முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
சென்னை,நவ.30- 12 எம்.பி.,க்கள் இடை நீக் கம் குறித்து திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் அவர்கள் சுட்டு ரையில் கண்டனம் தெரி வித்துள்ளார்.
குளிர்காலக் கூட்டத் தொடர் நாடா ளுமன்றத்தின் இரு அவை களிலும் நேற்று (29.11.2021) கூடியது. பிரதமர் மோடி அறிவித்திருந்தபடி வேளாண் சட்டம் ரத்து மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதன் பின்னர் மாநிலங்களவை யிலும் அந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. எனினும், எவ்வித விவாதமும் இல்லாமல் சட்டம் நிறை வேற்றப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதனால் எதிர்க் கட்சி எம்.பிக்கள் கடும் அமளியில் ஈடு பட்டு வந்தனர். குறிப்பாக மாநிலங்களவை தொடங்கியதிலிருந்தே எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலை யில், கடந்த மழைக்கால கூட்டத்தொடரில் கண்ணியக் குறைவாக நடந்து கொண்ட தாக எதிர்க்கட்சியை சேர்ந்த 12 எம்.பி.,க் களை நடப்பு குளிர்கால கூட்டத்தொடரில் இருந்து இடை நீக்கம் செய்து மாநிலங் களவை தலைவர் நடவடிக்கை எடுத் துள்ளார்.
இளமாறம் கரீம் (சிபிஎம்), பூலொ தேவி நேதம், ஷ்யா வெம்ரா, ஆர். போரா, ராஜமனி படேல், சையது நசிர் ஹூசைன், அகிலேஷ் பிரசாத் சிங், (காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள்). பினோய் விஸ்வம் (சிபிஅய்) தோலா சென் -ஷாந்தா சேத்ரி (திரிணாமூல் காங்), பிரியங்கா சதுர்வேதி -அனில் தேசாய், (சிவசேனா) ஆகிய எதிர்க்கட்சி களைச் சேர்ந்த 12 எம்.பிக் களை நடப்பு குளிர்கால கூட்டத்தொடரில் இருந்து இடை நீக்கம் செய்ததற்கு பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் அவர்கள் கண்டனம் தெரிவித்து தம் சுட்டுரையில் வெளியிட்டுள்ள பதிவில், மாநிலங்களவையில் 12 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப் பட்டதற்குக் கண்டனத்தைப் பதிவு செய்கி றேன். இடைநீக்க நடவடிக்கை நாடாளு மன்றத்தின் ஜனநாயக மாண்பைக் குறைக் கும் செயல். இடைநீக்க நடவடிக்கையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இவ் வாறு அவர் சுட்டுரையில் பதிவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment