காலநிலை மாற்ற மாநாட்டில் 2030ஆம் ஆண்டுக்குள் காடு அழிப்பை நிறுத்த 100 நாடுகளின் தலைவர்கள் உறுதி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, November 5, 2021

காலநிலை மாற்ற மாநாட்டில் 2030ஆம் ஆண்டுக்குள் காடு அழிப்பை நிறுத்த 100 நாடுகளின் தலைவர்கள் உறுதி

கிளாஸ்கோ, நவ.5- உலகின் 85% காடுகளைக் கொண்டிருக்கும் நாடு களைச் சேர்ந்த தலைவர்கள் 2030ஆம் ஆண்டுக்குள் காடழிப்பை நிறுத்தி, தலைகீழாக மாற்ற கிளாஸ்கோ மாநாட்டில் உறுதியளித்துள்ளனர். இந்த அறிவிப்பு பருவநிலை மாற்ற உச்சிமாநாட்டின் இரண்டாவது நாளில் (நவம்பர் 2)வந்திருக்கிறது. இந்த மாநாடுநிகர பூஜ்ஜியகார்பன் உமிழ்வு இலக்கை அடைவதை நோக்கமாகக் கொண்டு பிரிட்டனின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வருகிறது.

நிகர பூஜ்ஜிய கார்பன் உமிழ்வு  என்றால் என்ன?

நிகர பூஜ்ஜிய உமிழ்வு என்பது வளிமண்டலத்தில் சேர்ந்து  கொண்டிருக்கும் கார்ப்பரேட் பெரும் தொழிற்சாலைகளின் கரியமில வாயு (கார்பன் டை ஆக்சைடு) கழிவுகள் மற்றும் உலக மக்களின் அன்றாடப் பயன்பாட்டின் கழிவுகள் மூலம் உருவாகும் கார்பன் ஆகியவற்றின் அளவை அதிகரிக்காமல் இருப்பதைக் குறிக்கிறது. கார்ப்பரேட் கழிவு வாயுக்களின் உமிழ்வை முடிந்தவரை குறைத்து, எஞ்சியிருக்கும் உமிழ்வின் அளவுக்குச் சமஅளவிலான கார்ப்பரேட் கழிவு வாயுக்களை வளிமண்டலத்திலிருந்து நீக்கி சமநிலைப்படுத்துவதாகும். வீடுகள், தொழிற்சாலைகள், போக்குவரத்து என பல இடங்களில் எண்ணெய், எரிவாயு, நிலக்கரி போன்ற புதைபடிவ எரிபொருள்களை எரிக்கும்போதும் கார்பன் டை ஆக்சைடுபோன்ற  வாயுக்கள் வெளியிடப்படுகின்றன. இது சூரியனின் வெப்பத்தைப் பூமிக்குள் தக்க வைத்து புவி வெப்பமடைதலை அதிகரிக்கிறது. 2015 பாரீஸ் உடன் படிக்கையின்படி, காலநிலை மாற்றத் தின் மோசமான தாக்கங்களைத் தவிர்க்க, வெப்பநிலை உயர்வை 1.5 டிகிரி செல்சியஸுக்குக் கீழே கட்டுப் படுத்த 197 நாடுகள் ஒப்புக்கொண்டன. இந்த இலக்கை அடைய வேண்டு மெனில், நாடுகள் 2050-ஆம் ஆண்டுக் குள் கார்பன்டை ஆக்சைடு உமிழ்வை நிகர பூஜ்ஜியமாகக் குறைக்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்த நிலையில், கிளாஸ்கோவில் நடைபெற்றுவரும் காலநிலைமாற்ற மாநாட்டில் (COP26),  100க்கும் மேற் பட்ட உலகத் தலைவர்கள் காடழிப்பை நிறுத்துவதற்கு உறுதியளித்துள்ளனர். இது இந்த மாநாட்டில் செய்து கொள் ளப்பட்டிருக்கும் முதலாவது மிகப் பெரிய உடன்படிக்கையாகும். அமே சான் மழைக்காடுகள் வெட்டப்பட்ட இடங்களைக் கொண்ட பிரேசிலும் இந்த உடன்படிக்கையில் கையெ ழுத்திட்ட நாடுகளில் ஒன்று. பிரிட்டன், அமெரிக்கா, கனடா, சீனா, இந்தோ னேசியா, காங்கோ ஜனநாயகக் குடி யரசு ஆகிய நாடுகளும் இதில் கையெழுத் திட்டுள்ளன. இந்த உறுதிமொழியில் சுமார் 140 கோடி ரூபாய் பொது மற்றும் தனியார் நிதி பங்களிப்பும் அடங்கியுள் ளது. சூழல் நிபுணர்கள் இந்த நடவ டிக்கையை வரவேற்றுள்ள னர். ஆனால் 2014-ஆம் ஆண்டில் காடழிப்பை குறைப்பது தொடர்பாகச் செய்து கொள்ளப்பட்ட இதற்கு முந்தைய ஒப் பந்தம் முற்றிலும் தோல்வியடைந்துவிட் டதையும் சுட்டிக் காட்டி எச்சரித்துள்ள னர். இப்போது அளிக்கப்பட்டிருக்கும் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண் டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ள னர்.  கார்பன் டை ஆக்சைடை உமிழ் வதில்அமெரிக்கா, சீனா  மற்றும் அய் ரோப்பிய ஒன்றியத்திற்குப் பிறகு உலகிலேயே நான்காவது இடத்தில் இருக்கும் இந்தியா - 2070ஆம் ஆண்டுக் குள் நிகர பூஜ்ஜிய இலக்கை அடை வோம் என உறுதி யளித்துள்ளது. இது பொதுவான இலக்கைக் காட்டிலும் 20 ஆண்டுகள் தாமதமாகும். இந்நிலையில், உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடு களில் அடங்கும் ரஷ்யா, இந்தோனேசியா போன்ற சில நாடுகள் நிகர பூஜ்ஜிய உமிழ்வு இலக்கு குறித்து எந்த விதமான உறுதியையும் தரவில்லை.

வளிமண்டலத்திலிருந்து கார்பனை வேறு எப்படி அகற்ற முடியும்?

காடழிப்பை நிறுத்துவதுடன், கார்பனை உறிஞ்சுவதற்கு எளிதான சிறந்த வழியாகக் கருதப்படும் மரங் களை நடும் முயற்சிகளை ஒவ்வொரு நாடும் மேற்கொண்டிருக்கிறது. இருப்பினும் மரங்களை நடுவதற்குத் தேவையான இடங்கள் இருக்கின் றனவா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. மரங் களைத் தவிர, தொழில்நுட்பத்தின் மூலமாகவும் கார்பனை சேகரித்து அழிக்கலாம். கார்பன் பிடிப்பு மற்றும்  சேமிப்பு என இதைக் கூறுகிறார்கள். இது காற்றிலிருந்து கார்பனை அகற்ற இயந்திரங்களைப் பயன்படுத்தும் தொழில் நுட்பத்தை உள்ளடக்கியது. இதன் மூலம் பிடிக்கப்படும் கார்பன் டை ஆக்ஸைடு திட வடிவமாக்கப்பட்டு நிலத்தில் புதைக்கப்படும்.

இந்தத் தொழில்நுட்பங்கள் இன் னும் வளரும் நிலையில்தான் இருக் கின்றன. விலையும் மிக அதிகம். எந்த அளவுக்குப் பலன் கிடைக்கும் என்ப தும் இன்னும் நிரூபணமாகவில்லை.

No comments:

Post a Comment