வாசிங்டன், நவ. 30- 50 பிறழ்வு களைக் கொண்டுள்ள கரோனா வைரசான ‘ஒமிக் ரான்’ தென் ஆப்பிரிக்கா வில் கண்டறியப்பட்டுள் ளது.
இந்த புதிய வகை ஒமைக்ரான் வைரஸ் கார ணமாக உலகின் பல்வேறு நாடுகள் தென் ஆப்பி ரிக்கா உள்பட ஆப்பிரிக்க நாடுகளுடனான விமா னப் போக்குவரத்தை ரத்து செய்துள்ளன.
அதேவேளை தென் ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியா வரும் பயணி களுக்கும் ஒன்றிய அரசு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.
இந்நிலையில், ஒமைக் ரான் வைரஸ் அதிக பாதிப்புகளை ஏற்படுத் துமா? என்பது குறித்து இன்னும் தெரிய வில்லை என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பு கூறுகையில் புதிதாக கண்டறியப்பட்டுள்ள ஒமைக்ரான் வைரஸ் மிக வும் வேகமாக பரவக் கூடுமா என்பது குறித்து இதுவரை தெரியவில்லை.
அதேபோல், வேகமா கப்பரவக்கூடிய டெல்டா வகை கரோனா மற்றும் பிற வகை கரோனா வைர சுடன் ஒப்பிடும் போது இந்த ஒமைக்ரான் வைரஸ் அதிக வேகமாக பரவும் அல்லது அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை உறுதி செய்ய இதுவரை எந்தவித தரவுகளும் இல்லை.
ஒமைக்ரான் வைரஸ் அதிக பாதிப்புகளை ஏற் படுத்துமா? என்பது குறித்து இதுவரை தெரிய வில்லை. ஒமைக்ரான் வகை வைரசுக்கான அறிகுறி கள் பிற வைரசுகளின் அறிகுறிகளுடன் மாறு பட்டவை என்பதை உறுதி செய்ய எந்த வித தகவல்களும் இல்லை’ என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment