கருநாடக மாநிலத்தில் வேகமாக பரவும் கரோனா வைரஸ் 182 மருத்துவ மாணவர்களுக்கு தொற்று உறுதி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, November 28, 2021

கருநாடக மாநிலத்தில் வேகமாக பரவும் கரோனா வைரஸ் 182 மருத்துவ மாணவர்களுக்கு தொற்று உறுதி

பெங்களூரு,நவ.28- கருநாடக மாநிலம் தார்வாட் மாவட்டத்தில் எஸ்.டி.எம். மருத்துவக் கல்லூரியில் படிக் கும் 30 மாணவர்களுக்கு கடந்த புதன்கிழமை (24.11.2021) உடல்நிலை பாதிக்கப்பட்டது. அங்கு படிக்கும் 400 மாணவர் ளுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

முதல் கட்டமாக 66 மாணவர் களுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. இந்நிலையில் இரண்டாவது கட்ட பரிசோதனை முடிவில் 116 மாணவர்களுக்கு தொற்று பாதிப்பு உறுதியானது.

ஒரே கல்லூரியில் 182 மாணவர் களுக்கு கரோனா தொற்று ஏற்பட் டதையடுத்து தார்வாட் மாவட்ட ஆட்சியர் நித்தேஷ் பாட்டீல், சுகாதாரத் துறை அலுவலர் யஷ் வந்த், மணிப்பால் மருத்துவமனை யில் கண்காணிப்பாளர் மருத்துவர் சுதர்ஷன் பல்லால் ஆகியோர் தலை மையிலான மருத்துவக் குழு வினர் கல்லூரியில் ஆய்வு செய் தனர்.

ஆட்சியர் நித்தேஷ் பாட்டீல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை யாக கல்லூரி வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்க உத்தரவிட் டார். அங்குள்ள 2 மாணவர் விடுதி களையும் மூடி விட்டார். அடுத்த இரு வாரங்களுக்கு நேரடி வகுப் புகளை ரத்து செய்து, இணையம் மூலமாக கற்பிக்க உத்தரவிட்டார்.

ஆட்சியர் நித்தேஷ் பாட்டீல் கூறும்போது, ‘‘182 மாணவர்களும் நலமாக இருக்கின்றனர். கல்லூரியிலேயே அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. 182 மாணவர் களும் 2 தவணை தடுப்பூசி செலுத் திக் கொண்டவர்கள் என தெரிய வந்துள்ளது. எனவே தொற்று யாரையும் தீவிரமாக பாதிக்க வில்லை. கடந்த 17ஆம் தேதி கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச் சியில் 200 மாணவர்களும், அவர் களின் பெற்றோரும் பங்கேற்றனர். அந்தநிகழ்ச்சியின் மூலமாக தொற்று பரவி இருக்கலாம் என சந்தேகிக்கிறோம். எனவே அதில் பங்கேற்றமாணவர்கள், பெற் றோர், ஊழியர்கள் உள்ளிட்ட அனைவரையும் சோதனைக்கு உட்படுத்த இருக்கிறோம்’' என்றார்.

இதனிடையே கருநாடக சுகாதாரத் துறை, ‘‘நேற்று புதிதாக 356 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா பாதித்த 6,992 பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். தொற்றுக்கு 12 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்'' என தெரிவித் துள்ளது.

இதற்கிடையில், பெங்களூரு ஒயிட் ஃபீல்ட் அருகேயுள்ள தனியார் பன்னாட்டு உறைவிடப் பள்ளியில் பயின்று வரும் 40 மாண வர்களுக்கும், ஒரு ஆசிரியருக்கும் கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட் டுள்ளது தெரிய வந்துள்ளது. 41 பேரும் தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment