சென்னை, நவ.1 ‘தீபா வளியை’யொட்டி லஞ்சம், பரிசுப் பொருட்கள் பெறப்படுகிறதா என அரசு அலுவ லகங்களில் நடத் தப்பட்ட சோதனையில் ரூ.18.20 லட்சம் சிக்கியது.
‘தீபாவளி’ வசூல் வேட் டையை தடுக்க தமிழ்நாடு முழுவதும் 29.10.2021 அன்று மாலையில் இருந்து லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் பல்வேறு இடங்களில் உள்ள அரசு அலுவல கங்கள் மற்றும் ஊராட்சி அலுவலகங்களில் புகுந்து அதிரடி சோதனை நடத்தி னார்கள். இந்த சோதனை இரவிலும் நீடித்தது.
சென்னையை அடுத்த பல்லாவரம் நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை நடத்தினர். பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் சிக்கியதா? என்பது சோதனை முடிவடைந்த பின்னரே தெரிவிக்க முடியும் என லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் தெரிவித்தனர்.
அதேபோல் திருமுல் லைவாயல் அடுத்த அயப் பாக்கம் ஊராட்சியில் லஞ்ச ஒழிப்பு காவல் துறையின் மாவட்ட அதிகாரி லவக்குமார் தலைமையிலான காவல்துறையினர்அங்கு பணியில் இருந்த ஊழியர் களிடமும், அலுவலகத் திலும் சோதனை நடத் தினர்.
அப்போது அலுவ லகத்தில் இருந்த கணக்கில் வராத பணம் மற்றும் ஆவணங்களை கைப் பற்றியதாக தெரிகிறது.
திருவள்ளூர் சார் பதிவாளர் அலுவலகத்தி லும் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் சோதனை நடத்தினர். சார் பதிவா ளர்கள் சுமதி, உமாசங்கரி மற்றும் இணை சார் பதிவாளர்கள் மற்றும் ஊழியர்களிடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். 3 மணி நேரம் நடைபெற்ற சோத னையில் கணக்கில் வராத ரூ.53 ஆயிரத்து 140-அய் பறிமுதல் செய்தனர். முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றினர்.
கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் தமிழ் நாடு-ஆந்திர எல்லைக்கான நவீன ஒருங்கிணைந்த சோதனைச்சாவடியின் ஒரு பகுதியில் உள்ள ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் சென்னை லஞ்ச ஒழிப்புத் துறை துணை காவல்துறை கண்காணிப்பாளர் ஜாய் தயாள் தலைமையில்
லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை நடத் தினர்.
இந்தநிலையில் தமிழ்நாடு முழுவதும் 14 அரசுத் துறைகளைச் சேர்ந்த 33 அலுவலகங் களில் சோதனை நடை பெற்றது.
மின்சாரம், போக்கு வரத்து, தீயணைப்பு, பதிவுத்துறை, வணிகவரி, காவல்துறை, டாஸ்மாக் உள்ளிட்ட 14 துறைகளில் என சோதனை நடந்தது.
தீபாவளியையொட்டி லஞ்சம், பரிசு பெறப்படு கிறதா என அரசு அலு வலகங்களில் நடத்தப் பட்ட சோதனையில் ரூ.18.20 லட்சம் சிக்கியதாக லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் கணக்கில் வராத ரூ.18,20,030 ரொக்கம், ரூ.6,47,180 மதிப்பிலான மதுபானங்கள் ,36 பெட்டி பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவித்தனர்.
No comments:
Post a Comment