தரமணி இணைப்புச் சாலை - வேளச்சேரி புறவழிச்சாலையை இணைக்கும் இரண்டாம் அடுக்கு மேம்பாலம்: முதலமைச்சர் திறப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, November 1, 2021

தரமணி இணைப்புச் சாலை - வேளச்சேரி புறவழிச்சாலையை இணைக்கும் இரண்டாம் அடுக்கு மேம்பாலம்: முதலமைச்சர் திறப்பு

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.. ஸ்டாலின் அவர்கள் இன்று (1.11.2021) சென்னை மாவட்டம், வேளச்சேரி, விஜயநகரம் சந்திப்பில் 67 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தரமணி இணைப்புச் சாலை - வேளச்சேரி புறவழிச்சாலையை இணைக்கும் இரண்டாம் அடுக்கு மேம்பாலத்தை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் .. வேலு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மைச் செயலாளர், நெடுஞ்சாலைத் துறை முதன்மை இயக்குநர், தலைமைப் பொறியாளர் (நெடுஞ்சாலை) பெருநகரம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment