விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு ஒன்றிய அரசும், நீதிமன்றமும் என்ன செய்ய வேண்டும்? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 2, 2021

விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு ஒன்றிய அரசும், நீதிமன்றமும் என்ன செய்ய வேண்டும்?

[26-10-2021 நாளிட்ட தி இந்து ஆங்கில நாளிதழின் தலையங்கம்]

கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட மூன்று விவசாய சட்டங்கள் திரும்பப் பெறப்பட வேண்டும் என்று போராடிக் கொண்டிருக்கும் விவசாயிகளுடன் அரசு மேற்கொண்டிருக்கும் சமரசப் பேச்சு வார்த்தைகளில் எந்த ஒரு முடிவும்  ஏற்படாதபடி தடை  நேர்ந்துள்ள முட்டுக்கட்டையைக் கடந்து தொடர்ந்த முயற்சிகளை ஒன்றிய அரசு மேற்கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது போலவே தோன்று கிறது.

பொது சாலைகளை பொது மக்கள் பயன்படுத் துவதை போராளிகளால் காலவரை ஏதுமின்றி நிரந்தரமாக தடை செய்ய இயலாது என்று உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

இந்தப் போராட்டம் நடைபெறுவதால், சாலை களில் பயணம் செய்யும் தங்களது உரிமைகள் பாதிக்கப்பட்டுள்ளன என்று பொது மக்களிடமிருந்து மேலும் மேலும் மனுக்கள் குவிந்து வரும் நிலையில், நீண்டதொரு காலத்துக்கு சாலைகளில் பயணம் செய்வதை இனியும் தடுப்பதற்கு இயலாதபடி மேற்கொள்வதற்கு ஒரு தீர்வு காணப் படவேண்டும் என்றும்,  நீண்டதொரு காலத்துக்கு சாலைகளில் மக்கள் பயணம் செய்வது தடுக்கப்படுவது பற்றிய சட்டத்தை நீதிமன்றம் அடிக்கடி பிறப்பித்துக் கொண்டிருப்பதற்கான காரணங்கள் ஏதுமில்லை என்றும் உச்சநீதிமன்றம் பொதுமக்களின் மனுக்களை பரிசீலனை செய்யும்போது குறிப்பிட்டுள்ளது.

குடியு ரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக ஷஹீன் பாகிலில் மேற்கொள்ளப்பட்ட  போராட்டத்தின்மீது உச்சநீதி மன்றம் அளித்த தீர்ப்பை சுட்டிக் காட்டுவதாகவே அது அமைந்துள்ளது. அமைதி நிறைந்த ஒரு போராட்டத்தின் போதிலும் கூட, பொது சாலைகளும், பொது இடங்களும் பொதுமக்களால் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கஇயலாது என்று அந்தத் தீர்ப்பில் உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது. இடைவெளியின்றி தொடர்ந்து போராடும் இந்த உத்தியை ஏற்றுக் கொள்வதாகவோ அல்லது விவ சாயிகளின் குறைபாடுகளுக்கு  தீர்வு காண முடியாத நிலையில் இருப்பதற்கு அரசை குறை கூறுவதாகவோ தான் பார்க்க முடியும் என்று அந்தத் தீர்ப்பில் இருந்து தெரியவருகிறது. சாலைகளில் பயணம் செய்ய இயலா மலும், பொது இடங்களைப் பயன்படுத்த முடியாமலும் பொதுமக்கள் படும் அவதிக்கு தாங்கள்தான் பொறுப்பு என்பதை மறுக்கும் போராளிகள், சாலைகளிலும் பொது இடங்களிலும் தடைகளை ஏற்படுத்தியது காவல் துறைதான் என்றும், தங்கள் போராட்டத்தை ராம்லீலா திடலில் மேற்கொள்ள அனுமதிக்க வேண் டும் என்றும் கூறுகின்றனர். என்றாலும்,  போராட்டம் குடியரசு தின விழாவன்று தலைநகருக்குள் நுழைந்த போது நேர்ந்த விரும்பத் தகாத நிகழ்வுகளை சுட்டிக் காட்டிய அரசு அந்த கோரிக்கையை மறுத்துவிட்டது.

