகள் அனுப்பி வைக்கப் பட்டது. இதில் 4 ஆயிரத்து 618 மாதிரி களுக்கு பரிசோதனை முடிவுகள் வந்துள்ளது.
இந்த மாதிரிகளில் 96 சதவீதம் டெல்டா வகை வைரஸ் என தெரியவந்து உள்ளது. இப்பொழுது புதிதாக ஒமைக்ரான் வகை வைரஸ் உலகம் முழு வதும் ஒரு அச்சுறுத்தலை ஏற்படுத்திக் கொண்டிருக் கிறது. தமிழ்நாட்டில் கிளஸ்டர் பாதிப்பு இருக் கும் 8 வகையான இடங்க ளில், மாதிரிகள் சேகரிக் கப்பட்டு உடனடியாக இந்த முழு மரபணு பரி சோதனை செய்யப்படுகி றது. அப்படி செய்யப்பட் டதில் இதுவரை டெல்டா வைரஸ் வைரசாகவே இருந்து கொண்டு இருக் கிறது. யாருக்கும் ஒமிக் ரான் வைரஸ் தொற்று இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment