மின் கட்டணம் ரூ. 19 கோடி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, November 5, 2021

மின் கட்டணம் ரூ. 19 கோடி

என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? பா... ஆளும் உத்தரப்பிரதேச ஆட்சியில் தொழிலாளி ஒருவருக்கு மின் வாரியம் அனுப்பிய தாக்கீதில் மின் கட்டணம் ரூ.19 கோடி என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இதற்கு பெயர் தான் பா... நிர்வாக இலட்சணம்!

ஒழியுமா?

செய்தி: தீபாவளியைக் கொண்டாடினால் அய்ம் பெரும் யாகங்கள் செய்த புண்ணியம்.

- ஒரு சிவாச்சரியார்

சிந்தனை: மக்கள் வறுமை ஒழியுமா - வேலை யில்லாத திண்டாட்டம்தான் ஒழியுமா? 

 குஜராத்தில் நிலநடுக்கம்

வடோதரா, நவ.5 குஜராத்தின் வார்கா பகுதியில் 5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. நேற்று (4.11.2021) பிற்பகல் 3.15 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் குஜராத்தின் துவாரகாவில் இருந்து வட-வடமேற்கில் 223 கி.மீ ஆழத்தில் மய்யம் கொண்டிருந்ததாகத் தேசிய நிலநடுக்கவியல் மய்யம் (NCS) தெரிவித்துள்ளது.இந்த நிலநடுக்கத்தால் இதுவரை, எந்த சேதமும் ஏற்பட்டதாகத் தகவல்கள் வெளியாகவில்லை.

அய்ரோப்பிய நாடுகளில் கரோனா தொற்று மீண்டும் அதிகரிப்பு

மேலும் 5 லட்சம் பேர் உயிரிழக்க வாய்ப்பு

உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

ஜெனீவா,நவ.5- அய்ரோப்பிய நாடுகளில் அடுத்தாண்டு பிப்ரவரிக்குள் கரோனாவுக்கு மேலும் 5 லட்சம் பேர் உயிரிழக்க நேரிடும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.  பெருமளவில் உயிரிழப்புகள் ஏற்படுத்திய கரோனா 2ஆவது அலைக்கு பின், குறைந்து வந்த தொற்று எண்ணிக்கை அய்ரோப்பிய, மத்திய ஆசிய நாடுகளில் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதுதவிர ஒரு சில நாடுகளில் உருமாறிய புதிய வைரசும் பரவி வருகிறது.

இந்தநிலையில் 53 நாடுகளில் மீண்டும் கரோனா அதிகரித்து வருவதற்கு கவலை தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பு, அடுத்தாண்டு பிப்ரவரிக்குள்  கரோனாவுக்கு புதிதாக  5 லட்சம்  பேர் உயிரிழக்க வாய்ப்பிருப்பதாக எச்சரித்துள்ளது. தடுப்பூசியை விரைந்து செலுத்தாததே இந்நிலைக்கு காரணம் எனவும் கூறியுள்ளது. அய்ரோப்பாவில் கடந்த 4 வாரங்களில் மட்டும் கரோனா பாதிப்பு 55 சதவீதமாக உயர்ந்திரு ப்பதாகவும், சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment