2030ஆம் ஆண்டுக்குள் காடுகள் அழிப்புக்கு முற்றுப்புள்ளி உலக தலைவர்கள் உறுதி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, November 4, 2021

2030ஆம் ஆண்டுக்குள் காடுகள் அழிப்புக்கு முற்றுப்புள்ளி உலக தலைவர்கள் உறுதி

கிளாஸ்கோ, நவ. 4- இங்கிலாந்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் 26ஆவது பருவநிலை மாநாடு கடந்த 31ஆம் தேதி தொடங்கியது. வருகிற 12ஆம் தேதிவரை நடக்கும் இம்மாநாட்டில், இந்தியா உள்பட 200 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

பாரீஸ் ஒப்பந்தப்படி, புவி வெப்பநிலையை குறைப்ப தற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்த இந்த மாநாடு நடத்தப்படுகிறது. இதில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ஏற்பாட்டில் வனம் மற்றும் நில பயன்பாடு குறித்த நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அதில், நூற்றுக்கும் மேற் பட்ட நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

கனடா, ரஷ்யா, பிரேசில், கொலம்பியா, இந்தோ னேஷ்யா, காங்கோ ஆகிய நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். உலக காடுகளில் 85 சதவீத காடுகள், இந்த நாடுகளில்தான் இருப்பது குறிப்பிடத்தக்கது. 2030ஆம் ஆண்டுக்குள், காடுகள் அழிப்புக்கும், நிலம் சீரழிவுக்கும் முற்றுப்புள்ளி வைக்க நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்களும் உறுதி எடுத்துக்கொண்டனர். இதுதொடர் பான பிரகடனம் வெளியிடப்பட்டது.

முக அடையாளம் காணும் சேவைமுகநூல் நிறுவனம் கைவிட்டது

கலிஃபோர்னியா, நவ. 4- முக அடையாளம் காணும் சேவையை கைவிடுவதாக முகநூல் நிறுவனம் தெரிவித் துள்ளது. சமூக வலைத்தளமான ஃபேஸ்புக் தனது தாய் நிறுவனத்தின் பெயரை மெட்டா என கடந்த வாரம் மாற்றியது. இந்நிலையில் ஃபேஸ்புக் நிறுவனம் வழங்கி வந்த முக அடையாளம் காணும் சேவையை கைவிடுவதாக அறிவித்துள்ளது. இதுதொடர்பான வழிகாட்டுதல்களை பல நாடுகள் வெளியிடாத நிலையில் அதை கைவிடுவ தாகவும் 100 கோடி பேரின் முக அடையாளங்களை நீக்குவ தாகவும் தெரிவித்துள்ளது.

ஃபேஸ்புக்கின் கீழ் பல நிறுவனங்கள் ஏற்கெனவே இருக்கின்றன. இன்னும் பல நிறுவனங்கள் அதன் கீழ் வரவிருக்கின்றன. அப்படி இருக்கும்போது அது ஃபேஸ் புக்காக, சமூக வலைதள நிறுவனமாக மட்டுமே அறியப் படுவது சரியல்ல என்று இந்தப் புதிய பெயரை வைத்துள்ளார் மார்க். சமூக வலைதள விஷயங்களில் ஏற்படும் சர்ச்சைகள் மொத்த நிறுவனத்தையும் பாதிக்கக் கூடாது என்பதிலும் தெளிவாக இருக்கிறார் மார்க். இந்த 'மெட்டா' என்னும் பெயர் அவரது கனவுத்திட்டமான மெட்டாவெர்ஸிலிருந்து (Metaverse) வந்தது. கடந்த சில வருடங்களாகவே 'மெட்டாவெர்ஸ்' உருவாகும் முயற்சி யில் ஃபேஸ்புக் அதீத ஈடுபாடு காட்டி வருகிறது.

No comments:

Post a Comment