2022ஆம் ஆண்டு அரசு பொது விடுமுறை நாட்கள் தமிழ்நாடு அரசு அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, November 4, 2021

2022ஆம் ஆண்டு அரசு பொது விடுமுறை நாட்கள் தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை, நவ.4 2022 ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்களை அறிவித்தது தமிழ்நாடு அரசு.

தமிழ்நாட்டின் அனைத்து அரசு அலுவலகங்கள், கூட்டுறவு  வங்கிகள் உள்பட அனைத்து வணிக வங்கிகளுக்கான  2022-ஆம் ஆண்டுக்கான விடுமுறை நாட்களை தமிழ்நாடு அரசு  அறிவித்துள்ளது. இதற்கான அரசாணையை தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

ஆங்கில புத்தாண்டு 1.1.2022 - சனி

பொங்கல் 14.1.2022 - வெள்ளி

திருவள்ளுவர் தினம்  15.1.2022 - சனி

உழவர் திருநாள் 16.1.2022 - ஞாயிறு

தைப்பூசம் 18.1.2022  - செவ்வாய்

குடியரசு தினம் 26.1.2022 - புதன்

வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு  (வணிககூட்டுறவு வங்கிகள்) 1.4.2022 - வெள்ளி      

தெலுங்கு வருடப்பிறப்பு 2.4.2022 - சனி               

தமிழ் புத்தாண்டுஅம்பேத்கர் பிறந்த நாள்/ மகாவீரர் ஜெயந்தி 14.4.2022 - வியாழன்

புனித வெள்ளி 15.4.2022 - வெள்ளி

மே தினம் 1.5.2022 - ஞாயிறு     

ரம்ஜான்  3.5.2022 - செவ்வாய்               

பக்ரீத் 10.7.2022 - ஞாயிறு   

மொகரம் 9.8.2022 - செவ்வாய்               

சுதந்திர தினம்  15.8.2022 - திங்கள்    

கிருஷ்ண ஜெயந்தி 19.8.2022 - வெள்ளி   

விநாயகர் சதுர்த்தி 31.8.2022 - புதன்         

காந்தி ஜெயந்தி  2.10.2022 - ஞாயிறு   

ஆயுத பூஜை 4.10.2022 - செவ்வாய்             

விஜயதசமி 5.10.2022 - புதன்         

மிலாது நபி  9.10.2022 - ஞாயிறு   

தீபாவளி  24.10.2022 - திங்கள்  

கிறிஸ்துமஸ் 25.12.2022 - ஞாயிறு

தமிழ்நாட்டில் புதிதாக 962 பேருக்கு கரோனா பாதிப்பு

சென்னை, நவ.4 தமிழ்நாட்டில் 68 குழந்தைகள் உள்பட 962 பேருக்கு நேற்று (3.11.2021) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் நேற்றைய கரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் புதிதாக 1 லட்சத்து 14 ஆயிரத்து 878 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 570 ஆண்கள், 392 பெண்கள் என மொத்தம் 962 பேருக்கு புதிதாக கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக கோவையில் 109 பேரும், சென்னையில் 105 பேரும், செங்கல்பட்டில் 82 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறைந்தபட்சமாக அரியலூர், திண்டுக்கல், மயிலாடுதுறை, பெரம்பலூரில் தலா 4 பேரும், தேனி, ராமநாதபுரத்தில் ஒருவரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். தமிழ்நாட்டில் நேற்று  (3.11.2021) அனைத்து மாவட்டத்திலும் புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் 68 பேர் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது

19 பேர் உயிரிழப்பு

கரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 13 பேரும், தனியார் மருத்துவமனையில் 6 பேரும் என 19 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 3 பேரும், மதுரை, நாகப்பட்டினம், திருவாரூரில் தலா இருவரும், தர்மபுரி, திண்டுக்கல், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், நீலகிரி, பெரம்பலூர், சேலம், திருவண்ணாமலை, திருப்பூரில் தலா ஒருவரும் என 14 மாவட்டங்களில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை 36 ஆயிரத்து 176 பேர் கரோனா நோய் தொற்றால் உயிரிழந்து உள்ளனர். தமிழ்நாட்டில் இதுவரை 27 லட்சத்து 5 ஆயிரத்து 548 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 1 லட்சத்து 2 ஆயிரத்து 391 பேரும், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் 3 லட்சத்து 91 ஆயிரத்து 399 பேரும் அடங்குவர்.

கரோனா பாதிப்பில் இருந்து நேற்று 1,078 பேர் டிஸ்சார்ஜ்செய்யப்பட்டுள்ளனர். சிகிச்சையில் 11 ஆயிரத்து 12 பேர் உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

டிச.8-இல் தொழில் நுட்பக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வு

சென்னை, நவ.4 ஒத்திவைக்கப்பட்ட தொழில் நுட்பக்  கல்லூரி விரிவுரையாளர் தேர்வு டிசம்பர் 8-ஆம் தேதி முதல் 5 நாட்கள் நடைபெறும் என உயர்கல்வித் துறை அமைச்சர் .பொன்முடி அறிவித்துள்ளார்.

உயர் கல்வித் துறை அமைச்சர் .பொன்முடி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- தொழில் நுட்பக் கல்லூரி விரிவுரையாளர் பணிகளுக்கானத் தேர்வை எழுதுவதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த சூழ்நிலையில் அந்த தேர்வு முதலில் 129 மய்யங்களில் மட்டுமே நடைபெறும் என்று அறிவிப்பு வெளியிட்டு இருந்தோம்.  தற்போது அந்த தேர்வை சுமார் 200க்கும் மேற்பட்ட மய்யங்களில் நடத்துவதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டு கொண்டிருக்கின்றன. மேலும், அந்தந்த மாவட்டத்திலேயே., 100 கிலோ மீட்டருக்கு மிகாமல் தேர்வர்களுக்கான அந்தத் தேர்வு மய்யம் அமையும். வருகின்ற டிசம்பர் மாதம் 8ஆம் தேதி இந்த  தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர்கள் தேர்வு நடைபெறும். டிஆர்பி மூலமாக நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக மேல்முறையீடு செய்யப்படும். உச்சநீதிமன்றம் உத்தரவை பொறுத்து அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment