‘தமிழ்நாடு தினம்’ ஜூலை 18-ஆம் தேதி கொண்டாடுவது பொருத்தமானது : வைகோ அறிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 2, 2021

‘தமிழ்நாடு தினம்’ ஜூலை 18-ஆம் தேதி கொண்டாடுவது பொருத்தமானது : வைகோ அறிக்கை

சென்னை, நவ. 2- மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கை வருமாறு: மொழிவாரி மாநிலங்கள் அமைவதற்கு முன்பு, சென்னை மாகாணம், கருநாடகம், கேரளா ஆகிய மூன்றையும் இணைத்துதட்சிணப் பிரதேசம்அமைக்கும் திட்டத்தை நேரு அரசு முன்வைத்தபோது, தந்தை பெரியார் கடுமையாக எதிர்த்தார். அப்போதைய முதல்-அமைச்சர் காமராஜர், பெரியாரின் கருத்தை ஆதரித்து பிரதமர் நேருவிடம்தட்சிணப் பிரதேசம்அமையக் கூடாது என்று வலியுறுத்தினார்.

தென் தமிழ்நாட்டின் தமி ழர்கள் வாழும் கல்குளம், விளவங் கோடு, தோவாளை, அகஸ்தீசுவரம் உள்ளிட்ட கன்னியாகுமரி மாவட் டத்தின் பகுதிகள் கேரள மாநிலத் துடன் சேர்ந்துவிடாமல் தடுப்ப தற்கு மாபெரும் மக்கள் திரள் போராட்டங்கள் எழுச்சியுடன் நடத்தப்பட்டன.

அப்போராட்டத்தில் நடத்தப் பட்ட துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் உயிரிழந்தனர். மார்ஷல் நேசமணி, எஸ்.சாம் நத்தானியல், பி.எஸ்.மணி, காந்திராமன், ஆர்.கே.ராம் உள்ளிட்ட தலைவர்கள் போராடி வெற்றி கண்டனர். வடக்கே திருத்தணி தமிழ்நாட் டோடு இணைவதற்கும், தலைநகர் சென்னையை காப்பதற்கும் வடக்கு எல்லைப் போராட்டத்தை தீவிர மாக முன்னெடுத்தவர் .பொ.சி.

அண்ணா தெற்கு எல்லைப் போராட்டத்திற்கும், வடக்கு எல்லைப் போராட்டத்திற்கும் ஆதரவு நல்கினார். இந்த எல்லைப் போராட்டங்களில் தி.மு.. தொண்டர்கள் பங்கேற்றுச் சிறை ஏகினர் என்பதும் மறுக்க முடியாத வரலாறு.

எனவே நவம்பர் 1 (இன்று), மொழிவாரி மாநிலங்கள் அமைக் கப்பட்ட நாளையும் கொண்டாட வேண்டும்; அந்த நாளில், எல்லைப் போராட்டங்களை முன்னெடுத்து வெற்றி பெற்ற தலைவர்களுக்கு வீரவணக்கம் செலுத்துவோம்.

சென்னை மாநிலம் என்ற பெயரை, ‘தமிழ்நாடுஎன மாற்றிட, 1967 ஜூலை 18-ஆம் நாள் முதல்-அமைச்சர் அண்ணா சட்டமன்றத் தில் தீர்மானம் நிறைவேற்றினார். அந்த ஜூலை 18-ஆம் நாளை, ‘தமிழ்நாடு தினம்என்று கொண் டாடுவதற்கு முதல்-அமைச்சர் மு..ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பு வரவேற்கத்தக்கது; பொருத்தமானது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment