விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நடத்திய சமூகநீதி சமூகங்களின் ஒற்றுமை மாநாடு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 30, 2021

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நடத்திய சமூகநீதி சமூகங்களின் ஒற்றுமை மாநாடு

அரிலூர், நவ. 30- விடுதலை சிறுத் தைகள் கட்சி சார் பில்28.11.2021 மாலை  6 மணி அளவில் அரியலூரில்மாவட்ட செயலாளர் செல்வ நம்பி தலைமையில் கவிஞர் இள மாறன் முன்னிலையில் சமூக நீதி சமூகங்களின் ஒற்றுமை மாநாடு நடைபெற்றது. இலக் கிய தாசன் வரவேற்புரையாற் றினார். மதுரை சின்னப் பொண்ணு குழுவினர் இசை நிகழ்ச்சி நடத்தினர்.

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், திராவிடர் கழகபொதுச்செயலாளர் துரை சந்திரசேகரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னணி தோழர் இந்திரஜித், சட்டமன்ற உறுப்பினர்கள் . கண்ணன்,  கு.சின்னப்பா ஆகியோர் உரை யாற்றிய பின் விடுதலை சிறுத் தைகள் நிறுவனத் தலைவர் தொல் திருமாவளவன் சிறப்பு ரையாற்றினார்.

நிகழ்வில் பங்கேற்ற அனைத் துக்கட்சி நிர்வாகிகளுக்கு தொல் திருமாவளவன் நினை வுப் பரிசு வழங்கினார்.

நிகழ்வில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர் சமூக நீதி சமத்துவம் சமதர்மம் பெண்விடுதலை ஜாதி ஒழிப்பு சனாதன எதிர்ப்பு பற்றியதாக தலைவர்களின் உரை அமைந் தது. சமூகநீதி சமூகங்களின் ஒற்றுமை வலியுறுத்தப்பட்டது. நிகழ்வில் மாவட்டத் தலைவர் நீலமேகம், மாவட்ட செயலாளர் சிந்தனைச் செல் வன், மண்டல செயலாளர் மணிவண்ணன், மண்டலத் தலைவர் பொறியாளர் கோவிந்த ராசு, மண்டல இளைஞரணி செயலாளர் செந் தில், ஒன்றிய நிர்வாகிகள் முத்தமிழ்செல்வன் கோபால், திராவிடர் கழக தொழிலாளர் அணி செயலா ளர் சிவக்கொழுந்து வடலூர் கழக தலைவர் புலவர் ராவணன் இரா முத்தையன் வடலூர் பிர பாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கழகத்தின் சார்பில் அனை வருக்கும்  கைத்தறி ஆடை அணிவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment