2024 இல் நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தல்மூலம் மத்தியில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைவது உறுதி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 2, 2021

2024 இல் நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தல்மூலம் மத்தியில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைவது உறுதி

சிவசேனா செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ராவத்

புனே, நவ.2- 2024 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் காங் கிரஸ் கூட்டணி ஆட்சி அமைவது உறுதி என்று சிவசேனா செய்தித் தொடர்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சஞ்சய் ராவத் செய்தியாளர்களிடம் கூறினார்.

 இதுகுறித்த விவரம் வருமாறு:

 காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நினைப்பது போல மக்கள் மோடியை அவ்வளவு எளிதில் தூக்கி எறிந்து விட மாட்டார்கள், ஒருவேளை மோடியை மக்கள் தூக்கி எறிந்தாலும், பாஜகவை ஒன்றும் செய்ய முடியாதுஎன தேர்தல் வியூக வகுப்பாளர் பிர சாந்த் கிஷோர், சில நாள்களுக்கு முன்பு பேட்டியில் கூறியிருந்தார்.

இந்நிலையில், பிரசாந்த் கிஷோருக்கு, சிவசேனா செய்தித் தொடர்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சஞ்சய் ராவத் பதிலளித்துள்ளார்.

“2024 ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி மத்தியில் ஆட்சி அமைக்கும். இந்தியாவின் மிக முக்கியமான மற்றும் நாட்டில் ஆழமாக வேரூன்றிய கட்சியான காங்கிரஸ் இல்லாமல் எந்த ஒரு கட்சியும் அரசு அமைக்க முடியாது.  இப்போது முக்கிய எதிர்க்கட்சியாக காங்கிரசும் மற்ற கட்சிகள் -மண்டல கட்சிகளும் உள்ளன.

ஆனால், 2024 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி, தற்போதுள்ள ஒற் றைக் கட்சி ஆட்சிக்கு முடிவு கட்டும். அரசியல் வியூக ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் பல்லாண்டுகளுக்கு மேல் பாஜக ஆட்சியில் இருக்கும் எனக் கூறியுள்ளார். இந்திய அரசியலில் பாஜக நிச்சயம் இருக்கும். ஆனால், அது ஒரு எதிர்க்கட்சியாக இருக்கும். தன்னை உலகின் மிகப் பெரிய கட்சி என பாஜக கூறிக் கொள்கிறது. அந்த வகையில், அக்கட்சி தோற்றால் உலகின் மிகப் பெரிய எதிர்க்கட்சி ஆக விளங்கும்.

தற்போது மகாராட்டிராவில் 105 உறுப்பினர்களுடன் இருந் தாலும், பாஜக எதிர்க்கட்சி யாகத்தான் உள்ளது. இதுதான் மத்தியிலும் நிகழப் போகிறது.

இவ்வாறு சிவசேனா செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ராவத் கூறி யுள்ளார்.

No comments:

Post a Comment