போராடுவதற்கான விவசாயிகளின் உரிமை மற்றும் சுதந்திரமாக பயணம் செய்யும் பொதுமக்களின் உரிமை இரண்டும் ஒன்றுடன் மற்றொன்று போராடு வது மட்டுமே உடனடியான கவனம் செலுத்த வேண்டிய அம்சம் அல்ல; விவசாயம் தொடர்பாக இயற்றப்பட்ட மூன்று சட்டங்கள் திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாக நடைபெற்று வந்த சமரசப் பேச்சு வார்த்தைகளில் ஏற்பட்ட தடைகளை உடைப்பதற்கு எந்தவிதமான முயற்சியும் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை. அந்த சட்டங்கள் மூன்றையும் ஒட்டு மொத்தமாகத் திரும்பப் பெறவேண்டும் என்றும் விவசாய உற்பத்திப் பொருள்களுக்கு நியாயமான குறைந்தபட்ச விலை அளிப்பது கைவிடப்படாமல் நீடிக்கும் என்பது சட்ட வடிவமாக்கப்பட வேண்டும் என்றும்  விவசாயப் போராளிகள் கோரி வருகின்றனர்.

 அறுவடை செய்த தானியங்களின் புற்களை எரிக்கும் பழக்கத்தைக் கைவிடுவது மற்றும் மின்சார மானியத்தைப் பாதுகாப்பது என்ற இரு பிரச் சினைகளில் போராடும் விவசாயிகளும், ஒன்றிய அமைச்சர்களும் ஒரு பகுதி ஒப்பந்தத்திற்கு கடந்த ஆண்டு வந்தனர். ஆனால் மிகமிக முக்கியமான இரண்டு கோரிக்கைகள் பற்றிய பேச்சு வார்த்தைகளில் எந்த வித முன்னேற்றமும்  எந்த வித ஒப்பந்தமும் ஏற்படவில்லை.

இதுபற்றி உச்சநீதிமன்றம் நியமித்த வல்லுநர் குழு ஒன்று தங்களின் பரிந்துரைகளை உச்சநீதிமன்றத்துக்கு அளித்துள்ளது என்பதை இந்த இடத்தில் சுட்டிக் காட்டுவதில் தவறேதுமில்லை என்று கருதுகிறோம். ஆனால் அந்தப் பரிந்துரைகள் பற்றி பின்னர் எந்தவித செய்தியுமே வெளிவரவில்லை. அந்த அறிக்கை மீது உச்ச நீதிமன்றம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதும், அந்த அறிக்கை பற்றி பொது மக்களுக்கு உச்சநீதிமன்றம் தெரிவிக்கவில்லை என்பதும் ஓரளவுக்கு இந்த பேச்சு வார்த்தைகளில் முட்டுக்கட்டை ஏற்படுவதற்குக் காரணம் என்பதே உண்மையாகும்.

அந்தக் குழுவின் பரிந்துரைகளை விரைவில் மறு ஆய்வு செய்வதை உச்சநீதிமன்றம் மேற்கொள்ளவோ அல்லது அது போன்றதொரு நடவடிக்கையை அரசு மேற்கொள்வதோ,  இந்தப் பிரச்சினை தீர்க்கப்படு வதற்கு தேவையானதாகும். அந்த நடவடிக்கையின் நோக்கம், தடை செய்யப்பட்ட சாலை பிரச்சினைக்கு தீர்வு காண்பது என்பதாக மட்டுமே இருக்கக்கூடாது. விவசாயத்துறையில் செய்யப்பட வேண்டிய சீர்திருத் தங்கள் என்று ஒன்றிய அரசு கருதும் பிரச்சினைகளில் அரசு கொண்டுள்ள ஆழ்ந்த மாறுபாடுகளை சமசரம் செய்து கொள்வது அல்லது நீக்குவது ஆகியவைகளை நோக்கமாகக் கொண்டதாக அந்த நடவடிக்கை இருக்க வேண்டும். விவசாயத் துறையில் இருக்கும் எந்த மாறுபாடுகளையும் நீக்கும் நோக்கத்தைக் கொண்ட எந்த ஒரு சீர்திருத்தமும், இந்தத் துறையின் பிரச்சினைகளில் மிகமிக முக்கியமாக பாதிக்கப்படக் கூடிய விவசாயிகளின் நம்பிக்கையைப் பெறுவதாக வும் இருக்க வேண்டும்.

நன்றி: 'தி இந்து' 26-10-2021

தமிழில்: ..பாலகிருட்டிணன்

No comments:

Post a Comment