கான்பூர்,நவ.28- உத்தரப்பிர தேசம் கான்பூரில் அம்பேத்கர் சிலையை அடையாளம் தெரியாத சிலர் உடைத்து சேதப்படுத்தி யுள்ளனர். இதனால், உள்ளூர் அர சியல்வாதிகளுடன் நூற்றுக்கணக் கான கிராம மக்கள் ராணிப்பூர் சாலையை வழி மறித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இச்சம்பவம் குறித்து அப்பகுதி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்று காவல்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில், சிலர் செங்கற்களால் தாக்கியதில் சிலை யின் கை மற்றும் முகம் சேத மடைந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து, காவல்துறை கண்காணிப்பாளர் சுஷில் குலே கூறும் போது, சிலையை உடைத்த வர்கள் மீது நடவடிக்கை எடுக்கப் படும். மேலும் அசம்பாவித சம்ப வங்கள் நடைபெறாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை யாக அப்பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு உள்ளனர். சிலையைச் சேதப்படுத்திய அடை யாளம் தெரியாத நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்து உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்”
மேலும் வேறொரு அம்பேத்கர் சிலை அங்கு வைக்கப்படும் என் றும் சுஷில் குலே தெரிவித்தார்.
அம்பேத்கர் சிலையின் முகமும் கைகளும் செங்கலால் அடித்து சிதைக்கப்பட்டதையடுத்து, ராணிப்பூர் சாலையில் பொது மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதிய சிலை அங்கு நிறுவப்பட்ட பிறகே மக்கள் அமைதி காத்தனர்.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் அம்பேத்கர் சிலை உடைக்கப்படு வது பல காலமாக நடந்து வரு கிறது. கோத்தியார் கிராமத்தில் ஜூன் மாதத்தில் ஒருமுறை சிதைக் கப்பட்ட அம்பேத்கர் சிலையை காவல்துறையினர் மீண்டும் சரி செய்து அதே இடத்தில் வைத்த பிறகே மக்கள் கோபம் அமைதி யடைந்தது. 2006ஆம் ஆண்டு இதே கான்பூரில் இரண்டு அம் பேத்கர் சிலைகள் உடைக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டன.
அம்பேத்கர், காந்தியார் சிலை களை உடைப்பதும், பெரியார் சிலையை அவமதிப்பதும் தொடர் நிகழ்ச்சிகளாவது ஜனநாயக நாட் டுக்கு நல்லதல்ல என்று சமூக செயல்பாட்டாளர்கள் கண்டனம் வெளியிட்டு வருகின்றனர். உத் தரப் பிரதேசத்தில் மட்டுமல்ல பஞ்சாப், மராட்டியம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களிலும் அம் பேத்கர் சிலைகள் தகர்க்கப்பட்டு அதனால் பதற்றங்கள் ஏற்பட்ட சம்பவம் உண்டு.
No comments:
Post a Comment