காபூல், நவ. 4- ஆப்கானிஸ் தான் தலைநகர் காபூலில் ராணுவ மருத்துவமனை உள்ளது. காபூலில் உள்ள மிகப்பெரிய மருத்துவ மனை இதுவாகும். இதற் கிடையில், அந்த மருத் துவமனையில் அடுத்த டுத்து இரண்டு வெடி குண்டுகள் வெடித்தன.
இதனை தொடர்ந்து அப்பகுதியில் துப்பாக் கிச்சூடு தாக்குதலும் நடத்தப்பட்டது. உடலில் வெடிகுண்டை மறைத்து கொண்டுவந்த நபர் மருத்துவமனை வளாகத் தில் மக்கள் அதிகமாக கூடியிருந்த பகுதியில் தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச்செய்தார்.
இந்த தாக்குதலில் மொத்தம் 25 பேர் உயிரி ழந்தனர். மேலும், 50-க்கும் மேற்பட்டோர் படுகாய மடைந்தனர். இதனால், காபூல் ராணுவ மருத்துவ மனை போர்களம் போல காட்சியளித்தது.
இந்த நிகழ்வைத் தொடர்ந்து மருத்துவ மனை பகுதியில் தலீபான் அமைப்பின் பாதுகாப்பு படையினர் குவிக்கப் பட்டுள்ளனர்.
காபூல் ராணுவ மருத் துவமனை மீது நாங்கள் தான் தாக்குதல் நடத்தி னோம் என்று அய்.எஸ். பயங்கரவாத அமைப்பின் ஹரொசன் பிரிவு பொறுப்பேற்றுள்ளது.
அந்த அமைப்பின் 5 பேர் இந்த தற்கொலைப் படை தாக்குதல் மற்றும் துப்பாக்கிச்சூட்டை நடத்தியதாக அய்.எஸ். பயங்கரவாத அமைப்பின் ஹரொசன் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த இரட்டை குண்டு வெடிப்பு தாக்கு தல், துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 25 பேரில் தாக் குதல் நடத்திய அய்.எஸ். பயங்கரவாதிகளும் அடக்கம்.
No comments:
Post a Comment