இல்லம் தேடிக் கல்வித் திட்ட சிறப்பு பணிக்கு அய்.ஏ.எஸ். அதிகாரி நியமனம் - தமிழ்நாடு அரசு உத்தரவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, November 1, 2021

இல்லம் தேடிக் கல்வித் திட்ட சிறப்பு பணிக்கு அய்.ஏ.எஸ். அதிகாரி நியமனம் - தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை, நவ.1 இல்லம் தேடி கல்வி திட்ட சிறப்பு பணிக்கு அய்..எஸ். அதிகாரியை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித் துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளர் வெ.இறை யன்பு வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-  திருப்பூர் மாவட்டம் தாராபுரம் துணை ஆட்சியர் ஆனந்த் மோகன், கோவை வணிக வரிகள் இணை ஆணையராக (மாநில வரிகள்) மாற்றப்பட்டுள்ளார். கோவை வணிக வரிகள் இணை ஆணையர் (மாநில வரிகள்) அய்.எஸ்.மெர்சி ரம்யா, சென்னை வணிக வரிகள் இணை ஆணையராக (நுண்ணறிவு பிரிவு-1) மாற்றப்பட்டு உள்ளார்.

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய இணை மேலாண்மை இயக்குநர் மற்றும் திட்ட இயக்குநர் கே.இளம்பகவத், இல்லம் தேடிக்கல்வி திட்டத்தின் சிறப்பு பணி அதிகாரியாக (பள்ளிக் கல்வி ஆணையர் அலுவலகம்) மாற்றப்பட்டு உள்ளார்.

புதுக்கோட்டை துணை ஆட்சியர் எஸ்.பாலசந்தர், மின் ஆளுமை இணை இயக்குநராக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார். அவர் தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் இணை தலைமை செயல் அதிகாரியாகவும் செயல்படுவார்.

ஓசூர் துணை ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா சிப்காட் நிறுவன செயல் இயக்குநராக நியமிக்கப்பட்டு உள்ளார். ஊட்டி துணை ஆட்சியர் மோனிகா ராணா, ஊட்டி மலை பகுதி மேம்பாட்டு திட்ட இயக்கு நராக மாற்றப்பட்டார்.

நெல்லைமாவட்டம் சேரன்மகாதேவி துணை ஆட்சியர் வி.சிவகிருஷ்ணமூர்த்தி தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய இணை மேலாண்மை இயக் குநர் மற்றும் திட்ட இயக்குநராக இடமாற்றம் செய்யப்பட்டார்.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

No comments:

Post a Comment