பொகொடா, நவ. 4- தென் அமெரிக்க நாடுகளில் கொலம்பியாவும் ஒன்று. அந்நாட்டின் நரினோ மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இத னால், அம்மாகாணத்தில் உள்ள பல்வேறு மாவட் டங்களில் வெள்ளம், நிலச் சரிவு ஏற்பட்டுள்ளது.
நரினோ மாகாணத் தில் உள்ள மலாமா மாவட்டத்தில் உள்ள மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால், மலையடிவாரத்தில் உள்ள வீடுகள் நிலச்சரி வில் சிக்கி மண்ணுக்குள் புதைந்தன. இதில், வீடு களில் வசித்துவந்த பலர் மண்ணுக்குள் புதைந்தனர்.
இந்த நிலச்சரிவு குறித்து தகவலறிந்த மீட்புக்குழு வினர் நிகழ்வு இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இதில், நிலச்சரிவில் சிக்கிய 11 பேர் படுகாயங்க ளுடன் மீட்கப்பட்டனர். ஆனாலும், இந்த நிலச் சரிவில் சிக்கி இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், நிலச்சரிவில் சிக்கிய மேலும் 20 பேர் காணாமல் போயுள்ள தால் அவர்களை தேடும் பணிகளை மீட்புக்குழுவி னர் தீவிரப்படுத்தியுள்ள னர்.
No comments:
Post a Comment