துபாய், நவ. 4- பன்னாட்டு நிறுவனம் ஒன்று கரோனா தடுப்பூசிகளை போட்ட நாடுகள் குறித்து ஆய்வு நடத்தியது. அந்த ஆய்வின்போது கிடைத்த புள்ளி விவரத்தில் கூறியிருப்பதாவது:-
அய்க்கிய அரபு அமீரகத்தில் கரோனா பாதிப்பு ஏற்பட்டதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக் கப்பட்டது. வர்த்தக நிறுவனங் கள் செயல்பாடு குறைக்கப்பட் டது. பொதுமக்கள் குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே வெளியில் செல்ல அனுமதிக்கப்பட்டனர். பள்ளிக்கூடங்கள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மூடப்பட் டன.
இத்தகைய சிறப்பான செயல் பாடு காரணமாக கரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண் ணிக்கை குறைந்தது. மேலும் கரோனா தடுப்பூசி போடுவது நடைமுறைக்கு வந்ததும் அமீர கத்தின் அனைத்து பகுதிகளிலும் சுகாதாரத்துறையின் தடுப்பூசி போட அதிக கவனம் செலுத்தி னர்.
பொதுமக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி போட வந்தனர். இதன் காரணமாக கரோனா பாதிப்பு மிகவும் குறைந்தது. தற்போது தினசரி பாதிப்பு எண்ணிக்கை 100-க்கும் குறைவாகவே இருக்கிறது.
அமீரகத்தில் கரோனா தடுப் பூசியானது 97 சதவீதம் பேருக்கு போடப்பட்டுள்ளது. இது உல கில் உள்ள நாடுகளில் மிகவும் அதிக அளவு போடப்பட்ட நாடு களில் ஒன்றாக அமீரகம் திகழ் கிறது. உலகம் முழுவதும் 49.6 சதவீத மக்களுக்கு மட்டுமே இந்த தடுப்பூசி போடப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
அமீரகத்தை தொடர்ந்து போர்ச்சுகல், கியூபா, சிலி, ஸ்பெயின், கம்போடியா, சிங்கப் பூர் உள்ளிட்ட நாடுகள் அடுத் தடுத்த இடங்களை பிடித்து உள்ளன. அனைத்து நாடுகளை யும் சேர்ந்த மக்களுக்கும் தடுப் பூசி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அந்த புள்ளி விவ ரத்தில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment