ராமர் கோயிலுக்கு நன்கொடை தராத தலைமை ஆசிரியை பணியிடை நீக்கமாம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 2, 2021

ராமர் கோயிலுக்கு நன்கொடை தராத தலைமை ஆசிரியை பணியிடை நீக்கமாம்!

ஆர்.எஸ்.எஸ்.ஆதரவு பள்ளி நிர்வாகம் அத்துமீறல்!

புதுடில்லி, நவ.2- ராமர் கோயிலுக்கு நன்கொடை தராத தலைமை ஆசிரி யையை ஆர்.எஸ்.எஸ். ஆதரவு பள்ளி நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்துள்ளது.

டில்லியில் ஆர்எஸ்எஸ் ஆதர வுடன் செயல்படும் தனியார் அமைப்புசமர்த் ஷிக்ஷா சமிதி’. இந்த அமைப்பு நடத்தி வரும் பள்ளிகளில் ராமர் கோயில் கட்டுமானத்திற்கு ரூ. 70 ஆயிரம் முதல் ரூ. 1 லட்சம் வரை நன்கொடை வசூலித்துத்தர வேண்டும் என ஆசிரியர்களுக்கு இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த இலக்கை எட்டுவதற்கு மாணவர் களின் பெற்றோர், வர்த்தகர்கள், பொதுமக்கள் என யாரை வேண்டு மானாலும் அணுகிக் கொள்ளலாம். ஆனால், ரூ. ஒரு லட்சம் இலக்கை நிவர்த்தி செய்ய வேண்டும் என்று கூறியுள்ளது.

 அதுமட்டுமன்றி, ஆசிரியர்களும்சமர்பன்என்ற பெயரில் ஆண்டு தோறும் அளிக்கும் நன்கொடையை இந்த ஆண்டு ரூ. 5 ஆயிரத்திற்குப் பதில் ரூ. 15 ஆயிரமாக தர வேண்டும் என்றும் கட்டாயப்படுத்தியுள்ளது.  இதனை பள்ளித் தலைமை ஆசிரியர் ஒருவர் தரவில்லை என்பதற்காகவே, அவரை இடமாற்றம் செய்தும், பணியிடை நீக்கம் செய்தும் அந் தத் தனியார் பள்ளி நிர்வாகம் பழி வாங்கியுள்ளது.

20 ஆண்டுகளாக பணியாற்றி வரும் அந்த தலைமை ஆசிரியை மீது, மாணவர்களின் பெற்றோரை ஏவிவிட்டு, ஜாதிய ரீதியாக பேசி னார் என பொய் வழக்கும் போட வைத்துள்ளது.  கடந்த 2016 ஆம் ஆண்டு கடுமையான விபத்தில் சிக்கி, ஒரு கண்ணில் பார்வையிழப்பையும், பல இடங்களில் எலும்பு முறிவு களையும் சந்தித்த, தனது கண வரின் மருத்துவச் செலவினங் களுக்காக மிகவும் கஷ்டப்பட்டு வரும் நிலையில், ராமர் கோயில் நன்கொடைக்காக பள்ளி நிர்வாகம் தன்னை பழிவாங்கி இருப்பதாக தலைமை ஆசிரியை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

ராமர் கோயிலுக்கு ஏற்கெனவே ரூ. 2100 நன்கொடை அளித்திருப்ப தாகவும் மனுவில் அவர் குறிப்பிட் டுள்ளார்.

இதுதொடர்பான வழக்கு விசாரணையை டிசம்பர் 17 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ள டில்லி உயர்நீதிமன்றம், தலைமை ஆசிரி யையின் குற்றச்சாட்டு குறித்து பதிலளிக்குமாறு, பள்ளியை நடத்தி வரும் ஆர்எஸ்எஸ் ஆதரவு பெற்ற ஷிக்ஷா சமிதி மற்றும் டில்லி அரசின் கல்வி இயக்குநரகம் ஆகியவற்றுக்கு தாக்கீது அனுப்பியுள்ளது.

No comments:

Post a Comment