சென்னை, நவ.28 இலங்கை சிறை யில் இருந்து விடுதலையான தமிழ் நாடு மீனவர்கள் நேற்று (27.11.2021) சென்னை விமான நிலையம் வந்து சேர்ந்தனர்.
இலங்கை ராணுவத்தால் சிறை பிடிக்கப்பட்டு விடுதலை செய்யப் பட்ட 23 தமிழ்நாடு மீனவர்களில் 18 மீனவர்கள் நேற்று காலை விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர்.
நாகப்பட்டினம் மீன்பிடி துறை முகத்தில் இருந்து கடந்த அக். 11ஆம்தேதி அக்கரைப்பேட்டை யைச் சேர்ந்த மீனவர்கள் சிவகுமார், சிவநேசனுக்கு சொந்தமான விசைப் படகில் 23 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
இவர்கள் கடந்த அக்.13ஆம் தேதி அதிகாலையில் நடுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது, எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் மீனவர்களை யாழ்ப்பாணம் சிறையில் அடைத் தனர்.
இந்நிலையில், மீனவர்களை உடனே விடுவித்து இந்தியாவுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய அரசுக்கு கோரிக்கை விடுத்தார். இதையடுத்து, மத்தியஅரசு இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் மூலம் நடவடிக்கை எடுத்து வந்தது.
இதற்கிடையே, தமிழ்நாடு மீன வர்கள் 23 பேரையும் விடுதலை செய்யஇலங்கை பருத்தித் துறை நீதிமன்றம் அண்மையில் உத்தர விட்டது. அதன்படி, இலங்கை சிறையில்இருந்து தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். தமிழ் நாடு மீனவர்கள் இந்திய தூதரகத்தில் ஒப்படைக்கப்பட் டனர்.
இந்திய தூதரக அதிகாரிகள் மீனவர்களை விமானம் மூலம் சென்னைக்கு அனுப்ப ஏற்பாடுகள் செய்தனர். அவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், 5 மீனவர்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப் பட்டது. எனவே, 5 மீனவர்களுக்கும் அங்கு தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மீதமுள்ள 18 மீனவர்களும் நேற்று (27.11.2021) அதிகாலை 3 மணிக்கு இலங்கையிலிருந்து ஏர் இந்தியா விமானத்தில் சென்னைக்கு அனுப்பி வைக்கப் பட்டனர்.
நேற்று அதிகாலை 4.30 மணிக்கு ஏர்இந்தியா விமானம் சென்னை பன்னாட்டு விமான நிலையம் வந்தது.
சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு மீன்வளத் துறை அதிகாரிகள் மீனவர்களை வர வேற்றனர்.
No comments:
Post a Comment