நவம்பர் மாதத்திற்கு 1.40 கோடி தடுப்பூசிகள் ஒதுக்கீடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, November 1, 2021

நவம்பர் மாதத்திற்கு 1.40 கோடி தடுப்பூசிகள் ஒதுக்கீடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை, நவ.1 தடுப்பூசி செலுத் துவதில் தமிழ்நாடு சிறப்பாக செயல் படுவதால், நவம்பர் மாதத்திற்கு ஒன்றிய அரசு சார்பில் 1.40 கோடி கரோனா தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடுஅரசு வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட் டுள்ளதாவது:-

மாநிலம் முழுவதும் ஏற்கனவே 6 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு, 30.10.2021 அன்று 7ஆவது மெகா கரோனா தடுப்பூசி முகாம் மாநிலம் முழுவதும் நடை பெற்றது. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப் பிரமணியன் அடையாறு மண்டலம் கஸ்தூரிபாய் நகர் குடியிருப்பு பகுதியில் நடைபெற்ற 7ஆவது மெகா தடுப்பூசி சிறப்பு முகாமினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதனைத்தொடர்ந்து, அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

30.10.2021 வரை சுமார் 50 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை கோ வாக்சின் 2ஆவது தவணை தடுப்பூசி செலுத்த வேண்டிய நபர்கள் 13 லட்சம் பேர் உள்ள நிலையில், 3 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே கையிருப்பில் உள்ளது.

முதலமைச்சரின் ஆலோசனையின்படி, ஒன்றிய அரசிடம் துறை செயலாளருடன் நான் நேரடியாக சென்று 10 லட்சம் கோவாக்சின் தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யும்படி கேட்டுக்கொண்டேன். அதனடிப் படையில்,  ஒன்றிய அரசின் சார்பில் 4 லட்சம் கோவாக்சின் தடுப்பூசிகள் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.

ஒன்றிய அரசினைப் பொறுத்த வரையில், தமிழ்நாட்டிற்கு தேவை யான கரோனா தடுப்பூசிகளை தொடர்ந்து வழங்கி வருகிறது. அதன்படி செப்டம்பர் மாதத்தில் 1.04 கோடி கோவிட் தடுப்பூசிகள் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் தமிழ்நாடு அரசின் சிறப்பான செயல்பாட்டினால் மேலும் அந்த மாதத்தில் 43 லட்சம் கோவிட் தடுப்பூசிகளை கூடுதலாக வழங்கியது.

இதேபோன்று அக்டோபர் மாதத்தில் 1.22 கோடி ஒதுக்கீடு செய்தது அந்த தடுப்பூசிகளையும் நம்முடைய அரசு முழுமையாக பயன்படுத்தியதால் கூடுதலாக 3 லட்சம் தடுப்பூசிகள் அக்டோபர் மாதத்தில் வழங்கப்பட்டது.

இவ்வாறு செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதத்தில்  ஒன்றிய அரசு ஒதுக்கிய தடுப்பூசிகளை முழுவதும் சிறப்பாக பயன்படுத்தி செயல்பட்ட காரணத்திற்காகவும், முதல்-அமைச் சரின் கோரிக்கையை ஏற்றும் நவம்பர் மாதத்தில் 1.40 கோடி தடுப் பூசிகளை ஒன்றிய அரசு ஒதுக்கி யுள்ளது.

நவம்பர் மாத இறுதிக்குள் 100 சதவீதம் முதல் தவணைத் தடுப் பூசியும், 50 சதவீதத்திற்கு மேல் இரண்டாம் தவணைத் தடுப்பூசியும் செலுத்திய முதல் மாநிலம் என்ற பெருமையை தமிழ்நாடு அடையும் வகையில் நாம் அனைவரும் செயல் பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment