தேர்தல் ஆணையம் வலியுறுத்தல்
புதுடில்லி, நவ.28 இணையவழி வாக்களிப்புக்கு அரசியல் கட்சி களிடையே கருத்தொற்றுமை தேவை என்று நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் தேர்தல் ஆணை யம் வலியுறுத்தி உள்ளது.
பாஜக மூத்த தலைவர் சுஷில் மோடி தலைமையில், சட்ட மற்றும் தனிநபர் விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு செயல் பட்டு வருகிறது. இக்குழு பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து சம்பந்தப்பட்ட அமைப்புகளின் கருத்தை கேட்பது வழக்கம்.
அந்த வகையில், தேர்தல் சீர்திருத்தம் தொடர்பாக விளக் கம்அளிப்பதற்காக தேர்தல் ஆணையஅதிகாரிகளுக்கு இக்குழு சமீபத்தில் அழைப்பு விடுத்திருந்தது. அப்போது தேர்தல் ஆணைய அதிகாரிகள் இணையவழி வாக்க ளிப்பு தொடர்பாக புகழ் பெற்ற கல்வி நிறுவனங்கள் உதவி யுடன் ஆய்வு செய்ததாக தெரிவித்தனர்.
இதுபோன்ற புதுமையான தொழில்நுட்பங்களைக் கொண்டு வரும்போது அதற்கு அரசியல் கட்சிகளின் கருத்தொற்றுமையும், ஒத்துழைப்பும் அவசியம் என்று நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பி னர்களிடம் தேர்தல் ஆணைய அதி காரிகள் தெரிவித்ததாக ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.
அதே நேரம் இணையவழியில் வாக்களிப்பது என்பது உலகளவில் சில இடங்களில் மட்டுமே நடை பெற்றுள்ளது என்றும், பெரும் பாலான இடங்களில் தொலைதூர வாக்களிப்பு என்பது அஞ்சல் வாக்குகளாக மட்டுமே இருந்துள்ள தாகவும் நாடாளுமன்ற நிலைக்குழு விடம் தேர்தல் ஆணைய அதி காரிகள் தெரிவித்துள்ளனர்.
இணையவழியில் வாக்களிப் பதற்கு சட்டத்தில் திருத்தம், மிகவும் முன்னேறிய தொழில்நுட்பம், இணையவழி வாக்களிப்பு இயந் திரங்கள் (ஆர்விஎம்), நடைமுறைகள் மற்றும் நிதி தாக்கங்களில் மாற்றம் ஆகியவை தேவை என்றும் அப்போது அதிகாரிகள் நிலைக்குழு உறுப்பினர்களிடம் வலியுறுத்திய தாக ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.
No comments:
Post a Comment